Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாய் மாமன் உறவு.. சந்தோஷமா? சங்கடமா? உங்க ஜாதகத்தில் எப்படி இருக்கு? - ஜோதிடம் சொல்லும் ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எத்தனையோ உறவுகள் இருந்தாலும் எல்லாவற்றையும் விட சிறந்தது தாய்மாமன் உறவு. தாய் தந்தையின் உறவு என்பது வேறு வகையானது. ஆனால் தாய் மாமன் உறவு என்பது அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். தாய் மாமன் உறவு என்பது ஆழமான உறவாகும். அது குழந்தையின் தாயை பொறுத்தே அமையும். ஜோதிடத்திற்கும் தாய்மாமன் எனும் உறவிற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இரண்டிற்குமே காரகர் புதன்தான் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதுமட்டுமில்லை. புதனின் அதிதேவதையும் தாய்மாமனை குறிக்கும் தெய்வமும் விஷ்ணுதான்

புதனின் முக்கியக் காரகமாக தாய் மாமன் உறவு வருகிறது. புத பகவானுக்கு "மாதுல காரகன்" என்ற சிறப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குழந்தை பிறந்த உடன் முதலில் தெரிவிக்க வேண்டிய நபர்களில் தாய்மாமனும் ஒருவர். அதனால் புதிய வரவான குழந்தையின், பச்சிளம் பருவத்தில் இருந்தே தாய்மாமன் உறவு தொடங்கி விடுகிறது.

குழந்தையின் தாய்மாமன் வேலைக்காக வெளியூருக்கு சென்று விட்டாலும், குழந்தையை பார்க்க ஒரு சில நாட்களில் வரவேண்டும் என பெரியோர்கள் அறிவுறுத்துவார்கள். சகோதரி தனக்கு கொடுத்த அன்பு, மரியாதையை அந்த குழந்தை மீது தனது கடைசி காலம் வரை தாய்மாமன் வைத்திருப்பான்.

தாய் மாமன் சொந்தம்

தாய் மாமன் சொந்தம்

ஒரு தொட்டிலில் உருவாகும் இந்த பந்தம், அந்த குழந்தையின் காலம் வரை நீடிக்க வேண்டும் என்பதே குடும்பத்தினரின் விருப்பமாகும். குழந்தைக்கு முதல் முடி குலதெய்வம் சன்னதியில் இரக்கவேண்டும். மடியில உட்காரவெக்க குழந்தையோட மாமா வந்தாச்சா.. என்று கூப்பிடுவது தொடங்கி மாலை போடனும் தாய்மாமன் எங்கே என்பது வரை கேட்பது தாய்மாமனைத்தான்.

தாய் மாமன் உறவு

தாய் மாமன் உறவு

தாய் மாமன் உறவு பற்றி கிழக்குச் சீமையிலே படத்தில் விஜயகுமார் பேசுவதை இன்றைய இளைய தலைமுறையினர் கட்டாயம் கேட்க வேண்டும். காரணம் இன்றைக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக்கொள்வதால் தாய் மாமன் உறவின் சிறப்புகளை பலரும் அறிந்திருக்க நியாயமில்லை. இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் இருபது வருடங்கள் கழித்து "தாய் மாமன்" என்பது வழக்கொழிந்த வார்த்தையாகி அகராதியில் இருந்தே நீக்கப்பட்டுவிடும் என்பதுதான் உண்மை.

 ஜோதிடத்தில் தாய்மாமன்

ஜோதிடத்தில் தாய்மாமன்

ஜோதிடத்திற்கும் தாய்மாமன் எனும் உறவிற்க்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இரண்டிற்குமே காரகர் புதன்தான் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதுமட்டுமிலை. புதனின் அதிதேவதையும் தாய்மாமனை குறிக்கும் தெய்வமும் விஷ்ணுதான் என்கிறது. "அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்" எனும் பொருள் பொதிந்த பாடலில் காலபுருஷ முதல் ராசியான செவ்வாயை குறிக்கும் முருகனுக்கு அதன் ஆறாம் பாவம் விஷ்ணுவை குறிக்கும் புதன் வீடு எனும் உண்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

 புதன் பகவான் நிலை எப்படி

புதன் பகவான் நிலை எப்படி

ஒரு ஜாதகத்தில் தாய்மாமனை குறிக்கும் பாவம் ஆறாம் பாவமாகும். ஆறாம் பாவகத்தின் நிலையைக்கொண்டு தாய்மாமனை பற்றியும் அவரின் ஆதரவை பற்றியும் அறிந்துக்கொள்ள இயலும் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். சகோதரியின் குழந்தைக்கு எந்த பிரச்சனை என்றாலும் தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என நினைத்து குழந்தையின் தாய்மாமா ஓடி ஓடி உதவி செய்வதால்தான் ஒருவருக்கு ஆறாம்பாவம் வலுக்க கூடாது என்றார்கள் போலும். ஒரு ஜாதகத்தில் புதனின் நிலையை வைத்து ஒருவரின் தாய்மாமனின் தன்மையை அறியமுடியும்.

கம்பீரமான தாய் மாமன்

கம்பீரமான தாய் மாமன்

ஒருவரின் ஜாதகத்தில் புதன் சுபத்துவம் பெற்று ஆட்சி உச்சம் பெற்று நின்றால் மற்றும் சுய சாரத்தில் நின்றால் ஒருவருக்கு தாய்மாமனால் அனுகூலம் எப்போதும் உண்டு. சூரியனுடன் சேர்ந்து நிற்கும் புதன் அரசாங்க செல்வாக்குள்ள மற்றும் அரசியல் தொடர்புள்ள கம்பீரமான தோற்றமுள்ள தாய்மாமனால் அனுகூலம் ஏற்படும். தாய்மாமன் கல்வியில் சிறந்து விளங்குவார். சந்திரனுடன் சேர்க்கை பெற்ற புதனால் அழகிய கலா ரசனையுடன் கூடிய தாய் மாமன் அமைவார். என்றாலும் வளர்பிறை சந்திரன் சேர்க்கை மாமனால் அனுகூலமும் தேய்பிறை சந்திரன் சேர்க்கை மாமனால் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். புதன் 6/8/12 தொடர்பு பெற்று நின்றால் தாய்மாமனுடன் விரோதம் ஏற்பட்டு பிரிந்து நிற்க வேண்டியிருக்கும்.

அறிவாளியான தாய் மாமன்

அறிவாளியான தாய் மாமன்

செவ்வாயுடன் சேர்க்கை பெற்ற புதன் வீரமுள்ள தாய்மாமனை குறிக்கும் என்றாலும் தாய்மாமன் ஆதரவு அவ்வளவு சுகமாக இருக்காது. தாய்மாமனின் மகனை மணப்பதை குறிக்கும். குருவுடன் சேர்க்கை பெற்ற புதன் ஆன்மீகம் மற்றும் சிறந்த அறிவாளியான தாய்மாமனை குறிக்கும். புதன் வியாபார காரகன் என்பதாலும் குரு தன காரகன் என்பதாலும் மாமன் செல்வ செழிப்போடு விளங்குவார். ஆனால் உதவி செய்துவிட்டு சொல்லிக் காண்பிக்கும் தன்மை கொண்டவராக இருப்பார். சுக்கிரனோடு சேர்க்கை பெற்ற புதன் சிறப்பான அம்சமாகும். தாய்மாமன் அழகானவராகவும் வசதிவாய்போடு இருப்பதையும் குறிக்கும். சனியோடு சேர்க்கை பெற்ற புதன் தாய்மாமனின் வறுமை நிலையையும் கல்வியற்ற தன்மையையும் தாய்மாமன் மூத்தவர் என்பதையும் குறிக்கும். அந்த தாய்மாமன் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.

பாண்டவ தூத பெருமாள்

பாண்டவ தூத பெருமாள்

பெண்களுக்கு தங்கள் சகோதரருடன் பிரச்சினை ஏற்பட்டாலோ, உங்கள் குழந்தைகளுக்கு தாய்மாமனால் அனுகூலம் இல்லை என்றாலோ அதற்கு பரிகாரம் உள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள புதனின் அதிதேவதையான விஷ்ணு ஸ்வருபமான கிருஷ்ணரே பாண்டவ தூத பெருமாளாக கோயில் கொண்டுள்ளார். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நீங்க இங்கு வந்து ஸ்ரீ கிருஷ்ண பகவானை வணங்கினால் தாய் மாமனால் ஏற்படும் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+