பொங்கல் போல செல்வம் பொங்க..அறுவடை திருநாளில் சூரியனுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்
மதுரை: தை பொங்கல் திருநாள் தமிழ்நாட்டில் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளில் நாம் பயிர்கள் செழிக்க உழவு செழிக்க உதவிய இயற்கைக்கு நன்றி கூற வேண்டும். மழைக்குக் காரணமான இந்திரன், பயிர் நன்றாக வளர்ந்து தானியங்கள் அதிகமாக விளைவதற்கு காரணமான சூரியன், இந்திரனுடைய சகோதரன் உபேந்திரன் ஆகியோர்களுக்கு நன்றி கூறும் விதமாகவும் பொங்கல் பண்டிகை காலம் காலமாகக் கொண்டாடப்படுகிறது. இயற்கைக்கு நன்றி சொல்லி வணங்கினால் பொங்கல் பொங்குவது போல வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.
உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின் முடிவும் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. தை முதல் நாளில் சூரிய பகவான் மகர ராசியில் தனது பயணத்தை தொடங்குகிறார். மகர மாதமாகவும் தை மாதம் அழைக்கப்படுகிறது.

உறவினர்களுடன் கூடி மகிழ்ந்து ஒன்றாக அமர்ந்து உண்டு ஒற்றுமையாக கொண்டாடுவதே பண்டிகையின் சிறப்பாகும். இந்தியாவில் எத்தனையோ பண்டிகைகள் கொண்டாடினாலும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் நான்கு நாட்கள் களைகட்டும். வீடுகளை சுத்தம் செய்து வெள்ளையடித்து அலங்காரம் செய்து, மாவிலை தோரணங்கள் கட்டி,கணுப்பிள்ளை, வேப்பிலை, கம்பு, ஆவாரம்பூ போன்றவைகளை சேர்த்து காப்பு கட்டுவார்கள்.
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு உத்தராயணம் என்றும் தெற்கு நோக்கிய நகர்வு தட்சிணாயணம் என்று அழைக்கப்படுகிறது. தை முதல்நாள் உத்தரயணத்தின் துவக்கம் ஆனி மாதம் முடியும் வரை உத்தராயணம். ஆடி மாதம் முதல் மார்கழி முடிய தட்சிணாயணம். உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின் முடிவும் தை பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
ஜீவராசிகளின் வாழ்வாதத்திற்குத் தேவையான ஜீவனை தரும் சூரியனை போற்றும் விதமாகவும், விளைச்சலுக்கும், உழவுத் தொழிலுக்குத் தேவையான உதவிகளை செய்யும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் அனைத்துக்கும் மரியாதை செய்யும் விதமாக, நன்றி தெரிவிக்கும் விதமாகவும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை நாளில் வீட்டின் நடு கூடத்திலோ, வெளியிலோ அழகான கோலமிட்டு புது அடுப்பு வைத்து புது மண்பானையை அலங்கரித்து கோலமிட்டு கழுத்தில் இஞ்சி கொத்து மஞ்சள் கொத்து கட்டி அடுப்பு மூட்டி புதுப்பானையில் புது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய் போட்டு சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். பானையில் பொங்கல் பொங்கி வரும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாக குரல் எழுப்பி நம் வளர்ச்சிக்கு காரணமான இயற்கைக்கும்,இந்திரன், சூரியன், உபேந்திரனுக்கு படையல் போட்டு செங்கரும்பு வைத்து அலங்கரித்து நன்றி கூறி வழிபடுவார்கள்.
இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானுக்கு உகந்த நாளில் பொங்கல் பண்டிகை வருவது சிறப்பு. காலை 8.00 மணி முதல் 10 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யவும் நல்ல நேரமாகும்.
ஜனவரி16ஆம் தேதி திங்கட்கிழமை கால்நடைகளை குளிப்பாட்டி அலங்கரித்து மாட்டு தொழுவத்தையும் அலங்கரித்து பொங்கல் வைக்கலாம். மாட்டுப்பொங்கல் நாளில் காலை 8 மணி முதல் 09 மணிவரை பொங்கல் வைத்து வழிபடலாம். மாலை 05 மணி முதல் 6 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம்.
காணும் பொங்கல் நாளில் வீட்டில் சமைத்து எடுத்துக்கொண்டு பொது இடங்களுக்கு எடுத்துக்கொண்டு சென்று உறவினர்களுடன் கூடி மகிழ்ச்சியோடு பகிர்ந்து உண்பார்கள். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை இந்தாண்டு பலரும் கோலாகலமாக கொண்டாட உற்சாகத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications