சனி பெயர்ச்சி பலன் 2023: சனியின் ஆட்டம் ஆரம்பம்.. 2024ல் யாருடைய வாழ்க்கையில் அதிரடி மாற்றம்?
சென்னை: சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு ஆலயத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? 2024ஆம் ஆண்டில் எந்த ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.
யாருக்கு என்ன சனி: இந்த சனி பெயர்ச்சியால் மேஷம் லாப சனி, ரிஷபம் தொழில் சனி, மிதுனம் பாக்ய சனி, கடகம் அஷ்டமத்து சனி, சிம்மம் கண்டச்சனி, கன்னி ருண ரோக சத்ரு சனி, துலாம் புண்ணிய சனி, விருச்சிகம் அர்த்தாஷ்டம சனி, தனுசு தைரிய சனி,மகரம் பாத சனி, கும்பம் ஜென்ம சனி, மீனம் விரைய சன என பலன்கள் நடைபெறும்.

ஏழரை சனி யாருக்கு: மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி காலமான 30 மாதமும் பாதிப்புகள் குறைய கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்.
பொங்கு சனீஸ்வரர் ஆலயம்: சனிபகவானுக்கு திருவாரூர் அருகே திருக்கொள்ளிக்காடு என்னும் ஊரில் பொங்கு சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இங்குள்ள பொங்கு சனீஸ்வரரை வழிபட்டால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை திருஞானசம்பந்தரால் மூன்றாம் திருமுறையில் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் சனிப்பெயர்ச்சிக்கான பரிகாரத்தலமாகவும் இந்த கோவில் விளங்குகிறது. சனி பெயர்ச்சியை முன்னிட்டு நாளைய தினம் பொங்கு சனீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.
மேஷம்: 2024 ஆண்டு முதல் மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் லாபத்தை அள்ளித்தரப்போகிறார். தொட்டதெல்லாம் இனி பொன்னாகும். சனியால் பலன்களும் நன்மைகளும் அதிகரிக்க சிவ ஆலயம் சென்று நவகிரக சனிபகவானை எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. அதிக பணம் வந்தால் அதை விரைய செலவு செய்யாதீர்கள். அப்புறம் ஏழரை சனி காலத்தில் சிரமப்பட வேண்டியிருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் வரும். வெளிநாடு போகும் யோகம் வரும். வியாபாரம் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
ரிஷபம்: பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுய தொழில் தொடங்கலாம். மிகப்பெயர் வளர்ச்சியும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் கிடைக்கும். தொழில் சனி காலம் என்பதால் வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சனீஸ்வரரை வணங்க சிறப்பானப் பலன்களைப் பெறலாம். சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடலாம். ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். தர்ம கர்மாதி யோகம் செயல்படும். சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். இனி வரும் காலம் அற்புதமான காலமாக அமையப்போகிறது.
மிதுனம்: பாக்ய சனி காலம் என்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். இனி வரும் சனிபகவான் உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறார். காரணம் குரு பகவானும் 11ஆம் வீட்டில் அமர்ந்து லாபத்தை தருகிறார். சனி பகவான் மிகச்சிறந்த தன யோகத்தை தரப்போகிறார். பாக்யசனி காலம் தொடங்குகிறது என்பதால் ஸ்ரீ விநாயகரை வணங்கலாம். உங்களின் குல தெய்வத்தை விடாமல் கும்பிடுங்கள். வாலாஜாபேட்டையில் எழுந்தருளும் லட்சுமி வராகப்பெருமாளை வணங்க மேலும் நன்மைகள் நடைபெறும்.
கடகம்: அஷ்டமத்து சனி காலத்தில் அகலக்கால் வைக்கக்கூடாது. தொழில் வியாபாரத்தில் அதிக அளவில் பணமுதலீடுகளை செய்ய வேண்டாம். புதிய தொழில் எதுவும் தொடங்கவேண்டாம். பேராசை படவேண்டாம். பங்குச்சந்தை முதலீடு தேவையே இல்லை. யாருக்கும் பணத்தை கடனாக தர வேண்டாம். திங்கட்கிழமைகளில் சிவ ஆலயம் சென்று வரலாம். குச்சனூரில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை வழிபட்டு வருவது நல்லது.
சிம்மம்: சனி பகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து கண்டச்சனியாக பயணம் செய்தாலும் ஆட்சி பெற்ற சனி சச மகா யோகத்தை தரப்போகிறார். அற்புதமான கால கட்டம். வேலை தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சனிபகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி காலம் தொடங்குகிறதே கவலை வேண்டாம். வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்கினால் நன்மைகள் நடைபெறும். சனிக்கிழமைகளில் சனிபகவானையும், பைரவரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.
கன்னி: உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் பொன்னான காலம். கன்னி ராசிக்காரர்களுக்கு முழு அதிகாரத்தையும் சனி தருவார். இதுவரை நிறைய சறுக்கலை சந்தித்திருப்பீர்கள். சனி தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் கடன் நோய் எதிர்ப்பு போன்றவை கட்டுப்படும். விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. ஆறாம் வீட்டில் அமரும் ருண ரோக சத்ரு ஸ்தான சனி என்பதால் விநாயகர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.












Click it and Unblock the Notifications