கொரோனா அதிகரிப்பு : தஞ்சை பெரியகோவில், நாமக்கல் நரசிம்மர், கங்கை கொண்ட சோழபுரம் கோவில்கள் மூடல்
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயமும் மூடப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தஞ்சாவூர்: கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கை காரணமாக உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற நாமக்கல் நரசிம்மர் மற்றும் ரங்கநாதர் கோவில் சன்னதிகளும் மூடப்பட்டுள்ளன.
Recommended Video
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் கொரனோ பரவல் காரணமாக இன்று அதிகாலை முதல் மூடப்பட்டது.

தஞ்சை பெரிய கோவிலின் பிரதான நுழைவாயிலான மராட்டா நுழைவாயில் முன்பு இரும்புக் கதவுகள் அடைக்கப்பட்டு பூட்டு போடப்பட்டுள்ளது பக்தர்கள் எவருக்கும் உள்ளே அனுமதி வழங்கவில்லை இந்நிலையில் கோவில் உள்ளே இருக்கும் சுவாமிகளுக்கு மட்டும் நாள்தோறும் நடக்கும் பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வழக்கம் போல கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் ஏமாற்றமடைந்தனர். அவகாசங்கள் கொடுத்து தஞ்சை பெரிய கோயிலை மத்திய தொல்லியல் துறை பூட்டி இருக்கலாம் எனவும் தற்போது நாங்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புவதாகவும் சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போல கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம், நாமக்கல் நரசிம்மர் மற்றும் ரங்கநாதர் கோவில் சன்னதிகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற நாமக்கல் நரசிம்மர் மற்றும் ரங்கநாதர் கோவில் சன்னதிகளும் இன்று முதல் மூடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்ட உடன் 2020 மார்ச் மாதம் முதல் 2020 நவம்பர் வரைக்கும் பல கோவில்கள் மூடப்பட்டன. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தொல்லியில் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், அருட்காட்சியங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications