Viruchigam Rasi Palan: விருச்சிக ராசிக்கு நடக்கப்போகும் துரோகம்.. பிரச்சனைக்கு மேல் பிரச்சனை.. கவனம்

Subscribe to Oneindia Tamil

புரட்டாசி மாத பலன்: ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. கன்னி ராசிக்கு சூரியன் செல்லக்கூடிய மாதமான இந்த புரட்டாசி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்த பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. கன்னி ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம். செப்டம்பர் 17 ஆம் தேதி இந்த பிரவேஷம் நடக்கிறது.

purattasi-maatha-palan-what-kind-of-benefits-and-fortunes-will-get-viruchigam-rasi-people-in-this-m

சூரியனும் புதனும் இணைந்து இந்த புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் அமர்கின்றனர். சுக்கிரன், கேது பஞ்சம ஸ்தானம் எனும் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கின்றனர். சனி வக்கிரம் பெற்று சனி வக்கிரப் பார்வையால் சூரியனும், புதனும் மாட்டிக் கொள்ளும் சூழல் உள்ளது. சூரியனால் சனி பாதிக்கப்படும் நிலை உள்ளது. குரு மிதுனத்திலும், ராகு கும்பத்திலும் அமர்ந்திருக்கின்றனர்.

புதன் என்றால் பெருமாள். புரட்டாசி மாதத்தில் பசு மாடுகளுக்கு, மீன்களுக்கு அன்னதானம் கொடுப்பது அற்புதமான பலன்களைத் தரும். சனிக்கிழமை தோறும் விரதம் இருப்பது நன்மை பயக்கும். இந்த புரட்டாசி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் என்பது லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் அமர்ந்திருப்பது தான். சனி வக்கிரமாகும் போது புதன், சூரியன் மேல் அமரும்போது நண்பர்களால் துரோகம் ஏற்படும். முதலீடுகளில் சிக்கும் வாய்ப்பு ஏற்படும். பெரிய பணங்கள் வைத்திருந்தால் அதை கொண்டு போய் சிக்க வைக்கும் நேரமாக உள்ளது.

ஆரோக்கியம்

கால் முட்டி, எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. விருச்சிகத்தில் பிறந்தவர்கள் நண்பர்கள் வட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தேவையில்லாத சிக்கல்களில் சிக்கும் வாய்ப்புள்ளது. விரைய ஸ்தானத்துக்கும், குடும்ப ஸ்தானத்துக்கும் குருவின் பார்வை இருப்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. காசு, பணத்திற்கு எந்தவித குறைவும் வராது.

பெண் ஊழியர்களிடம் கவனம்

உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். விட்டமின் கோளாறுகளால் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது. நம்பிக்கை உங்கள் மேல் அதிகம் வைக்க வேண்டும். எது வந்தாலும் அதை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருப்பது நல்லது. 10 ஆம் இடத்திலேயே சுக்கிரன், கேது அமர்ந்திருப்பதால் அலுவலகத்தில் இருக்கும் பெண் ஊழியர்களிடம் மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும்.

வழிபாடு

நல்லதற்காக பேசப் போய் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்புள்ளது. வேலை நிமித்தமாக பணம் காணாமல் போவது, திருடு போவதற்கான வாய்ப்புள்ளது. வண்டி, வாகனங்கள், பேச்சுவார்த்தை பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 70 சதவீதமும் நன்றாக இருக்கும். பிரத்யங்கரா தேவி வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+