குல தெய்வத்தை மறக்காமல் கும்பிட்டால் ஏழுதலைமுறைக்கும் கூடவே வரும்
குலதெய்வத்தை விடாமல் கும்பிட்டால் ஏழு தலைமுறைக்கு பாதுகாப்பு கூடவே வரும். பங்குனி உத்திர நாளில் அண்ணன் தம்பிகள் பங்காளிகள் எல்லாம் இணைந்து குல தெய்வத்தை மறக்காமல் கும்பிடுவோம்.
மதுரை: தெய்வ வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு என்பது அவரவர்களுடைய முன்னோர்கள் பல தலைமுறைகளாய் வழிபட்டு வந்த தெய்வமாகும். குல தெய்வ வழிபாடு ஏழு தலைமுறைகளைக் காக்கும். குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குலதெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோளாகும்.

குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் நீங்கள் வாழும் வாழ்க்கையில் ஒரு திருப்தி இருக்காது. பூஜை அறையில் உங்களின் குறைகளை உங்களின் குலதெய்வத்திடம் சொல்லி வேண்டுங்கள் அனைத்து குறைகளையும் அந்த குலதெய்வம் உங்களுக்கு தீர்த்துவைக்கும். குலதெய்வம் உங்கள் கூடவே வரும்.
குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை
நாம் அனுபவிக்கும் எல்லா பலன்களும் நாமும், நம் முன்னோர்களும் செய்த புண்ணியத்தின் அடிப்படையிலேயே கிடைக்கிறது. ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் பித்ரு பூர்வபுண்ணிய ஸ்தானத்தின் காவல் தெய்வங்களான உங்கள் குலதெய்வம் தீர்க்கும். ஒருவரின் சந்தோஷமான சுபிட்சமான வாழ்க்கைக்கு குலதெய்வ ஆராதனையும், பித்ருக்களின் ஆசியும் மிக முக்கியம்.

பல தெய்வங்களை வழிபாடு செய்து வரலாம். ஆனால், அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு அடுத்ததுதான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.
உங்களின் தெய்வம் அசைவம் வைத்து படைக்கும் தெய்வமாக இருந்தால் தாராளமாக அதனை செய்யுங்கள். நமது முன்னோர்களின் வழியை நாம் மாற்ற வேண்டாம். குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசியமானதாகும். வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்துக்கு செய்யவேண்டியதை செய்து வழிபட்டால் குலம் தழைத்து, வரும் சந்ததியினர் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வார்கள்

குலதெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும். ஒருவர் எவ்வளவு பூஜைகள் செய்தாலும் எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் குலதெய்வ அனுகிரகம் இல்லை என்றால், எந்த தெய்வ அனுகிரகமும் இல்லை என்றும், குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு என்றும் சொல்லப்படுகிறது.
குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்து கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்றும் செய்துவிட முடியாது. நவகிரகங்களும் துணை நிற்கும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications