Purattasi matha palan: ஏழரை சனியிலும் மேஷ ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. குட் நியூஸ் வரப்போகுது
புரட்டாசி மாத பலன்: ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. கன்னி ராசிக்கு சூரியன் செல்லக்கூடிய மாதமான இந்த புரட்டாசி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்த பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. கன்னி ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம்.

புதன் என்றால் பெருமாள். புரட்டாசி மாதத்தில் பசு மாடுகளுக்கு, மீன்களுக்கு அன்னதானம் கொடுப்பது அற்புதமான பலன்களைத் தரும். சனிக்கிழமை தோறும் விரதம் இருப்பது நன்மை பயக்கும். இந்த புரட்டாசி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக இருந்த பழைய எதிரிகள் தொந்தரவுகள் அனைத்தும் நீங்கும். வழக்குப் போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாக முடியும். அரசுத் துறை, அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளுக்கு வருவார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக வரும். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவரத்தியாகும்.
தொழில்
தொழில் சார்ந்த விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் நிவர்த்தியாகும். திட்டமிட்டு இனி ஒவ்வொரு வேலையும் செய்யும் வாய்ப்பு ஏற்படும். வேலையை விட்டுவிட்டு சொந்த தொழிலுக்கு மாறும் அமைப்பு உள்ளது. தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும் அற்புதமான காலகட்டம்.
நம்பிக்கை
இதுவரை எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் ஏதாவது தடைகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். இழுபறியாக இருந்த நிலைமை படிப்படியாக மாறும். வாழ்க்கையின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். ஆச்சரியங்கள் பல ஏற்படுத்திக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். பண வரவு அதிகரிக்கும். பெரிய காரியங்களை எல்லாம் எளிமையாக செய்து முடிப்பீர்கள்.
கஷ்டங்கள் தீரும்
கடின உழைப்பு போட்டுக் கொண்டு இருப்பதால் தெய்வ வழிபாடு செய்ய முடியாமல் போகும். மனதார சுவாமி வழிபாடு செய்வது நல்லது. நீண்ட நாட்களாக இருந்த பிள்ளைகள் விஷயம், துணை, துணைவியார் விஷயம், மன வருத்தம், உறவுமுறையில் இருந்த கஷ்டங்கள் எல்லாம் தீரும். புரட்டாசி மாதத்தில் பெரிய சந்தோஷம் ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நல்ல செய்தி உங்களைத் தேடி வரும்.
வழிபாடு
தோல்பட்டை வலி, தலைச் சுற்றல், கை கால்களில் சுழுக்கு ஏற்படுவது போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும். துர்க்கை வழிபாடு செய்வது மேன்மையை ஏற்படுத்தும். பசு மாடுகளுக்கு உணவு தானம் அளிப்பது மாற்றத்தையும், ஏற்றத்தையும் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications