கணவன் மனைவிக்குள் சதா சண்டையா மீனாட்சி அம்மன் கோவில் பள்ளியறை பூஜை பாருங்க

கணவன் - மனைவி பிரச்சினை தீரவும் ஒற்றுமை அதிகரிக்கவும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசித்தால் நல்ல பயனைக் கொடுக்கும். பள்ளியறைப் பூஜைக்கு சிவபாத பூஜை என்று ஒரு பெய

Subscribe to Oneindia Tamil

மதுரை: பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினசரியும் நடைபெறும் பள்ளியறை பூஜையை காண்பர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பலன்கள் கிடைக்கும். சிவன் சக்தி ஐக்கியத்தை உணர்த்தும் இந்த பள்ளியறை பூஜையை தம்பதி சமேதராக காண்பவர்களின் குடும்பங்களில் ஒற்றுமை அதிகரிக்கும்.

நமது தமிழ்நாட்டில் இருக்கும் 38,000 பழமையான ஆலயங்களில் 27,000 சிவாலயங்கள் ஆகும். 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளியறை பூஜை அனைத்து ஊர்களிலும், அனைத்து ஆலயங்களிலும் நடைமுறையில் இருந்து வந்தது. தமிழ்நாட்டில் எந்த ஊர்களில் எல்லாம் பள்ளியறை பூஜை நடைபெறவில்லையோ அந்த ஊர்களில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தம்பதிகள் பெருமளவு குறைந்துவிட்டதாக கூறுகின்றனர் பெரியோர்கள்.

சின்னச் சின்ன பிரச்சினைகள் கூட பெரிய சண்டையாக மாறி விவாகரத்துவரை போகிறது சண்டை நீங்கி சமாதானம் அடைய கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்க சிவன் ஆலயங்களில் நடைபெறும் பள்ளியறை பூஜையை சிலமுறை பார்க்க வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசிப்பவர்களின் வீடுகளில் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். கொரோனா லாக்டவுனால் கோவில்கள் மூடப்பட்டிருந்தாலும் பூஜைகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. கோவில்கள் வழக்கம் போல திறந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட பின்னர் தவறாமல் பள்ளியறை பூஜை பாருங்க.

பள்ளியறை பூஜை

பள்ளியறை பூஜை

கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கவும் கணவனின் நோய் தீரவும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெறும் பள்ளியறை பூஜையில் பங்கேற்று தம்மால் ஆன பொருட்களை வாங்கித்தர வேண்டும். அற்புதமான வாரிசுகளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் சனிக்கிழமையன்று நடைபெறும் பள்ளியறை பூஜையில் பங்கேற்க வேண்டும்.

புத்திரபாக்கியம்

புத்திரபாக்கியம்

பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும் சண்டை நீங்கி சமாதானம் ஏற்படும் ஞாயிறன்று நடைபெறும் பள்ளியறை பூஜையில் பங்கேற்க வேண்டும். பள்ளியறை பூஜைக்கு பால் வாங்கி தருபவர்கள் வைவேத்தியம் செய்து தானம் கொடுப்பவர்களுக்கு ஒழுக்கமும் பக்தியும் நிறைந்த பிள்ளைகள் பிறப்பார்கள். பல தலைமுறைக்கும் அவர்களின் புகழ் நிலைத்து நிற்கும்.

கர்ப்பிணிகளுக்கு நன்மை

கர்ப்பிணிகளுக்கு நன்மை

பள்ளியறை பூஜையில் கர்ப்பிணிகள் பங்கேற்று பசுவிற்கு பழங்கள் கொடுத்து வர சுகப்பிரசவம் ஏற்படும். நைவேத்திய பாலை தானும் குடித்து மற்றவர்களுக்கும் பால் தானம் செய்தால் சுகப்பிரசவம் உண்டாகும். பள்ளியறை பூஜை முடிந்து அன்னதானம் செய்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி அடையும் லாபம் பலமடங்கு கிடைக்கும்.

கோடீஸ்வர யோகம்

கோடீஸ்வர யோகம்

பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் சிவன் நகர்வலம் வரும் போது சிவபுராணம் படிக்க வேண்டும். பள்ளியறை பூஜையை தினம் தினம் தரிசனம் செய்தாலே வளமான வாழ்க்கை அமையும். பள்ளியறை பூஜைக்கு பல்லக்கு தூக்கி சுமக்கும் பாக்கியம் பெற்றவர்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதிகளாக மாறுவார்கள். பள்ளியறை பூஜைக்கு பூக்கள் கொடுப்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பள்ளியறை பூஜைக்கு நெய், நல்லெண்ணெய் கொடுப்பவர்களுக்கு கண் பிரச்சினைகள் தீரும்.

கண் நிறைந்த கணவர்

கண் நிறைந்த கணவர்

ஆயில்யம், கேட்டை, மூலம், பூராடம் நட்சத்திரங்களில் பிறந்த பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதில் சிரமம் ஏற்படும். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஒருவருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையில் பங்கேற்க வேண்டும். ஆயில்யம் நட்சத்திரமும் செவ்வாய்கிழமையும் இணைந்து வரும் நாளில் பள்ளியறை பூஜைக்கு தேவையான பொருட்களை இறைவனுக்கு கொடுக்க வேண்டும்.
கண் நிறைந்த கணவர் கிடைப்பார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+