நிரந்தர வேலை... கை நிறைய சம்பளம் வேண்டுமா - இந்த பரிகாரங்களை மறக்காமல் செய்யுங்கள்
நிரந்தர வருமானத்தை நிலையான வேலை வாய்ப்பை தரக்கூடிய சக்தி சூரிய பகவானுக்கு உண்டு. சூரிய பகவானை தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும்.
சென்னை: வேலை கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள், புதிய வேலை தேடுபவர்கள் தினசரி சூரிய நமஸ்காரம் செய்யவும். தொழில்காரகன், ஜீவனகாரகன் சனிபகவான் வாகனமான காகத்திற்கு தினசரியும் சாதம் வைக்க நல்லது நடக்கும் புதிய வேலை கிடைக்கும். வேலை கிடைப்பதில் இருக்கும் தடைகள் நீங்கும்.
படித்து முடித்து விட்டு வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்படுபவர்கள் தினசரி சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். நிரந்தர வருமானத்தை நிலையான வேலை வாய்ப்பை தரக்கூடிய சக்தி சூரிய பகவானுக்கு உண்டு.

சூரிய பகவானை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு நிச்சயமாக நல்ல வருமானத்தில் வேலை கிடைக்கும். தேவைக்கு ஏற்ப மாதம்தோறும் நிலையான வருமானம் கைக்கு வந்து கொண்டே இருக்கும். பணப்பற்றாக்குறை என்ற வார்த்தைக்கு இடம் இல்லை.
ஜாதகத்தில் கர்மஸ்தானம் எனப்படும் 10ஆம் வீடு தொழில் ஜீவனஸ்தானம் ஆகும். 6ஆம் வீடு என்பது நாம் செய்யும் தொழிலைக் குறிக்கும் வீடாகும். 7ஆம் வீடு என்பது வியாபாரத்தைக் குறிக்கும். 2ஆம் வீடு என்பது தனஸ்தானம் நமக்கு வேலையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை குறிக்கும். 11ஆம் வீடென்பது லாபஸ்தானம். ஆக 2, 6, 10, 11ஆம் வீடுகளைக் குறிக்கின்ற தசா, புக்தி, அந்தரத்தில் வேலை கிடைக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் 10 ஆம் இடமான ஜீவனஸ்தானத்தில் குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் இருந்தால் சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும். சனி இருந்தால் வேலை கிடைக்கவே தாமதமாகும். வேலை கிடைத்தாலும் செய்யும் வேலைக்கு ஏற்ப சம்பளம் கிடைக்காது.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வுக்கு மிகவும் காத்திருக்க வேண்டும். செவ்வாயிருப்பின் செய்யும் தொழிலில் பிரச்சனைகள், சண்டை, சச்சரவு போன்றவை இருக்கும். நல்ல வேலை கிடைக்க வேண்டும் பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, சூரிய நமஸ்காரம் செய்ய மறந்துவிடாதீர்கள்.
ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பகவான் சன்னிதிக்குச் சென்று இரண்டு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவது மேலும் சிறப்பினைத் தரும். இது தவிர சூரிய பகவானின் ஆசீர்வாதத்தை பெற இரண்டு வழிமுறைகள் உள்ளது.
வீட்டில் உள்ள பூஜை அறையில் ஞாயிற்றுக்கிழமைகளில் கொஞ்சம் கோதுமையை கீழே பரப்பி, அதன் மேல் ஒரு மண் அகல் தீபத்தை வைத்து, நெய் ஊற்றி தீபம் போட்டு சூரியபகவானை மனதார நினைத்து வணங்க வேண்டும். தொடர்ந்து 48 வாரங்கள் இப்படி செய்து வர வேண்டும்.
இந்த பரிகாரம் செய்வதன் மூலம் உங்களுக்கு இருக்கக்கூடிய பண கஷ்டம் நீங்கும். நிதிநிலைமை உயரும். நிலையான வருமானம் வரும். தீபம் முழுமையாக எரிந்து முடிந்து விட்ட பின்பு, கீழே பரப்பி வைத்திருக்கும் கோதுமையை எடுத்து பசுமாட்டிற்கு கொடுத்துவிடலாம்.
மற்றொரு பரிகாரமாக நம் வீட்டில் உள்ள கோதுமை மாவில் கொஞ்சம் எடுத்து ஒரு தட்டில் பரப்பி வலது கை மோதிர விரலால் 'ஸ்ரீம்' என்ற வார்த்தையை எழுதி அதில் ஒரு சொட்டு நெய் விட்டு, தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ள வேண்டும். சப்பாத்திக்கு மாவு பிசைவது போல். இந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து, குளத்தில் இருக்கும் மீன்களுக்கு உணவாகப் போட வேண்டும்.
இப்படி செய்தால் நமக்கு இருக்கக்கூடிய கர்ம வினைகள் எல்லாம் நீங்கி, நிரந்தர வருமானத்தை தேடித்தர வழி கிடைக்கும். ஞாயிற்று கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம். அதே போல கோதுமை தானம் கொடுக்கலாம் நல்ல வேலையும் நிரந்தர வருமானமும் கிடைக்கும்.
-
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications