சுபகிருது தமிழ் புத்தாண்டில் ராஜ யோகம் தேடி வரப்போகும் ராசிக்காரர்கள் நீங்கள்தான்!
சுபகிருது தமிழ் புது வருடம் பிறக்கப் போகிறது. இந்த தமிழ் புத்தாண்டில் சில ராசிக்காரர்கள் கோடீஸ்வர யோகத்தைப் பெறப்போகின்றனர். மேஷம், ரிஷபம், மிதுன, கடக ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலா
சென்னை: தமிழ் புத்தாண்டு சுபகிருது புது வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்க உள்ளது. தமிழ் புத்தாண்டு சுபகிருது வருடம் பிறக்கப்போகிறது. 60 தமிழ் வருடங்களில் சுபகிருது வருடம் 36வது ஆண்டாகும். புத்தாண்டில் நவ கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
சுபகிருது என்றாலே நற்செய்கை என்று பொருள். அதிகம் நன்மைகள் நிறைந்த சுபகிருது தமிழ் புத்தாண்டில் ஆண்டு கோள்களில் சுப கிரகமான குரு பகவான் மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்ய உள்ளார். சனிபகவான் மகரம், கும்ப ராசியிலும் பயணம் செய்வார். ராகு மேஷ ராசியிலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார்கள். சனிபகவான் சித்திரை மாதம் 16ஆம் தேதி ஏப்ரல் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 7.54 மணிக்கு அதிசாரமாக மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். ஆனி 28ஆம் தேதி ஜூலை 27ஆம் தேதியன்று செவ்வாய்க்கிழமை வக்ர கதியில் மீண்டும் மகர ராசிக்கு திரும்புகிறார்.
திருக்கணித பஞ்சாங்கப்படி 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி நேர்கதியில் சனிபகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மாத கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ஏப்ரல் 14ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் தனது பயணத்தை தொடங்க, கூடவே, புதன், ராகு இணைந்திருக்கின்றனர். சிம்ம ராசியில் சந்திரன், செவ்வாய் சுக்கிரன் கும்ப ராசியிலும் பயணம் செய்கின்றனர். இந்த கிரகங்களின் பயணத்தால் என்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
சுப கிருது புத்தாண்டில் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் விரைய ஸ்தானமான 12ஆவது வீட்டில் பயணம் செய்கிறார். சனிபகவான் தொழில் ஸ்தானமான 10ஆவது வீட்டிலும் 11வது வீடான லாப ஸ்தானத்திலும் பயணம் செய்கிறார். ஜென்ம ராசியில் ராகு, களத்திர ஸ்தானமான ஏழாவது வீட்டில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன. உச்சம் பெற்ற சூரியனின் பயணம் ராசியில் உள்ளது. புதன் சஞ்சாரம் ஜென்ம ராசியில் ஆரம்பிக்கிறது. ராசி நாதன் செவ்வாய் சுக்கிரன் உடன் இணைந்து லாப ஸ்தானத்தில் பயணம் செய்வார்.
குருவின் பயணத்தால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் நோய்கள் நீங்கும். வீடு வாங்க, தொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். அரசு வேலைக்கு தேர்வு எழுத சரியான நேரம் வெற்றிகள் கிடைக்கும். மருத்துவ செலவுகளும் வரும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். வருட இறுதியில் சனிபகவான் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. இந்த ஆண்டு மறக்காமல் தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்யவும். மாதந்தோறும் அமாவாசை பவுர்ணமி நாட்களில் குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகம் நடைபெறும்.

ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு குரு லாப வீட்டிலும் சனி பத்தாம் வீட்டிலும் ராகு விரைய ஸ்தானத்திலும், கேது ஆறாம் வீட்டிலும் பயணம் செய்யப்போகிறார். குருவின் பயணத்தால் நிறைய லாபங்கள் கிடைக்கப்போகிறது. புதிய தொழில் தொடங்கலாம். குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது படுவதால் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும்.லாபம் கை கூடி வரும். புதிய தொழில் தொடங்கவும் நல்ல நேரம் கை கூடி வந்துள்ளது. புது வீடு கட்டலாம், வீடு கட்டி முடித்தவர்கள் கிரகப்பிரவேசம் செய்யலாம். திருமணம் ஆகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கை கூடி வரும். சிலருக்கு திருமணம் பேசி முடிவு செய்யலாம். நீண்ட காலமாக பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். வெளிநாடு வேலை வாய்ப்பு தேடி வரும். சனிபகவான் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் இருந்து பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திற்கு வருகிறார். புதிய வேலை கிடைக்கும். மாணவ மாணவிகளுக்கு இது நல்ல காலமாக உள்ளது. படிப்பில் முன்னேற்றம் ஏற்படும் தேர்வில் வெற்றி பெற்று நல்ல மதிப்பெண் பெறலாம். சிலருக்கு திடீர் திருமணங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. வண்டி வாகனங்களில் போகும் போது கவனமும் நிதானமும் தேவைப்படும். எதையும் பேசும் முன்பு யோசித்து பேசுவது நல்லது.

மிதுனம்
புதன்பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, சுபகிருது ஆண்டில் உங்கள் ராசிநாதன் லாப ஸ்தானத்தில் ராகு உடன் பயணம் செய்யும் போது பிறக்கிறது. கேது ஐந்தாம் வீட்டிலும் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் நிறைய லாபங்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பாராத அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். ஆண்டு முழுவதும் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் பயணம் செய்கிறார்.
குரு பயணம் செய்யும் இடம் ஜீவன ஸ்தானமாகும் செய்யும் உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் சில தடைகள் ஏற்படும். குருவின் பார்வை குடும்ப வாக்கு ஸ்தானத்தை பார்வையிடுகிறார். நான்காம் வீடான சுக ஸ்தானம் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானங்களின் மீது குருவின் பார்வை படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை நெருப்பு வாகனம் போன்றவைகளில் கவனத்தோடும் விழிப்புணர்வோடும் செல்வது அவசியம். சனி பகவான் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார் அஷ்டம சனி காலம் என்பதால் வம்பு வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. சனிபகவான் சித்திரை 16ஆம் தேதி ஏப்ரல் 29ஆம் தேதி அதிசாரமாக கும்ப ராசிக்கு செல்கிறார் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும். அமாவாசை திதியில் சிவபெருமானுக்கு பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து அம்மனுக்கு பால் பாயசம் நைவேத்தியம் செய்து வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

கடகம்
கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம், நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ராகு பத்தாம் வீட்டிலும் கேது நான்காம் வீட்டிலும் பயணம் செய்வார்கள். இந்த பயணத்தால் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். இந்த ஆண்டு குரு 9ஆம் இடத்தில் இருப்பது அற்புதமான பலன்களை தரப்போகிறது. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நன்மைகள் அதிகரிக்கும் பாக்கிய ஸ்தானத்தில் உள்ள குரு நிறைய நன்மைகளை செய்யப்போகிறார். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சனிபகவான் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கண்டச்சனி காலம் என்பதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமும் நிதானமும் தேவை. புதிய வியாபாரத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் நிதி நெருக்கடிகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும். சனிபகவான் வரும் சித்திரை மாதம் அதிசாரமாக கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார் எட்டாமிடம் அஷ்டமத்து சனி காலம் என்பதால் நீங்கள் கவனமாகவும் நிதானமாகவும் அடி எடுத்து வைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அகலக்கால் வைக்க வேண்டாம். அதிக கடன் பிரச்சினையில் சிக்க நேரிடும். தேய்பிறை அஷ்டமி திதிகளில் கால பைரவருக்கு பாலபிஷேகம் சந்தன அபிஷேகம் செய்து வணங்குவது நல்லது. செவ்வரளி மலர் சாற்றி கால பைரவரை வணங்க கவலைகளும் கஷ்டங்களும் நீங்கும். இரட்டிப்பு மகிழ்ச்சியில் சந்தோசமும் நிறைந்த வருடமாக உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications