ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாணம் - ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தர்கள் கோலாகல தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரங்கமன்னார் திருக்கல்யாண விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர்: பங்குனி உத்திர நாளில் ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாணம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா அச்சத்தையும் மீறி ஏராளமான பக்தர்கள் இந்த தெய்வீக திருக்கல்யாண நிகழ்வினை கண்டு தரிசனம் செய்தனர்.
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று போற்றப்படும் ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் வடபத்ரசாயி பெருமாள். இது ஆண்டாள் அவதார தலமாகவும், பெரியாழ்வார் அவதார தலமாகவும் போற்றப்படுகிறது.

கண்ணனையே கணவனாக பாவித்து மாலை சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள். அந்த கண்ணனையே கணவனாகவும் அடைந்தார். இந்த நிகழ்வினை இன்றைய தலைமுறையினரும் உணர்ந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாணம் நிகழ்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்த ஆண்டு திருக்கல்யாண விழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஆண்டாள் ரங்கமன்னார் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
பங்குனி உத்திர தினமான நேற்று காலை ஆண்டாளும் ரங்கமன்னாரும் செப்புத்தேரில் வலம் வந்து அருள்பாலித்தனர்.
மாலை 3 மணிக்கு திருக்கல்யாண விழா தொடங்கியது. முறைப்படி பெண் அழைக்கும் நிகழ்ச்சி மற்றும் கன்னிகாதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு திருமஞ்சனம் முடிந்தவுடன் ஆண்டாள், ரங்கமன்னார் இரவு 7 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மாங்கல்ய கயிறு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications