தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் மஹா சண்டீ யாகம் - 64 பைரவி, பைரவர் ஹோமம்
தென்னிந்தியா புரோகிதர் சங்கம் மற்றும் தன்வந்திரி பீடம் இணைந்து உலக நலன் கருதியும், இயற்கை வளம் வேண்டியும் நிகழ்த்திய மாபெரும் மங்கள சண்டி யாகம் 64 பைரவி – பைரவர் யாகம் நடத்தினர்.
வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தென்னிந்தியா புரோகிதர் சங்கம் மற்றும் தன்வந்திரி பீடம் இணைந்து உலக நலன் கருதியும், இயற்கை வளம் வேண்டியும் நடத்திய மங்கள சண்டீ யாகம், 64 பைரவி பைரவர் யாகத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் இந்த யாகம் நடைபெற்றது.

05.06.2018 செவ்வாய்க் கிழமை காலை 5.00 மணி முதல் குரு வந்தனம், விக்னேஸ்வர பூஜை, மஹாஸங்கல்பம், புண்யாகவசனம், ஏகபஞ்சாஸத் மஹா கணபதி ஹோமம், நவக்ரஹ ஸூக்த ஹோமம், விசேஷ கோ பூஜை, மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. மாலை 5.00 மணி முதல் வேத பாராயணம், கலச பூஜைகள், சண்டி நவாக்ஷரி த்ரிசதி அர்ச்சனை, சதுசஷ்டி யோகினி பைரவ பலி பூஜைகள் நடைபெற்றது.
06.06.2018 புதன்கிழமை காலை 6.00 மணி முதல் வேத பாராயணம், நவாக்க்ஷரி ஜெபம், சண்டி ஹோமம் துவக்கம்,பாலா பூஜை, ஸுவாஸினி பூஜை, தம்பதி பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று, நன்பகல் 2.00 மணிக்கு சண்டிஹோமமஹா பூர்ணாஹுதி, மஹாதீபாராதனை உபசார பூஜைகள் நடைபெற்றது.
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை 4.30 மணி முதல் 64 பைரவி-பைரவர் யாகம், அஷ்ட பைரவருடன் சொர்ண கால பைரவர் மூல மந்திர ஹோமம், மஹா பூர்ணாஹுதி, மற்றும் கலசாபிஷேகம் நடைபெற்றது.
இந்த யாகத்தில் பொள்ளாச்சி ஸ்வாமி ஜிதேஷ் சுப்ரமண்யம், வன வராகீ உபாசகர் பாலமுருகன், போரூர் பிரத்யங்கிரா உபாசகர் டாக்டர் அண்ணாமலை ஸ்வாமிகள், காஞ்சீபுரம் சஞ்சீவி ராஜா ஸ்வாமிகள், தென்னிந்திய புரோகித சங்கம் தலைவர் வி.சீதாராமன், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெங்களூர் தொழிலதிபர் எம்.ஆர்.சீ. குடும்பத்தினர், சிரஞ்சீவீ சென்னை,அருள்மொழி சென்னை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications