Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புரட்டாசி மாத ராசிபலன்கள் 2021: மகரம், கும்பம்,மீனம் ராசிக்காரர்களுக்கு நன்மைகள் தேடி வரும்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதத்தில் கிரகங்களின் கூட்டணி கன்னி ராசியில் இணைகிறது. மகரம், கும்பம்,மீனம் ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் நன்மைகள் நிறைந்த ம

Subscribe to Oneindia Tamil

சென்னை: புரட்டாசி மாதம் மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு நன்மைகள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்வதால் கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. கன்னி ராசி புதன் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் இந்த மாதத்தில் சூரியன் செய்வாய் இணைந்து பயணம் செய்வது சிறப்பு. நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி பார்வையால் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

புரட்டாசி பிறக்கும் போது ரிஷபத்தில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,புதன், செவ்வாய், துலாம் ராசியில் சுக்கிரன், விருச்சிகத்தில் கேது, மகர ராசியில் சனி, குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. புரட்டாசியில் கிரகங்களின் மாற்றம் உள்ளது. கன்னி ராசியில் இருக்கும் புதன் புரட்டாசி 6 ஆம் தேதி துலாம் ராசிக்கு நகர்கிறார். 11ஆம் தேதி புதன் வக்ர ஆரம்பமாகிறது. 15ஆம் தேதி மீண்டும் கன்னி ராசிக்கு புதன் செல்கிறார். சுக்கிரன் 16ஆம் தேதி விருச்சிக ராசிக்கு செல்கிறார். 25 ஆம் தேதி சனிபகவான் வக்ரம் முடிந்து நேர்கதியில் பயணம் செய்கிறார்.

புரட்டாசி மாதம் முழுக்க விரத நாட்கள்தான். முன்னோர்களை வணங்கும் மாதம். அம்மனுக்காக நவராத்திரி பண்டிகை கொண்டாடும் மாதம். 17-09-2020 முதல் 16-10-2020 வரை புரட்டாசி மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

வெற்றிகள் தேடி வரும்

வெற்றிகள் தேடி வரும்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, புரட்டாசி மாதத்தில் உங்கள் ராசிக்குள் சனி, குரு சஞ்சாரம் செய்கின்றனர். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, பாக்ய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன்,
பயணம் செய்கின்றனர். பத்தாம் வீட்டில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
பிரபல யோகாதிபதிகள் சுக்கிரன் புதன் சாதகமாக பயணம் செய்வதால் பண வரவு வரும். அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அப்பா உடன் கருத்து வேறுபாடு ஏற்படும். திடீர் செலவுகள் வரும். காரியங்களில் வெற்றி கிடைக்கும் ஜெயித்து காட்டுவீர்கள். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு கூடும். நண்பர்களால் உறவினர்களால் உதவி கிடைக்கும்.

பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பெற்றோர்கள், உறவினர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பிள்ளைகள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கல்வி விசயத்தில் கவனம் தேவை. மன அழுத்தம் நீங்கி தெளிவு பிறக்கும். சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும். அலுவலகத்திலோ, வெளியிடத்திலோ எதையும் படித்துப்பார்த்து கையெழுத்து போடவும். தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். குல தெய்வ கோவிலுக்கு சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பெருமாள் கோவிலுக்கு சென்று அனுமன், கருடனை தரிசனம் செய்வது நல்லது. மகர ராசியில் பிறந்தவர்கள் மதுரை மீனாட்சி அம்மனை வணங்க செல்வம் செல்வாக்கு தேடி வரும்.

கும்பம்

கும்பம்

ஏழாம் வீட்டில் இருந்து இதுநாள் வரை உங்கள் ராசியை நேராக பார்த்துக்கொண்டிருந்த சூரியன் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். நான்காம் வீட்டில் ராகு, ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன், பத்தில் கேது, விரைய ஸ்தானத்தில் சனி, குரு என நவ கிரகங்கள் பயணம் செய்கின்றன. முக்கியமான வேலைகள் சாதகமாக முடியும். காரியங்களில் வெற்றி கிடைக்கும். விலை உயர்ந்த தங்க நகைகளை யாருக்கும் இரவல் தர வேண்டாம். கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் வரும் பேசும் போது விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. புதிய சொத்துக்கள் வாங்கும் போதும் உங்களுடைய சொத்துக்களை விற்கும் போது கவனம் தேவை. மறைமுக எதிரிகள் விசயத்தில் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளிடம் பேசும் போது குரல் உயர்த்தி கோபமாக பேச வேண்டாம்.

அனுமன் வழிபாடு

அனுமன் வழிபாடு

வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமும் நிதானமும் தேவை. இரவு நேரங்களில் பயணம் செல்வதைத் தவிர்த்து விடுவது நல்லது. வேலையில் அலைச்சல் அதிகரிக்கும். புதன் சாதகமாக இருக்கிறார். பிரச்சினைகள் நீங்கும் வெற்றிகள் அதிகரிக்கும். பெருமாளை வணங்குவதுடன், அனுமனை வணங்குவது நல்லது. புரட்டாசி மாதம் முழுவதும் நல்லது நிறைய நடைபெறும் என்றாலும் அதே போல கவனமும் விழிப்புணர்வும் அவசியம் தேவைப்படும் மாதமாகும். ஏழைகளுக்கு தயிர்சாதம் அன்னதானம் கொடுங்கள்.

மீனம்

மீனம்

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, புரட்டாசி மாதத்தில் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் ராகு, ஏழாம் வீட்டில் சூரியன், செவ்வாய், குரு பயணம் செய்கின்றனர். எட்டாம் வீட்டில் சுக்கிரன், பாக்ய ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. குருவும் சனியும் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பெரிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வெற்றிகள் தேடி வரும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும் புதிய ஒப்பந்தங்கள் கை கூடி வரும். எதிர்பாலினத்தவர்களிடம் பேசும் போது கவனம் தேவை. குடும்ப விசயங்களை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

குழந்தைகளால் குதூகலம் வரும்

குழந்தைகளால் குதூகலம் வரும்

கணவன் மனைவிக்கு இடையே கருத்து மோதல்கள் வரும். அவ்வப்போது சின்னச் சின்ன ஊடல்கள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. திடீர் பண வரவு வரும். வார மத்தியில் சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் செய்வதால் அப்பா வழி உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. திடீர் செலவுகள் வரும். உறவினர்களிடம் பேசும் போது கவனம் தேவை. கோபத்தை தவிர்த்து விட்டு விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குல தெய்வ கோவிலுக்கு சென்று வணங்கி வருவதால் நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+