ஸ்ரீரங்கநாதருக்கு பிறந்த நாள் பரிசு..பட்டு வஸ்திரம் கிளி சூடிக்கொடுத்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்
திருச்சி: நம்முடைய நண்பர்கள், உறவினர்கள், மனம் கவர்ந்தவர்களுக்கு பிறந்தநாள் பரிசு அளிப்போம். அது போல சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாளும் தனது மனம் கவர்ந்த ஸ்ரீரங்கநாதருக்கு பிறந்தநாள் பரிசாக பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கல பொருட்களை ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பியுள்ளார். ஆண்டாளின் பட்டு வஸ்திரத்தை அணிந்து சித்திரை ரேவதி திருநாளில் திருத்தேரில் எழுந்தருளுவார் ஸ்ரீரங்கநாதர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி வனத்தில் அவதரித்த ஆண்டாளை தாய்க்கு தாயாக தந்தைக்கு தந்தையாக வளர்த்தவர் பெரியாழ்வார். தன்னை வணங்க வரும் பக்தர்களுக்கு ரங்கமன்னாருடன் எழுந்தருளி ஆசி தருகிறாள் ஆண்டாள். ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாளுக்கு ஆண்டு தோறும் பத்து நாட்கள் பிரம்மோற்சவ விழா ஸ்ரீவில்லிபுத்தூரில் கொண்டாடப்படும்.

ஆடிப்பூரம் நாளில் திருத்தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும். பிறந்தநாளன்று திருத்தேரில் வலம் வரும் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கநாதர் பட்டு வஸ்திரம், மங்கல பொருட்களை ஸ்ரீரங்கத்தில் இருந்து பரிசாக கொடுத்தனுப்புவார். பதிலுக்கு ஆண்டாளும் சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்த ஸ்ரீரங்கநாதருக்கு பிறந்தநாள் பரிசளிப்பார்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் ரேவதி நட்சத்திரம் திருச்சி ஸ்ரீரங்கநாதர் பிறந்த தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரங்களை அணிந்து கொண்டு ஸ்ரீரங்கநாதர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
ஸ்ரீரங்கநாதர் பிறந்த தினத்தன்று ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு நாளைய தினம் தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஆண்டாளும், ரங்கமன்னாரும் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தனர். அதை தொடர்ந்து ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் அனுவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆண்டாள் சூடிக்கொடுத்த பட்டு வஸ்திரங்கள், மாலை, கிளி ஆகியவற்றை ரமேஷ் பட்டர் மாசி வீதியில் வழியாக மேள தாளங்கள் முழங்க கொண்டு வந்தார். இதையடுத்து அதனை தக்கார் ரவிச்சந்திரன். நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் ஸ்ரீரங்கம் கொண்டு சென்றனர்.
சித்திரை திருவிழா ஸ்ரீரங்கத்தில் விருப்பன் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. விஜயநகர் பேரரசின் விருப்பன்ன உடையார் தொடங்கி வைத்ததால் இதற்கு இவ்வாறு பெயர் வந்தது. விருப்பன்ன உடையார் 17,000 பொற்காசுகளும் 52 கிராமங்களும் தானமாக கொடுத்து தொடங்கி வைத்தார் என்று கோவிலில் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

1323 ஆம் ஆண்டு முகலாயர்கள் படையெடுப்பின் போது 12000 வைஷ்ணவர்கள் ஸ்ரீரங்கத்தையும் நம்பெருமாளையும் காக்க உயிர் துறந்தனராம். நம்பெருமாள் ஸ்ரீரங்கத்திலிருந்து 1323 ஆம் ஆண்டு வெளியேறி மீண்டும் 1371 ஆம் ஆண்டு மொத்தம் 48 ஆண்டுகள் விஜயநகர மன்னர்களின் பெரும் முயற்சியால் மீண்டும் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டார்.
1371 ஆம் ஆண்டு நம் பெருமாள் மீண்டும் ஸ்ரீரங்கம் வந்தாலும் வழக்கமான உற்சவங்களை தொடங்க முடியவில்லை. முகலாய படையெடுப்பினால் கோயிலும் இராமானுஜர் செய்து வைத்த முறைகளும்,கைங்கர்யபாரர்களும் முற்றிலுமாக சிதைந்து போனது. கோவிலை மீண்டும் முழுமையாக புனரமைத்து செயல்பட வைக்க 12 வருடங்கள் ஆனது.

1383 ஆம் ஆண்டு சித்திரையில் தான் 60 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் உற்சவமாக விருப்பன் திருநாள் தொடங்கப்பட்டது. விருப்பன்ன உடையார் ஸ்ரீரங்கத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரையும் அழைத்து தங்களால் ஆன தானியங்கள், கால்நடைகள் ஆகியவற்றை ஸ்ரீரங்கநாதருக்கு அளிக்க வேண்டி இந்த சித்திரை திருநாளை 1383 ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கினார்.
அதனால் தான் இன்றைக்கும் சித்திரை தேருக்கு ஆயிரக்கணக்கான கிராமத்து மக்கள் கலந்து கொண்டு நெல், கால்நடைகள் ஆகியவற்றை கோயிலுக்கு சமர்பித்து ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு தேரோட்டம் நாளைய தினம் நடைபெற உள்ளது. திருத்தேரோட்டத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் ஏராளமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications