செப்டம்பர் மாத ராசி பலன் 2022.. ரிஷப ராசிக்காரர்கள் தொட்டது பொன்னாகும்!..நினைத்தது நிறைவேறும்!!
சென்னை: செப்டம்பர் மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நினைத்தது நிறைவேறும் தொட்டதெல்லாம் பொன்னாகும். செப்டம்பர் மாதத்தில் சூரியன் சிம்மம், கன்னி ராசிகளில் பயணம் செய்வார். புதன் உச்சம் பெற்று கன்னி ராசியில் பயணம் செய்வார். மாத பிற்பகுதியில் சூரியனும் உச்சம் பெற்ற புதனும் இணைந்து புதாத்திய யோகத்தை தரப்போகின்றனர். ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்று விரிவாகப் பார்க்கலாம்.
செப்டம்பர் மாதம் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் ரிஷப ராசியில் செவ்வாய், சூரியன் 17ஆம் தேதி கன்னி ராசிக்கு சென்று உச்சம் பெற்ற புதனோடு இணைகிறார். சுக்கிரன் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். குரு மீன ராசியிலும் சனி பகவான் மகர ராசியிலும் வக்ரமடைந்து பயணம் செய்கின்றனர்.
கன்னி ராசியில் உச்சம் பெற்றிருக்கும் புதன் செப்டம்பர் 10 ஆம் தேதி வக்ரமடைகிறார். மாத இறுதியில் சுக்கிரன் கன்னி ராசியில் புதன், சூரியனுடன் இணைகிறார். இது புதுவித யோகத்தை தரப்போகிறது. நவகிரகங்களினால் ரிஷபம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்வதால் சாதகமான பலன்களைத் தருவார். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குரு லாப ஸ்தானத்தில் இருக்கிறார். உங்களுக்கு இப்போது பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் வேண்டாம். முயற்சி செய்யும் சிலருக்கு புது வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் எந்த மாற்றமும் இல்லை.

திருமணம், குழந்தை பாக்கியம்
புதன் உச்சம் பெற்று வக்ரமடைந்தாலும் கவலையில்லை. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி உச்சம் பெறுவதால் நினைத்த காரியம் நிறைவேறும். திருமண சுப காரியம் தொடர்பாக பேசலாம். வரன்கள் பேசி முடிக்கலாம். காதலிப்பவர்களுக்கு அற்புதமான மாதம். திருமணம் கை கூடி வரும். பெண்களுக்கு பரிசு பொருட்கள் தேடி வரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று அமர்ந்துள்ள புதன் மீது குரு பார்வை படுவதால் புத்திரபாக்கியம் கைகூடி வரும். நல்ல செய்தி தேடி வரும் மாதமாகும்.

உடல் ஆரோக்கியம்
பெண்கள் வண்டி வாகனம் வாங்கலாம். புது வீடு வாங்க முயற்சி செய்யலாம். பண்டிகை காலங்கள் வருவதால் வீடு பராமரிப்பு செய்யவும் ஏற்ற காலம். ராகு 12ஆம்இடம் கேது 6ஆம் வீட்டில் பயணம் செய்வதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடலில் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். உற்சாகம் கூடும். தைரியம் அதிகரிக்கும். மாணவர்கள் உயர்கல்விக்கு ஏற்ற மாதம். பிடித்த கல்லூரியில் நினைத்ததை படிக்கலாம்.

மன நிம்மதி அதிகரிக்கும்
பெண்களுக்கு வீட்டிலும் அலுவலகத்திலும் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும். கணவனின் அன்பு பரிபூரணமாக கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி அனுபவிப்பீர்கள். உங்களை நீங்களே அழகுப்படுத்திக்கொள்ள அதிக பொருட்களை வாங்குவீர்கள். மொத்தத்தில் செப்டம்பர் மாதம் அற்புதங்கள் நிறைந்த மாதமாக ரிஷப ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications