Kumbam Rasi Palan: கும்ப ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. ஆரோக்கியம், பேச்சில் ரொம்ப கவனம்
புரட்டாசி மாத பலன்: ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. கன்னி ராசிக்கு சூரியன் செல்லக்கூடிய மாதமான இந்த புரட்டாசி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்த பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. கன்னி ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம். செப்டம்பர் 17 ஆம் தேதி இந்த பிரவேஷம் நடக்கிறது.

சூரியனும் புதனும் இணைந்து இந்த புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் அமர்கின்றனர். சுக்கிரன், கேது பஞ்சம ஸ்தானம் எனும் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கின்றனர். சனி வக்கிரம் பெற்று சனி வக்கிரப் பார்வையால் சூரியனும், புதனும் மாட்டிக் கொள்ளும் சூழல் உள்ளது. சூரியனால் சனி பாதிக்கப்படும் நிலை உள்ளது. குரு மிதுனத்திலும், ராகு கும்பத்திலும் அமர்ந்திருக்கின்றனர்.
புதன் என்றால் பெருமாள். புரட்டாசி மாதத்தில் பசு மாடுகளுக்கு, மீன்களுக்கு அன்னதானம் கொடுப்பது அற்புதமான பலன்களைத் தரும். சனிக்கிழமை தோறும் விரதம் இருப்பது நன்மை பயக்கும். இந்த புரட்டாசி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் கிட்னி தொடர்பான பிரச்சனைகள். தந்தையின் உடல்நிலையில் பாதிப்பு, பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. வெளியில் வரமுடியாமல் தவிக்கும் சூழ்நிலை உண்டாகும். கடனில் சுக்கும் வாய்ப்புள்ளது. உங்களுக்கும், உங்கள் மேலதிகாரிகளுக்கும் பயங்கரமான பிரச்சனைகள் வரும்.
எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அடிவயிறு, சிறுகுடல், பெருங்குடல் தொடர்பான பாதிப்புகள் வரும் சூழல் உள்ளது. பெரியவர்களுக்கும், உங்களுக்கும் ஆகாத சூழல் ஏற்படும். நம்முடைய வாய் அமைதியாக இருக்காது. ராசி, லக்கினத்தில் ராகு இருப்பதால் வேண்டுமென்ற பிரச்சனைகள் செய்வீர்கள்.
வார்த்தையில் கவனம்
குடும்பத்தில் சஞ்சலம் என்பது உங்களுடைய வார்த்தைகளினால் ஏற்படும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன் அமர்ந்திருப்பதால் அப்ரண்டிஸ் போன்ற பாதிப்புகள் வரும். பஞ்சம ஸ்தானத்தில் குரு அமர்ந்து பாக்கியத்தை பார்ப்பதால் உங்களுக்கு நெகட்டிவாக எந்த விஷயமும் நடக்காது. ஏதோ ஒரு வகையில் பிரச்சனைகளில் இருந்து தப்பித்து வெளிவருவீர்கள்.
குரு பார்வை
குரு கடாட்சம் இருக்கும் வரை உங்களுக்கு நெகட்டிவான விஷயங்கள் எதுவும் நடக்காது. மற்றபடி அனைத்து விஷயங்களும் உங்களுக்கு எதிராக நடக்கும். அஷ்டமத்தில் சென்று சூரியன், புதன் அமரும்போது கண்டிப்பாக ஆரோக்கியத்தில் அடிவயிறு, கழிவு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், உடல் சூடு போன்றவை ஏற்படும்.
ஆரோக்கியம்
சிம்மத்தில் சுக்கிரன், கேது சேர்ந்திருப்பதால் கணவனாக இருந்தால் மனைவியின் ஆரோக்கியத்திலும், மனைவியாக இருந்தால் கணவரின் ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும். கூடா நட்பால் பாதிப்புகளைச் சந்திப்பதற்கான வாய்ப்புள்ளது. வாழ்க்கையை புரட்டிப் போடும் என்பதால் நண்பர்கள் விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை.
வழிபாடு
குரு நல்ல நிலையில் இருப்பதால் அச்சமடையத் தேவையில்லை. குருவாயூர் கிருஷ்ணரை மனதார வழிபடுவது நல்லது. சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 70 சதவீதம் நன்மைகள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications