Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி 2023: தேடி வந்து கடிக்கும் விஷ வண்டு.. வாட்டி வதைக்கும் தீராத நோய்கள்..பரிகாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனிதர்களுக்கு தோன்றும் நோய்களுக்கும் கிரகங்களின் பெயர்ச்சிக்கும் தொடர்பு உள்ளது. நோய்களால் பாதிக்கப்பட்டவர் மருத்துவர்களிடம் செல்லும் அதே நேரத்தில் பரிகாரத்திற்காக ஜோதிடரிடம் செல்கின்றனர். ராகு பகவான் சஞ்சாரம் சிலரின் நோய்களை தீர்க்கும். சிலருக்கு நாட்பட்ட தீராத நோய்களை உண்டாக்கும். விஷப்பூச்சிகள், விஷ வண்டுகள் கடிப்பது, அதனால் உடல் நலக்குறைவு ஏற்படுவது, விஷப் பாம்புகள் கடிப்பதன் மூலம் பெரும் துன்பம் அடைந்து உயிரிழப்பது போன்ற செயல்களும் ராகுவால் தான் நடக்கின்றன.

Rahu Kethu peyarchi 2023: Astrological Effects of Rahu and ketu and Remedies

ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாதம் நிகழ உள்ளது. ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே அதன் பலனை வெளிக்காட்ட ஆரம்பித்து விடும். ஐம்பது வயது வரை கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவர் திடீர் என கோடீஸ்வரர் ஆக மாறிவிடுவார். இதற்குக் காரணம் அவரது ஜாதகத்தில் விபரீத ராஜயோகம், நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டிருக்கும். ராகுவும் சிலருக்கு ராஜயோக பலன்களைத் தருவார். நவ கிரகங்கள் அமர்ந்து அவை பார்க்கும் வீடுகளைப் பொறுத்தும், இணைந்திருக்கும் கிரங்களைப் பொறுத்தும் ஒருவருக்கு யோகங்களும், பலன்களும், நன்மை தீமைகளும் நடைபெறும். வாழ்க்கையில் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் ஒருவர் திடீர் கோடீஸ்வரர் ஆவதற்கு ராகு பகவானும் காரணமாக இருப்பார்.

ராகு தரும் யோகம்: ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ராகுபகவான் லக்ன கேந்திரத்தில் அமர்ந்து அந்த வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும் ராஜயோக பலனை ராகு ஏற்படுத்துவார் இந்த யோகம் ரிஷபம்,மிதுனம்,கன்னி,துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னத்திற்கு மட்டுமே ராஜயோக பலனை ஏற்படுத்துவார் மற்ற லக்னத்திற்கு பஞ்சமாதிபதி சாரம் பெற்று குருவால் பார்க்கப்பட்டால் ஓரளவு யோகத்தை ராகுபகவான் செய்வார். பொதுவாக ராகுபகவான் பஞ்சமாதிபதி சாரம் பெற்று அந்த வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் ராஜயோக பலனை ஏற்படுத்துவார் அதேபோல் மிதுனம்,துலாம்,கும்பம் ஆகிய வீட்டில் சுயசாரம் பெற்று அந்த வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் ராஜயோக பலனை ராகு ஏற்படுத்துவார்.

ராகு திசையில் ராஜ யோகம்: ஒருவருக்கு ராகு திசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும். ராகு நின்ற வீட்டதிபதியின் நிலையை கொண்டே ராகு அதன் பலனை தருவார். ராகு பகவான் பலமாக அமையப் பெற்று குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் நல்ல உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பாக இருக்க கூடிய ஆற்றல் உண்டாகும். இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை நல்ல அறிவாற்றல், புத்தி கூர்மை, ஸ்பெகுலேஷன் மூலம் தன சேர்க்கை உண்டாகும். நடுத்தர வயதில் நடைபெற்றால் எதிர்பாராத தனசேர்க்கை, புதிய வாய்ப்புகள் தேடி வரும் அமைப்பு, எதிர்பாராத உயர்வுகள் உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் வசதி வாய்ப்புகள், எதிர்பாராத பணவசதி, தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

காலசர்ப்ப யோகம்: நவ கிரகங்களில் ஏழு கிரகங்களும் ராகு கேதுவிற்குள் அமர்ந்தால் கால சர்ப்ப யோகம் உண்டாகும் அதாவது ராகுபகவான் ரிஷபம்,மிதுனம்,கன்னி,துலாம் கும்பம் ஆகிய நட்பு வீடுகளில் ராகு அமர்ந்து அதற்கு அடுத்தடுத்த வீடுகளில் கிரகங்கள் அமர்ந்தால் காலசர்ப்ப யோகம் உண்டாகும். ரிஷபம்,துலாம்,மிதுனம்,கன்னி, மகரம் கும்பம் ஆகிய லக்னகாரர்களுக்கு மட்டுமே முழுயோகத்தை கொடுப்பார் ராகு பகவான். மற்ற லக்னகாரர்களுக்கு ராகுவால் காலசர்ப்ப தோஷம் உண்டாகும்

விபரீத ராஜயோகம்: ராகுபகவான் 6,8,12 ஆம் வீடுகளில் அமர்ந்து அந்த வீட்டின் அதிபர்கள் மாறிமாறி வீடுகளில் அமர்ந்து குரு அல்லது சுக்கிரனால் ராகுவை தொடர்பு கொண்டால் இந்த யோகம் உண்டாகும் மேலும் ராகுபகவான் சுபத்துவமடைந்து 6,8,12 ஆம் அதிபதிகள் சாரம் பெற்று குரு அல்லது சுக்கிரனால் பார்க்கப்பட்டாலும் இந்த யோகம் உண்டாகும் இந்த யோகம் அனைத்து லக்னகாரர்களுக்கும் உண்டு. ராகுபகவான் மேஷம், சிம்மம், தனுசு, ஆகிய வீடுகளில் அமர்ந்து அந்த வீட்டின் அதிபதிகள் மாறிமாறி 6,8,12ல் அமர்ந்தாலும் ஓரளவு விபரீத யோகத்தை செய்வார் ஆனால் அந்த வீட்டின் அதிபதிகளான ராஐ கிரகங்களான சூரியன்,செவ்வாய்,குரு ஆகியோரால் சுபத்துவமடைந்து பார்க்கப்படால் விபரீத ராஜயோகம் உண்டு ஆனால் ராகுவால் ஏற்படும் விபரீத ராஜயோகங்கள் இறுதியிலே கானல்நீராக மாறிவிடும் இல்லாவிடில் தவறான வழிகளில் யோகம் வேலைசெய்யும் இதில் லக்ன திரிகோண அதிபதிகள் அல்லது லக்ன சுபர்களின் தொடர்பு ராகுபகவானிற்கு அவசியமாகும்.

நாக தோஷம்: ராகு-கேதுவின் கோச்சார அமைவுகளை வைத்து தான் ஒருவருடைய ஜாதகத்தில் நாகதோஷத்தை கணிப்பார்கள். நம்மை தீண்டாத பாம்புகளை அடித்துக்கொன்றாலும், நாக தோஷம் ஏற்படும். பாம்புப் புற்றை எக்காரணம் கொண்டும் சிதைக்கக் கூடாது. பாம்புப் புற்றில் பல ஆயிரம் ஜீவராசிகள் வாழும் அவற்றை பாழ்படுத்தக்கூடாது. பாம்புப் புற்று ஒரு தெய்வீக அடையாளம். பாம்பு புற்றை அறியாமல் இடித்தாலும் சர்ப்ப தோஷம் உண்டாகும். நாகதோஷம் உள்ளவர்களுக்கு திருமணத்திற்க்கு முன்பே நாகதோஷ நிவர்த்தி பரிகாரங்களை செய்யவேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு செய்தால் நல்ல வரனும் நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கை அமையும்.

புதையல் கிடைக்கும் யோகம்: சர்ப்ப கிரகமான ராகுவின் பார்வை, சஞ்சாரம் ஒருவரின் ஜாதகத்தில் சரியாக அமைந்திருந்தால் எதிர்பாராத வகையில் திடீர் தலைவர், திடீர் உயர் பதவி கிடைக்கும். வெளிநாடுகளுக்கு சென்று வரும் வாய்ப்பு அமையும். ஆபத்தான காடு, மலைகளில் சுற்றிவருவார். கெட்ட நண்பர்கள் மூலமாக தனக்கு சாதகமான காரியங்களை சாதித்துக் கொள்வார். மாய, மந்திர வித்தைகள் மூலம் நினைத்ததை சாதிப்பார். தந்தை வழி, தாத்தா மற்றும் பாட்டி சொத்துகள் கைக்கு வரும். பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றை கற்றும், கொடூர மிருகங்களை வைத்து வித்தை காட்டியும் மகிழ்வார். நினைத்து பார்க்க முடியாத புதையல் கிடைக்கும். பல கோடி ரூபாய்களுக்கு பினாமியாக மாறுவது அல்லது கீழே கிடந்து எடுப்பது போன்றவை ராகுவால்தான் வாய்க்கும். ராகுவினால் ஏற்படும் நோய்கள் பற்றியும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

Rahu Kethu peyarchi 2023: Astrological Effects of Rahu and ketu and Remedies

நிலநடுக்கம், பூகம்பம்: ராகு கொடிய குரூரர் கிரகம் என்பதால், ராகு எந்த கிரகத்துடன் சேர்ந்தாலும் அந்த கிரகத்தின் காரகத்தை கெடுக்கும் வகையில் செயல்படுவார். பொதுவாக ராகு சுயசாரம் அல்லது கேதுசாரம் பெற்று இருந்தால் ராகுவின் உக்கிரம் அதிகமாகும். இதனால் உலகில் புயல் மூலம் சூறாவளி காற்றைக் கொடுத்து பொதுமக்களை அலற வைப்பார். மருந்தே கண்டுபிடிக்க முடியாத நோய்களை கொடுப்பார். காற்று மூலம் விஷ வாயு கொடுத்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்குவார். பூமிக்கு அடியில் நடக்கும் சுரங்கப் பணியில் உயிரிழப்பு, எரிமலைகள், பூகம்பம் அனைத்துமே ராகுவே காரண கர்த்தாவாக இருக்கிறார். விஷ பூச்சிகள் நிறைந்த காடுகள் அழிவதும், பாம்புகள் நிறைந்த காடுகள் அழிவதும், காட்டில் உள்ள விலங்குகள் நகரத்திற்குள் வருவதும், விந்தையான சம்பவங்கள் மூலம் மக்களை கிலி அடிப்பது போல் மிரள வைப்பது எல்லாம் ராகு கிரகத்தால் தான் நடக்கின்றன.

தோல்நோய்கள் ஏற்பட காரணம்: சூரியன் புதனுக்கு அடுத்தபடியாக தொழுநோய்க்கு முக்கிய அங்கம் வகிப்பவர்கள் ராகு மற்றும் கேது ஆவர். உடலில் கருப்பு மற்றும் வெள்ளை நிற புள்ளிகள் தோன்றுவது, தோலின் அடுக்குகளிலுள்ள அனஸ்தீஷியாவை செயலிழக்க செய்வதால் தொழுநொய் ஏற்பட்டவர்களுக்கு உடல் மரத்து வலி மற்றும் உணர்ச்சியற்ற நிலை ஏற்படும். மேலும் அங்கஹீனம், உருவ மாற்றம், நுண்ணுயிர் கிருமியினால் காற்றில் பரவுதல் போன்றவற்றிற்கு ஸர்ப கிரகங்களே காரகர் ஆவர். மேலும் ஒருவரின் கர்ம வினைகளை ஜாதகத்தில் தெரிவித்து அதை அனுபவிக்க செய்பவர்களும் இவர்களே!

கண் பார்வை பாதிப்பு: ராகு பகை ராசியான மேஷம், கடகம், சிம்மம் ஆகிய ராசியில் நின்று இருந்தால், மங்கலான பார்வை, என்ன நோய் என்று இனம் காண முடியாத அளவில் நோய்கள் வரக்கூடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். தந்தை வம்ச வழி நோய்கள் வரக்கூடும். கண்களில் தூசி, துரும்பு பட்டு கண்ணீர் கசிய வைப்பது ராகுவே. மங்கலான பார்வைத் திறன், மருத்துவர்களால் அறியப்படாத புதுவகையான நோய்கள், காற்றில் பரவி வரும் நோய்கள், துஷ்ட கனவுகள், நமது உடலில் பித்த நீர் உற்பத்தியாக வைப்பது போன்ற வேலைகளை ராகு பகவான் தான் செய்கிறார். ராகு தனது பகை கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாயுடன் இணைந்து இருந்தால், ஜாதகருக்கு கண் பார்வை கோளாறு இருக்கலாம். தண்ணீரில் கண்டம் உருவாகலாம். இடி, மின்னல், மின்சாரம் மூலம் பாதிப்பு வரலாம்.

புற்றுநோய் பாதிப்பு: ராகு நீச்ச ராசியான ரிஷப ராசியில் ராகு நின்று இருந்தால், சுவாசக் கோளாறு அவ்வப்போது வரும். விஷ வாயு தாக்கலாம். பீடி, சிகரெட் குடிப்பதால் வரக்கூடிய புற்றுநோய்களுக்கு ராகுவே காரணம். ராகு குரூரர் தன்மை கொண்ட கிரகம் என்பதால் 6, 8,12ல் மறைவு பெற்றால் அதிர்ஷ்டம் தரும், அதே நேரம் எட்டாம் இடத்தில் நின்றால் நெஞ்சில் கபம் கட்டும். இதன் மூலம் சுவாசம் தடைபடும். உண்ணும் உணவு நஞ்சு ஆகும். சிலருக்கு விந்து பாதிக்கும். விந்து உற்பத்தி ஆகி செல்லும் குழாய்களில் அடைப்புகள் உருவாகும். தீராத காம இச்சை உடையவர்களாக இருப்பர். ராகு கிரகத்திற்கு பகை கிரகங்கள் அல்லது பாதகாதிபதிகள் பார்வை இருந்தால், ஜாதகருக்கு நோய் பயம் வாட்டி எடுக்கும். காற்றில் பரவும் தொற்று நோய்கள் தாக்கக் கூடும். அடிக்கடி மூச்சு திணறல் உண்டாகும். பெரு குடல், சிறுகுடல் வழியாக வாயுத் தொல்லை இருக்கக் கூடும். இதனால் மலச்சிக்கல் உண்டாகும்.

விஷ வாயு பாதிப்பு: மாந்திரீகம், தாந்திரீகம், மாய மந்திரங்களால் உண்டாகும் கெடுதல், மருத்துவ பரிசோதனையில் கண்களுக்கு புலப்படாத நோய்களை வெளிக்காட்டி கொடுப்பது, விஷவாயு, ரசாயன வாயு, செப்டிக் டேங்க் வாயு, கிணறு வெட்டும் போது வெளிப்படும் விஷ வாயு மூலம் உண்டாகும் பாதிப்புகள், கடல் அலைகளில் சிக்கி மூழ்கி இறப்பது, ஒரு வருக்கு வந்த கொடிய நோயானது தொற்றாக பரவுவது, பட்டாசு போன்ற ஆயுத கிடங்கு, துப்பாக்கி தொழிற்சாலையில் வேலைக்காரணமாக உண்டாகும் விபத்துகள், எதிர்பாராத விதமாக வாந்தி, மயக்கம், மூச்சு விடுதலில் சிரமம் போன்றவைகளுக்கு காரணமாக இருப்பவர் ராகு தான். நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் புற்றுள்ள அம்மன் கோவில்களுக்கு சென்று பாலபிஷேகம் செய்து வணங்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+