மாசி அமாவாசை, கிருத்திகை எந்த நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தால் வெற்றி கிடைக்கும் தெரியுமா

அதிமுக, திமுக,தேமுதிக, பாஜக, பாமக கட்சிகள் விறுவிறுப்பாக வேட்பாளர்களை தேர்வு செய்து வரும் நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய நல்ல நாள் பார்க்க ஆரம்பித்து விட்டனர் வேட்பாளர்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஜோதிடர்களிடம் நல்ல நாட்கள் பார்க்க ஆரம்பித்து விட்டனர். மாசி அமாவாசை தொடங்கி கிருத்திகை சஷ்டி என பல நாட்கள் வேட்புமனு தாக்கல் செய்ய நல்ல நாட்கள் உள்ளன.

தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்க வேண்டுமே என்று ஒருபக்கம் யாகங்கள் நடைபெற்றுள்ளன. இந்த முறை சிட்டிங் எம்எல்ஏக்கள் எத்தனைபேருக்கு சீட் கிடைக்கும் என்று தெரியவில்லை. மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மார்ச் 19ஆம் தேதி வேட்புனு தாக்கல் செய்ய கடைசிநாளாகும். மகாசிவராத்திரிக்கு மறுநாள் தொடங்கி அமாவாசை, கிருத்திகை என பல முக்கிய நாட்கள் உள்ளன. வளர்பிறை நாட்களில்தான் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள்.

யார கல்யாணம் பண்றது தெரில.. 4 இளைஞர்களுடன் ஊரைவிட்டு ஓடிய பெண்.. குலுக்கல் முறையில் மணமகன் தேர்வு
அதிமுகவில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள். 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை வளர்பிறை சஷ்டி தினம் அன்றைய நாளில் பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

எத்தனை கட்சிகள்

எத்தனை கட்சிகள்

தமிழக ட்டசபைத்தேர்தலில் பிரதான கட்சியான அதிமுக, திமுக கூட்டணிகள் தவிர நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசன் தலைமையில் கூட்டணி, அமமுக என இப்போதைக்கு ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது. இந்த போட்டியால் சட்டசபைத் தேர்தல் யாருக்கு சாதகமாக இருக்கும், யாருடைய வாக்குகள் பிரியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

234ல் களமிறங்கும் நாம் தமிழர்

234ல் களமிறங்கும் நாம் தமிழர்

நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து விட்டார். இனி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டியதுதான் பாக்கி உள்ளது.

கூட்டணிகளுக்கு தொகுதிகள்

கூட்டணிகளுக்கு தொகுதிகள்

அதிமுக, திமுக கட்சிகளில் கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வேட்பாளர் நேர்காணல் முடிந்து வேட்பாளர்களை தேர்வு செய்து தயராக வைத்துள்ளனர். கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு
பேச்சுவார்த்தை முடிந்த உடன் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளன.

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

அதிமுகவில் முதற்கட்டமாக 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுக இன்னும் சில தினங்களில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும். காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் பட்டியலும் தயாராகவே உள்ளது. டெல்லி மேலிட தலைமை டிக் அடித்த பின்னர் இரண்டு கட்சியினரும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவார்கள்.

வேட்புமனு தாக்கல் செய்ய நல்ல நாள்

வேட்புமனு தாக்கல் செய்ய நல்ல நாள்

மார்ச் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை தேய்பிறை சதுர்த்தசி பகல் 03 மணிவரை உள்ளது. அதன்பின் அமாவாசை தொடங்குகிறது. மறுநாள் 13ஆம் தேதி சனிக்கிழமை அமாவாசை நாளாகும். சிலர் அமாவாசையில் நல்ல காரியம் செய்வார்கள். சனிக்கிழமை அமாவாசை சிறப்பான நாள் அன்று விடுமுறை தினம் இல்லை என்றால் முன்னோர்கள் ஆசியுடன் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

பஞ்சமி நல்ல நாள்

பஞ்சமி நல்ல நாள்

மார்ச் 15ஆம் தேதி திங்கட்கிழமை வளர்பிறை துவிதியை திதி அன்றைக்கு முகூர்த்த நாள் அந்த நாளில் பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. அதிமுகவினர் பெரும்பாலும் பஞ்சமி நாளில்தான் வேட்புமனு தாக்கல் செய்வார்கள். மார்ச் 17 புதன்கிழமை வளர்பிறை சதுர்த்தி நாள், மார்ச் 18 வளர்பிறை பஞ்சமி கிருத்திகை தினம் அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்ய நல்ல நாள் என்பதால் அதிக அளவில் வேட்பாளர்கள் அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.

சஷ்டி, கிருத்திகை

சஷ்டி, கிருத்திகை

தமிழகத்தில் அரசியல் கட்சியினர் இம்முறை முருகனையும் வேலையும் கையில் ஏந்த ஆரம்பித்து விட்டனர்.வேல் அரசியல் செய்யும் பாஜகவினர் முருகன் துணையோடு மார்ச் 18ஆம் தேதி வியாழக்கிழமை கிருத்திகையில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை சஷ்டி திதியில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றாலும் அன்றைக்கு கரிநாளாக இருக்கிறது.

வேட்புமனுவிற்கு செலவு

வேட்புமனுவிற்கு செலவு

வேட்புமனு தாக்கல் செய்யும் நாட்களில் பல வேட்பாளர்கள் கூட்டத்தை கூட்டி மாஸ் காட்டுவார்கள். பல ஆயிரம் தொண்டர்களை அழைத்து வருவார்கள். இந்த ஆண்டு கொரோனா காலமாக இருப்பதால் தேர்தல் ஆணையம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் வேட்புனு தாக்கல் அமைதியாகவே நடந்து முடிந்து விடும் என்று எதிர்பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+