ராகு கேது பெயர்ச்சி: கும்பம் ராசிக்கு பிரச்னைக்கு மேல் பிரச்னை.. இதுக்கு எண்டே இல்லையா
ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி உலகம் முழுவதும் உற்று கவனிக்கப்படுகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராகு கேது பெயர்ச்சி இன்று நடைபெறுகிறது. ராகு கேது பெயர்ச்சி உலகளவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், இது கும்பம் ராசியில் ஏற்படுத்தவுள்ள பலன்கள் ஆகியவற்றை இந்தக் கட்டுரையில் காணலாம்.
ராகு - கேது என்பதை சர்ப்ப கிரகங்கள். இதை நிழல் கிரகங்கள் என்றும் சொல்வார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி 26.4.2025 தேதியும், திருக்கணிதப்படி இன்று (18.5.2025) ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அதன்படி ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்கள்.

தாக்கம்
மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகரும். ராகு - கேது மட்டும் பின்னோக்கி நகரும். பொதுவாக ராகு -கேதுவுக்கு ஸ்தான பலம் இல்லை. கும்பம் என்பது சனி வீடு. தன்னுடைய சதய நட்சத்திர வீட்டில் ராகு பெயர்ச்சி ஆகிறார். அதனால் அங்கு ராகுவின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதேபோல கேது பகவான் தன்னுடைய மகம் நட்சத்திரம் உள்ள சிம்மம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார். இதுவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
போர்
போர் பதற்றம், இயற்கை சீற்றங்கள், பங்குச்சந்தை பின்னடைவு, தங்கம் விலை உயர்வு, அனைத்து வகையான வரிகளும் உயர்வு, ஆளும் அரசியல் தலைவர்களின் நிர்வாக சொதப்பல், கடன் சுமை என்று ராகு கேது கிரகங்களால் உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதேபோல திடீர் பணக்கார யோகமும் ஏற்படும். இந்த ராகு கேது பெயர்ச்சி கும்பம் ராசிக்கு கொடுக்கவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் உங்களின் ஜென்ம ராசிக்குள்ளும், கேது பகவான் ஏழாம் இடத்துக்கும் பெயர்ச்சி ஆகிறார். இதற்கு முன்பு ராகு இரண்டாம் இடத்திலும், கேது பகவான் எட்டாம் இடத்தில் இருந்து ஏராளமான பிரச்னைகளை கொடுத்திருப்பார்கள். உத்யோகம், குடும்பம், ஆரோக்கியம் எல்லாவற்றிலும் பிரச்னை மற்றும் வீண் விரயங்கள் ஏற்பட்டிருக்கும்.
சொத்து
சுப காரிய தடைகள் நீங்கும். நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜென்ம சனியில் இருந்து விலகி பாத சனியில் இருக்கிறீர்கள். குருப்பெயர்ச்சி உங்கள் ராசியை பார்ப்பது நல்ல பலன்களை கொடுக்கும். பூர்விக சொத்தில் இருந்த சிக்கல்கள் விலகும்.
உத்யோகம்
கல்வி, உத்யோகம் தொடர்பாக வெளிநாடு செல்ல முயற்சி செய்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு என்று திறமைக்கேற்ற அங்கீகாரங்கள் கிடைக்கும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். ஜென்மத்தில் உள்ள ராகுவை குரு பார்த்துக்கொண்டே இருப்பார் என்பதால் மலை போன்ற பிரச்னைகள் பனி போல விலகும்.
பயணம்
அடுத்த ஒரு வருடம் சமூகத்தில் பெயர், புகழ் உயரும். வாழ்க்கை தரம் உயரும். இறங்கிய காரியங்களில் வெற்றிகள் உருவாகும். பயணங்கள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்ல ஏற்றத்தை கொடுக்கும்.
கவனம்
ராகு ஜென்மத்தில் வந்திருப்பதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். ஆசையை தூண்டுவார். வாழ்க்கை துணையுடன் மனக்கசப்பு ஏற்படும். உத்யோகம், தொழிலில் பணிச்சுமை அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மனம் நிம்மதி பாதிக்கப்படும். உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும்.
பரிகாரம்
முதலீடு செய்வதற்கு முன்பு நன்கு யோசிக்க வேண்டும். ஏழரை சனியும் நடந்து கொண்டிருக்கிறது. குடும்பத்தில் வயதானவர்கள் இருந்தால் அவர்களுக்காக வீட்டில் பரிகார ஹோமங்கள் செய்யலாம். குல தெய்வ வழிபாடு மற்றும் கும்பகோணம் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமிகள் கோயில் சென்று வழிபடலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications