அக்டோபர் மாத ராசி பலன் 2021: மேஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த மாதம்
அக்டோபர் மாதத்தில் மேஷம்,ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் நிகழப்போகிறது. கிரகங்களின் சஞ்சாரம் பார்வையைப் பொறுத்து இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கும். பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
சென்னை: அக்டோபர் மாதம் பிறக்கப்போகிறது. இந்த மாதத்தில் வாழ்க்கையின் துன்பத்தை தொலைத்து விட்டோம் என்று பாடப்போகும் ராசிக்காரர்கள் இருக்கிறார்கள். மேஷம், ரிஷபம் ராசிக்காரார்களுக்கு இன்பமும்,மகிழ்ச்சியும் அதிகரிக்கப்போகிறது. அக்டோபர் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் ரிஷப ராசியில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,செவ்வாய், துலாம் ராசியில் புதன், சுக்கிரன்,விருச்சிக ராசியில் கேது, மகர ராசியில் சனி,குரு என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
அக்டோபர் 1ல் புதன் கன்னி ராசிக்கு மாறுகிறார். அக்டோபர் 2ஆம் தேதியன்று சுக்கிரன் விருச்சிக ராசிக்கு மாறுகிறார். சனிபகவானின் வக்ர சஞ்சாரம் முடிவுக்கு வருகிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது.
ராசிக்கு பத்தாம் வீட்டில் உள்ள குருவும், சனியும் இந்த மாத பிற்பகுதியில் வக்ர நிவர்த்தி அடைகின்றன. சுக்கிரன் விருச்சிக ராசிக்கு அக்டோபர் 2ஆம் தேதி பயணம் செய்கிறார். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சனி, குரு சாதகமாக உள்ளது.

வேலையில் மாற்றம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சனி குரு கூட்டணியால் வேலையில் புதிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றாலும் செவ்வாய், சூரியன் கூட்டணி 6வது வீட்டில் உள்ளதால் பெரிய எதிர்ப்பை சமாளிக்க வேண்டியிருக்கும்.
சுக்கிரன் எட்டாவது வீட்டில் கேது உடன் இணைந்துள்ளார். மனதில் ஆசைகள் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது. சிலருக்கு பிரிவினை ஏற்பட வாய்ப்புள்ளது. சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

அரசு தேர்வில் வெற்றி
17ஆம் தேதி சூரியன் இடப்பெயர்ச்சியாகி ஏழாம் வீடான துலாம் ராசியில் நீச்சமடைகிறார். சூரியனுக்கு சனி பார்வை கிடைப்பதால் நீச்சபங்க ராஜ யோக அமைப்பும் பெறுகிறார். ராசிநாதன் செவ்வாய்,புதன் இடமாற்றம் சில சாதக பாதங்களைத் தரலாம். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ ஆலோசனை அவசியம். அரசு வேலைக்காக போட்டித் தேர்வுகள் எழுதுபவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. குருவின் பார்வை சூரியன், செவ்வாய் மீது விழுகிறது. அமைதியும் நிதானமும் தேவைப்படும் மாதம். இருக்கிற வேலையை தக்கவைத்துக்கொள்ளுங்கள். புதிய இடமாற்றம் வந்தாலும் தவிர்த்து விடுவது நல்லது. மனரீதியாக ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த மாதமாக அக்டோபர் மாதம் அமைந்துள்ளது.

வருமானம் அதிகரிக்கும்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் உங்கள் ராசியில் ராகு, ஐந்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய், ஆறாம் வீட்டில் புதன், சுக்கிரன்,ஏழாம் வீட்டில் கேது, ஒன்பதாம் வீட்டில் சனி, குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. வேலையில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் இரட்டிப்பாகும். ராசி அதிபதி சுக்கிரன் ஏழாவது வீட்டில் கேது உடன் இணைவதால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். உங்களுக்கு நீங்களேதான் கெடு பலனை செய்ய முடியும்.

மருத்துவ செலவுகள்
உணவு விசயத்தில் கவனம் தேவை. பயணங்களில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். ரிஷப ராசிக்காரர்கள் இந்த மாதம் புது முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. ஞானகாரகன் கேது உடன் ராசி நாதன் சுக்கிரன் இணைந்துள்ளார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவ செலவுகள் வர வாய்ப்புள்ளது. மருத்துவர்களை அவசியம் ஆலோசனை செய்வது அவசியம். வேலையில் உங்களின் கவனச்சிதறல் அதிகரிக்க வாய்ப்புள்ளது கவனம் தேவை.

சந்தோஷம் நிறைந்த மாதம்
திருமணம், புத்திரபாக்கியம் திருப்திகரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி யோகம் கை கூடி வரும். அறிவுத்திறன் அதிகரிக்கும். குருவின் பார்வை குதூகலத்தைத் தரும். பெண்கள், இல்லத்தரசிகளுக்கு டென்சன் நிறைந்த மாதம், பொறுப்புகள் அதிகரிக்கும் சவால்களை சமாளியுங்கள். சக்தியும், சந்தோஷம் நிறைந்த மாதமாக அக்டோபர் மாதம் அமைந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications