Puthandu Palan: லக்கி பாஸ்கராக மாறும் ரிஷப ராசி.. புத்தாண்டில் தொட்டதெல்லாம் துலங்கப் போகுது
புத்தாண்டு பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. வரப்போகின்ற புத்தாண்டு புதுமையைத் தருவதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2026 புத்தாண்டின் ஆரம்பத்திலேயே குரு பகவான் வக்ர நிவர்த்தியில் மிதுனத்தில் இருக்கிறார். பிப்ரவரி மாதம் வரைக்குமே குரு பகவான் வக்ரத்துடன் தான் இருக்கிறார். குரு வக்கிரமடைந்து ராகுவுடன் இணையும் போது பொதுவாகவே அந்த அளவுக்கு பிரம்மாண்டமான துவக்கமாக இந்த ஆண்டு இருக்காது. மார்ச் மாதம் வரைக்குமே எல்லோருக்கும் ஒரு சுமாரான காலகட்டமாகவே இருக்கும்.

மார்ச் மாதத்திற்குப் பிறகும் நல்ல மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்திற்குப் பிறகு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். குரு பகவான் உச்சம் பெற்று புஷ்ய யோகத்துக்கு வருகிறார். குரு பூசம் நட்சத்திரத்திற்கு வரும்போது நாடே நன்றாக இருக்கும். அந்த அளவுக்கு செல்வம் வளரும். தங்கம் விலை அபரிமிதான விலை உயர்வை அடையும். இந்தப் புத்தாண்டில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
ரிஷபம் புத்தாண்டு பலன்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு முக்கியமான ஆண்டாக இருக்கும். கடந்த ஆண்டெல்லாம் ஆரோக்கியத்திற்கு பல லட்சங்களை செலவு செய்திருப்பீர்கள். மனதில் வரும் எண்ணங்கள் இனி நல்ல எண்ணங்களாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டு. அண்ணன், தம்பியுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். ஆண் குழந்தைகள் பிறக்கும் யோகம் உண்டாகும்.
திருமண யோகம்
எதிர்பாராத நண்பர் மூலம் வரும் பிரச்சனை நீங்கி அவர்களே உங்களுக்கு நண்பர்களாக மாறி பிசினஸில் பார்ட்னர்களாக மாறும் யோகம் உண்டு. தெய்வ அனுக்கிரகம், முன்னோர்கள் அனுக்கிரகத்தினால் திருமணம் ஏற்படும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். நண்பர்களால் அதிர்ஷ்டம், தொழிலில் விருத்தி ஏற்படும்.
பிரச்சனை தீரும்
ஆரோக்கியத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். அப்பாவுக்கும், உங்களுக்கும் இருந்து வந்த பிரச்சனைகள் செட்டிலாகும். கேஸ் நடந்து கொண்டிருந்தால் அவற்றை பெரிதாக்காமல் தீர்த்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் தீரும். ரிஷபத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கைத் துணைக்கு பெரிய அதிர்ஷ்டம் ஏற்படும். தாய், தந்தையின் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.
வேலைவாய்ப்பு
நிறைய பேருக்கு வெளியூர், வெளிநாட்டில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கையில் இப்போது கிடைக்கும் பதவி உயர்வு பெரிய வெற்றியைத் தரும். ஜூன் மாதத்திற்குப் பிறகு எதிர்பாராத வெற்றியைக் கொடுக்கும். சனியும், குருவும் திரிகோணத்தில் அமரும்போது பெரிய பதவி உயர்வு கிடைக்கும். இரண்டாம் குழந்தை பெறும் யோகம் ஏற்படும்.
நல்ல தீர்வுகள், நல்ல அட்வைஸ்கள் கொடுப்பீர்கள். அருகில் இருக்கும் மடங்கள், மடாதிபதிகளிடம் ஆசிர்வாதம் பெறுவது, ராகவேந்திரரை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. பணவரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சந்தோஷம் ரீதியாக 85 சதவீதம் நன்றாக உள்ளது. பொருளாதார ஏற்றம் 80 சதவீதம் சூப்பராக இருக்கும்.












Click it and Unblock the Notifications