Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு அந்தரங்க விஷயங்களால் வரும் சிக்கல்.. ரொம்ப கவனம்
Purattasi matha palan: ஆவணி மாதம் நிறைவடைந்து பெருமாளுக்கு உரிய மாதமான புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
புரட்டாசி மாதம்
புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. பெருமாள் மாதம், வைணவ மாதம், புண்ணிய மாதம், முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பொழியும் மாதம் என்று அழைக்கப்படுகிறது. மாதங்களில் 6 ஆவது மாதமாக வரக்கூடிய மாதம். சூரிய பகவான் ராசி மண்டலத்தில் 6 ஆவது ராசியாகிய கன்னி ராசியில் அமரும் மாதமே புரட்டாசி மாதம்.

பண்டிகைகள்
பொதுவாக புரட்டாசி மாதம் என்றாலே முதலில் நியாபகத்துக்கு வருவது நவராத்திரி தான். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என ஏகப்பட்ட விசேஷங்கள் வரவுள்ளன. கொலு பொம்மைகளைக் கொண்டு பூமியில் கடவுளை வைத்து மனதிலே ஏற்ற கொண்டாடக்கூடிய மாதமாகும். இந்த மாதத்தில் அம்பாளுக்கு ஏராளமான விசேஷங்கள் கொண்டாடப்படும்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
புரட்டாசி மாதத்தில் முக்கியமான மஹாளய அமாவாசை. நீண்ட நாட்களாக முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்காமல் இருப்பவர்கள் புனித நதிகள், ஆற்றோரங்களில், கடலோரங்களில், குளக்கரைகளில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு ஆசிர்வாதம் பெறும் மாதமாகும். சூரியன் கன்னியில் அமர்ந்துள்ளதால் இந்த மாதத்தில் முன்னோர்களை நினைத்து வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
இந்த புரட்டாசி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே கடந்த ஒரு மாதகாலமாக உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் அமர்ந்து தூக்கமின்மை, கலைப்பை கொடுத்துக் கொண்டிருந்த வந்த சூரியன், தற்போது ராசிக்குள் வந்து அமர்ந்துள்ளார். இதனால், முன்கோபங்கள் அதிகரிக்கும். யாரும் நம்மைப் புரிந்து கொள்ளவில்லை என்பது போன்ற யோசனைகள் வரும். சிடுசிடுவென பேசும் சூழ்நிலை ஏற்படும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது.
வரிகளில் கவனம்
உப்பு, புளி, காரத்தைக் குறைத்துக் கொள்வது நன்மை பயக்கும். மிதமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். சூரியன் ராசிக்குள் வந்து அமர்ந்துள்ளதால் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகள், இன்கம் டாக்ஸ், மற்ற வரிகளை உடனுக்குடன் செலுத்திவிடுவது நல்லது. ராசிக்கு 2 ஆம் இடத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளதால் கணவன், மனைவிக்குள் சிறு சிறு விவாதங்கள் வந்து போகும்.
அந்தரங்கம்
குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. வெளிவட்டாரம் இந்த மாதம் முழுக்க நன்றாக இருக்கும். குரு பகவான் 10 ஆம் இடத்தில் இருப்பதால் உத்தியோகத்தில் சின்ன பயம் இருக்கும். ஆனால், பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்கள் சார்ந்த தொந்தரவுகள் வரும். வேலை ஆட்களை விசாரணை செய்து வேலைக்கு எடுப்பது நல்லது.
திடீர் பண வரவு
கண்டகச் சனி நடந்து கொண்டிருப்பதால் வேலை ஆட்களிடம் அந்தரங்க விஷயங்களை சொல்லாமல் இருப்பது நல்லது. ராசிநாதன் புதன் நலமாக இருப்பதால் எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்கும் யோகம் உண்டாகும். யோகாதிபதி சுக்கிரன் பலமாக அமர்ந்திருக்கிறார். சாதகமான வீடுகளில் பயணிப்பதால் திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டாகும். எல்லா வகையிலும் பிரபலங்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள்.
வழிபாடு
புகழ்பெற்ற கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். இந்த புரட்டாசி மாதத்தில் விநாயகரை வழிபாடு செய்வது நன்மையைக் கொடுக்கும். ஏழை நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை வாங்கி கொடுப்பது, மொச்சைப் பயிறு தானமாகக் கொடுப்பது அனைத்து விதமான ஏற்றத்தையும் அளிக்கும்.












Click it and Unblock the Notifications