நவம்பர் மாத ராசி பலன் 2022: அதிர்ஷ்ட தேவதையின் ஆசி.. இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் தேடி வரும்!
சென்னை: நவம்பர் மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை அடை மழையாக கொட்டப்போகிறது. துலாம் ராசியில் நான்கு கிரகங்கள் சேர்ந்திருக்க குரு பகவானும், சனி பகவானும் நேர்கதியில் ஆட்சி பெற்று பயணம் செய்கின்றனர். அதிர்ஷ்ட தேவதையின் அருள் பார்வையினால் சிலருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது. கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு நவம்பர் மாதத்தில் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
நவம்பர் மாதத்தில் சூரிய பகவான் துலாம், விருச்சிகம் ராசிகளில் பயணம் செய்வார். துலாம் ராசியில் பயணிக்கும் புதனும், சுக்கிரனும் விருச்சிக ராசிக்கு ராசிக்கு இடம் மாறுவார்கள். மகரம் ராசியில் சனி, மீன ராசியில் குரு, மேஷ ராசியில் ராகு, மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது என கிரகங்கள் பயணம் செய்கின்றன.
நவ கிரகங்களின் இடப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நன்மை களை செய்யும். சில ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சிலருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும். நவம்பர் மாதத்தில் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம். கல்வி துறைகளில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். சூரியன் பயணம் சாதகமாக உள்ளது. நல்ல தன வருமானம் வரும். தடைகள் நீங்கி வெற்றி உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. சொத்து தொடர்பான பிரச்சினைகள் வரலாம். தேவையில்லாத விசயங்களில் தலையிட வேண்டாம்.

பண வருமானம்
சுக்கிரன் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வீடு கட்ட வேண்டும், வண்டி வாகனம் வாங்க வேண்டும் என்ற யோகம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் எந்த வாக்குவாதமும் செய்ய வேண்டாம். சுக்கிரபகவான் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள்.முன்னேற்றங்கள் உண்டாகும். வீடு பராமரிப்பு செய்வீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பதவி மாற்றம் உண்டாகும். வெளிநாடுகளுக்கு செல்ல நினைப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பண தட்டுப்பாடுகள் நீங்கும். பொருளாதார ரீதியான வளம் அதிகரிக்கும்.

வேலையில் மாற்றம்
அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் உண்டாகும். பிள்ளைகளுக்கு வேலையில் மாற்றம் உண்டாகும். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் அலுவலகத்தில் கேட்ட இடத்திற்கு ட்ரான்ஸ்பர் கிடைக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வந்து போகும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடுவது அவசியம்.

சிம்மம்
உங்கள் ராசிநாதன் 3வது வீட்டில் நீச்ச பங்க யோகம் பெற்று பயணம் செய்கிறார். எந்த சோதனைகள் வந்தாலும் எதிர்கொண்டு சாதிப்பீர்கள். சொந்த வீடு வாங்கும் யோகம் கை கூடி வரப்போகிறது. பேசும் வார்த்தைகளில் எச்சரிக்கை தேவை. யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் கடனாக வாங்கித் தராதீர்கள். கொடுத்த கடன் திரும்ப வர வாய்ப்பில்லாமல் போய் விடும். வண்டி வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. மின்சார சாதனங்களை கையாளும் போது கவனம் தேவை. மூன்றாம் வீட்டில் கிரகங்கள் இணைந்துள்ளதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

எதிரிகள் தொல்லை
சனி பகவான் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். ஆறாம் வீட்டு அதிபதி ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகம். உங்களுக்கு குடைச்சல் கொடுத்த எதிரிகள் தடம் தெரியாமல் போவார்கள். எட்டாம் வீட்டு அதிபதி குருபகவான் எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். முக்கியமான முடிவுகளை எடுக்கும் போதும் நிதானம் தேவை. மன நிம்மதி அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். ராசி அதிபதி நீசபங்க ராஜயோகம் பெற்று அமர்ந்திருப்பதால் உங்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும்.

உயர்கல்வி யோகம்
கணவன் மனைவி இடையே ஊடல் வரும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். வீடு பராமரிப்பு செய்வீர்கள். சொத்து வாங்கவும் நல்ல நேரம் கை கூடி வந்துள்ளது. செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பிள்ளைகள் மூலம் சுப விரைய செலவுகள் வந்து போகும். வீடு கட்டுவதற்கான நேரம் கை கூடி வந்துள்ளது. மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கான நல்ல நேரம் என்பதால் கேட்ட இடத்தில் உங்களுக்கு இடம் கிடைக்கும். பெண்களுக்கு நன்மை அதிகரிக்கும். நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. ஆஞ்சநேயரை வியாழக்கிழமை வெற்றிலை மாலை சாற்றி வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த மாதம் அற்புதங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. நல்ல தன வருமானம் கிடைக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள். எதிரிகள் தொல்லையால் மன உளைச்சளுக்கு ஆளாகியிருப்பீர்கள். உங்கள் துயரங்கள் நீங்கப்போகிறது. இந்த மாதம் கிரகங்கள் சாதகமாக உள்ளதால் நிறைய பண வருமானமும் அதனால் மன நிம்மதியும் அதிகரிக்கும்.

மன மகிழ்ச்சி
இரண்டாம் வீட்டில் நான்கு கிரகங்கள் இணைந்துள்ளன. திருமண பந்தத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். மாத பிற்பகுதியில் திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சுத்திறமை அதிகரிக்கும். கார் வண்டி வாகனங்கள் மூலம் பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல மாதம். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் வெற்றியைத் தரும். வெளிநாட்டில் இருந்து வருமானம் வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

வேலை வாய்ப்பு
அம்மாவின் ஆதரவு கிடைக்கும். வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பண உதவி கிடைக்கும். சனிபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வேலையில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும். செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலையில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இந்த மாதம் சிக்கல்கள் நீங்கும் மாதமாக அமைந்துள்ளது. புகழும் செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும் மாதமாக அமைந்துள்ளது. பிரதோஷ நாளிலும் திங்கட்க்கிழமைகளிலும் சிவபெருமானை வணங்க நன்மைகள் நடைபெறும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications