Purattasi matha palan: மிதுன ராசிக்கு அடுத்தடுத்து அதிர்ஷ்டம்.. உறவுகளிடம் பேசும்போது ரொம்ப கவனம்
புரட்டாசி மாத பலன்: ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. கன்னி ராசிக்கு சூரியன் செல்லக்கூடிய மாதமான இந்த புரட்டாசி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்த பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. கன்னி ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம்.

புதன் என்றால் பெருமாள். புரட்டாசி மாதத்தில் பசு மாடுகளுக்கு, மீன்களுக்கு அன்னதானம் கொடுப்பது அற்புதமான பலன்களைத் தரும். சனிக்கிழமை தோறும் விரதம் இருப்பது நன்மை பயக்கும். இந்த புரட்டாசி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ரத்த பந்த உறவுகள், தாய் வழி உறவுகள் விஷயத்தில் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். கிட்னி, லிவர் செயல்பாடுகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வேற்று மொழி பேசுபவர்களால் அதிக அளவில் ஆதாயம் அடைவீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் படிப்படியாக மாறும்.
அந்நியோன்யம்
குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். துணையை விட்டு தொலைதூரத்தில் இருந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்புள்ளது. அவர்கள் உங்களைத் தேடி வரும் வாய்ப்பு ஏற்படும். உறவுகளிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ரத்த பந்த உறவுகளில் அதீத கவனமாக இருக்க வேண்டும். சிறிய வாக்குவாதங்கள் நீங்கள் செய்தால் கூட அது பெரிய பிரச்சனைகளில் முடியும் வாய்ப்புள்ளது.
இடமாற்றம்
சோம்பல் அதிகமாக இருக்கும் என்பதால் உடற்பயிற்சியை செய்ய வேண்டும். காலையில் எழுந்தவுடனேயே குளித்துவிட்டு மற்ற வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். இடமாற்றம், வேலை மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம் என அனைத்து மாற்றங்களும் கிடைக்கும். சுப காரியத்தில் இருந்த பாதிப்புகளில் இருந்து பரிபூரணமாக விடுதலை அடைவீர்கள்.
சுபகாரியம்
அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கும். தொழிலில் இருந்த சிக்கல்கள் தீரும். அதனால், அற்புதமான முன்னேற்றத்தை அடைவீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் படிப்பு, உத்தியோகம், வியாபாரத்தில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பண வரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
வழிபாடு
முருகர் வழிபாடு உங்களுக்கு அனைத்து வகையிலும் நன்மையையும், ஏற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். சுப்பிரமணிய புஜங்கம் பெரிய அளவில் ஏற்படுத்திக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications