புரட்டாசி மாத ராசிபலன்கள் 2021: மேஷ ராசிக்காரர்களே வேலையில் கவனம் தேவை
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதத்தில் கிரகங்களின் கூட்டணி கன்னி ராசியில் இணைகிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்வதால் கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. கன்னி ராசி புதன் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் இந்த மாதத்தில் சூரியன் இணைந்து பயணம் செய்வது சிறப்பு இந்த மாதத்தில் சூரியன், புதன் உடன் கூடவே செவ்வாயும் கூட்டணி அமைத்து பயணம் செய்கிறார். இந்த கிரகங்களின் கூட்டணியால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

புரட்டாசி பிறக்கும் போது ரிஷபத்தில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,புதன், செவ்வாய், துலாம் ராசியில் சுக்கிரன், விருச்சிகத்தில் கேது, மகர ராசியில் சனி, குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. புரட்டாசியில் கிரகங்களின் மாற்றம் உள்ளது. கன்னி ராசியில் இருக்கும் புதன் புரட்டாசி 6 ஆம் தேதி துலாம் ராசிக்கு நகர்கிறார். 11ஆம் தேதி புதன் வக்ர ஆரம்பமாகிறது. 15ஆம் தேதி மீண்டும் கன்னி ராசிக்கு புதன் செல்கிறார். சுக்கிரன் 16ஆம் தேதி விருச்சிக ராசிக்கு செல்கிறார். 25 ஆம் தேதி சனிபகவான் வக்ரம் முடிந்து நேர்கதியில் பயணம் செய்கிறார்.
புரட்டாசி மாதம் முழுக்க விரத நாட்கள்தான். முன்னோர்களை வணங்கும் மாதம். அம்மனுக்காக நவராத்திரி பண்டிகை கொண்டாடும் மாதம். 17-09-2020 முதல் 16-10-2020 வரை புரட்டாசி மாதத்தில் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்பது பற்றியும் சந்திராஷ்டம நாட்களையும் பார்க்கலாம்.
மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே, உங்கள் ராசி நாதன் செவ்வாய் புரட்டாசி மாதத்தில் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியன், புதன் உடன் இணைந்து பயணம் செய்கிறார். இரண்டாம் வீட்டில் ராகு, ஏழாம் வீட்டில் சுக்கிரன், பத்தாம் வீட்டில் குரு சனி என கிரகங்கள் சஞ்சாரிக்கின்றன. சந்திரனின் பயணம் மகர ராசியில் இருந்து ஆரம்பமாகிறது.
மாத ஆரம்பமே அமர்களம் என்பது போல குரு உடன் சந்திரன் இணைந்து குரு சந்திர யோகம் பத்தாம் வீட்டில் தொடங்குகிறது. குருவின் பார்வை குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மீது விழுகிறது. பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் முடிவுக்கு வந்து நெருக்கம் அதிகரிக்கும்.
பிள்ளைகள் கல்வி விசயத்திற்காக செலவுகள் அதிகரிக்கும். நோய்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம் காரணம் குருபகவான் மீண்டும் பத்தாம் வீட்டில் வந்து நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார்.
ஆறாம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் பணம் விசயத்தில் கவனம் தேவை. எதிரிகளின் மறைமுக தொந்தரவு அதிகரிக்கும். புதன் இடப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் வக்ரமடைந்து பயணம் செய்வதால் உறவினர்களிடம் கவனம் தேவை. பேசும் வார்த்தைகளில் நிதானம் அவசியம்.
சுக்கிரன் மாத முற்பகுதியில் ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் முகத்தில் பொலிவு கூடும். சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும். திடீர் பண வரவும் வரும். 16ஆம் தேதிக்கு மேல் சுக்கிரன் எட்டாம் வீட்டிற்கு செல்வதால் பணம், விலை உயர்ந்த நகை போன்றவற்றை கவனமாக வைத்துக்கொள்வது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கிக் கொடுக்க வேண்டாம்.
தொழில் முதலீடுகளில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். வரவு அதிகமாக இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். பெண்கள் குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். உணவு விசயத்தில் கவனம் தேவை. மூன்றாவது நபர்களிடம் பேசும் போது கவனம் தேவை. வேலையில் இருப்பவர்கள் உயரதிகாரிகளிடம் பேசும் போது கவனம் தேவை. சனிப்பிரதோஷ நாளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவது நன்மையைத் தரும். மகாபரணி நாளில் காளி கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம். விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications