அம்பானி முதல் அதானி வரை.. நம் ஊரு கோடீஸ்வரர்கள் எந்த ராசி தெரியுமா! இந்த ஒரு ராசிக்கு ஜாக்பாட் தான்
டெல்லி: நமது நாட்டில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அம்பானி, அதானி தொடங்கி பலரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். சரி இந்த கோடீஸ்வரர்கள் லிஸ்டில் எந்த ராசிக்காரர்கள் அதிகம் இருக்கிறார்கள்.. யாருடைய சொத்து மதிப்பு அதிகமாக உயர்ந்துள்ளன என்பது குறித்த தகவல்களை நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வருகிறது. சமீபத்திய ஹுருன் இந்தியா என்ற அமைப்பு நமது நாட்டில் உள்ள பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் பல சுவாரசிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக நமது ஊரில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நகரமாக மும்பை இருக்கிறது. விரைவில் ஆசியாவிலேயே அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நகரம் என்ற சாதனையை மும்பை படைக்கும் என்று சமீபத்தில் வெளியான ஹுருன் இந்தியா லிஸ்டில் கூட கூறப்பட்டு இருந்தது.
எந்த ராசி: இதற்கிடையே எந்த ராசிக்காரர்கள் இந்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.. எந்த ராசிக்காரர்களுக்கு இந்தாண்டு அவ்வளவு சிறப்பான ஒன்றாக இல்லை என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
டாப் ராசி எது: கோடீஸ்வரர்களில் கடகம், மிதுனம் மற்றும் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்குத் தான் இந்தாண்டு மிகச் சிறப்பாக இருந்துள்ளது. இந்த மூன்று ராசியில் பிறந்தவர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாகக் கடக ராசியில் பிறந்தவர்களின் சொத்து மதிப்பும் அதிகபட்சமாக 84% வரை அதிகரித்துள்ளது. அவர்களைத் தொடர்ந்து மிதுன ராசியில் பிறந்தவர்களின் சொத்து மதிப்பு 77 சதவீதமும் சிம்ம ராசியில் பிறந்தவர்களின் சொத்து மதிப்பு 68 சதவீதமும் உயர்ந்துள்ளது.
தொடர்ந்து தனுசு ராசிக்காரர்களின் சொத்து மதிப்பு 64 சதவீதமும், துலாம் ராசிக்காரர்களின் சொத்து மதிப்பு 61 சதவீதமும் உயர்ந்துள்ளது. இந்தாண்டு டாப் 5 இடங்களில் இந்த 5 ராசிக்காரர்கள் தான் வருகிறார்கள். தொடர்ந்து மகர ராசிக்காரர்களின் சொத்து மதிப்பு 58 சதவிகிதம் உயர்ந்துள்ள நிலையில், மீன ராசி கொண்டவர்களின் சொத்து மதிப்பு 46 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.
யார் மோசம்: இதற்கு அடுத்து 8வது இடத்தில் கும்பம் மற்றும் கன்னி ராசிக்காரர்களின் சொத்து மதிப்பு தலா 39 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மேஷம், விருச்சிகம், ரிஷபம் ஆகிய ராசி கொண்டவர்களின் சொத்து மதிப்பு முறையே 34 சதவீதம், 33 சதவீதம் மற்றும் 32 சதவீதம் உயர்ந்துள்ளன.
இந்தியப் பணக்காரர்கள்: ஒட்டுமொத்தமாக, சொத்து மதிப்பு உயர்ந்ததை மட்டும் வைத்துப் பார்க்கும் போது கடக ராசிக்காரர்கள் தான் டாப் இடத்தில் உள்ளனர். மேலும், கோடீஸ்வரர்களின் பட்டியலில் இருப்போரில் 9.9% பேர் கடக ராசியில் பிறந்தவர்களாகவே உள்ளனர். குமார் மங்கலம் பிர்லா மற்றும் எல்என் மிட்டல் உள்ளிட்ட பெரும் பணக்காரர்கள் கடக ராசியில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல விருச்சிக ராசியில் பிறந்த சுனில் மிட்டல் மற்றும் மேஷ ராசியில் பிறந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஆஹா ஓஹோ என வளரவில்லை என்றாலும் கணிசமாக வளர்ந்து இருக்கிறது.. உலக பணக்காரர்கள் வரிசையில் ஜெட் வேகத்தில் ஏறிய கவுதம் ஆதானி என்ன ராசி தெரியுமா.. வேறு எதுவாக இருக்க முடியும். இதில் டாப் இடத்தில் உள்ள கடக ராசி தான்.












Click it and Unblock the Notifications