ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சொர்க்கவாசல் திறப்பு - லட்ச ஜப மகா சுதர்சன ஹோமம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாளை 18.12.2018 செவ்வாய்கிழமை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு லட்ச ஜப மஹா ஸுதர்சன ஹோமம் நடைபெறுகிறது.
வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பு நிகழ்ச்சியுடன் லட்ச ஜப மஹா சுதர்சன யாகம் நடைபெறுகிறது. ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி அதிகாலை காலை 5.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை யாகம் நடைபெற உள்ளது.
சுதர்சனத்தின் சக்தி
இது பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் மிகச்சக்தி வாய்ந்த ஆயுதம். பல்லாயிரக்கணக்கான சூரிய ஒளியின் தேஜஸ் கொண்டது. இதன் வெளி வட்டம் கூர்மையான பற்கள் கொண்டது மிகவும் வேகமாகச் சுழன்று எதிரிகளை வெட்டி வீழ்த்தும். தன் வேலை முடிந்தவுடன் மீண்டும் கிளம்பிய இடத்துக்கே திரும்பி வரும் சக்தி படைத்தது.

சுதர்சன ஹோமம் பலன்கள்
ஸுதர்சன ஹோமம் செய்யும்போது ஸுதர்சன சக்ரத்தின் தேவதை, ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீதன்வந்திரி என்று பல்வேறு தேவதைகள் பூஜிக்கப் படுகின்றனர். இதனால் நமக்குக் கிடைக்கும் பயன்கள் ஏராளம். நாம் வேண்டிக்கொள்ளும் நல்ல விஷயங்கள் நிறைவேறும், ஐஸ்வர்யம் தனம், செல்வம் அபிவிருத்தி, ஏழ்மை விலகுதல், வியாதி, ரோக நிவாரணம், மன நிம்மதி, எடுத்த கார்யத்தில் வெற்றி, வீடு நாடு நலம் பெறும், ஆபத்து நீங்கும், பசு விருத்தி பெறும், எதிரிகள் தொல்லை விலகும், கோபம் குறையும், சுக பிரசவம் ஆகும், ஆகிய பலன்கள் கிடைக்கின்றன.
நமது முயற்சிக்கு ஏற்படும் தடங்கல்கள் நீங்கும், தொல்லைகள் நீங்கும், எதிரிகளால் நமக்கு ஏற்படும் கஷ்டங்கள் விலகும். சுதர்சன சக்ரமும், அதன் தேவதையும், அதன் எஜமானன் ஸ்ரீமன்நாராயணனும், அபரிமிதமான் சக்தி வாய்ந்தவர்கள். இது ஒரு மிகுந்த சக்தி வாய்ந்த ஹோமம். இந்த மந்திரங்களில் பீஜாக்ஷரங்கள் அடங்கியுள்ளன.
பல்வேறு மகிமை வாய்ந்த ஸுதர்சன சக்கிரத்தை வணங்கிச் செய்யப்படும் இந்த ஹோமத்தில் முடிந்தவரை எல்லோரும் கலந்து கொண்டு எல்லா நன்மைகளையும் பெறலாம். தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை, வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications