ராகு கேது பெயர்ச்சி: மேஷம் ராசியின் ஆட்டம் ஆரம்பம்.. குரு, ராகுவால் வாழ்க்கையே மாறப்போகுது

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டில் வருடாந்திர கிரகங்கள் என்று சொல்லக்கூடிய சனி, குரு, ராகு கேது ஆகிய 3 பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த மூன்று கிரகங்களின் மாற்றங்களுமே உலக மக்கள் அனைவராலும் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது. பொதுவாக ராகு கேது பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் அதிகம். காலபுருஷ ராசி 12 ஆம் வீடு மீனத்தில் இருந்து 11 ஆம் வீடான கும்பத்துக்கு லாப ஸ்தானத்துக்கு ராகு வரப் போகிறார். ராகுவைப் போல கொடுப்பானில்லை. கேதுவைப் போல கெடுப்பானில்லை எனும் வாக்கு உண்டு.

rahu-ketu-peyarchi-lets-see-what-kind-of-benefits-and-remedies-for-aries-people-during-rahu-ketu-p

ராகு கேது

ராகு கிரகம் போக காரகன், கேது கிரகம் ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறது. ராகு பகவான இந்த ஆண்டு குருவின் விசேஷ பார்வையில் வந்து அமரப் போகிறார். 12 ஆண்டுகளுக்கு 3 முறை மட்டுமே இதுபோன்று நிகழும். ராகு சுப, அசுப இரு பலன்களையும் கொடுப்பார். தற்போது குரு பார்வை இருப்பதால் நற்பலன்கள் அதிக அளவில் கிடைப்பதற்கான காலகட்டமாக இருக்கும்.

ராகு கேது பெயர்ச்சி

ராகு கேது பெயர்ச்சி என்பது ஒவ்வொரு ஜாதகரின் வாழ்க்கையையும் திருப்பிக் கொடுக்கக்கூடிய வலிமையான கிரகங்களாகும். 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீனம் ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீனம் ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும்.

அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் மேஷம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இதுவரை லாப ஸ்தானத்தில் சனி பகவான் இருந்தார். தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்திருந்தார். ஓரளவுக்கு வருடத்தின் தொடக்கம் முதலே அனுகூலமான பலன் கிடைத்திருக்கும். இருப்பினும், இடையில் குரு வக்கிரம், சனி வக்கிரம் அடைந்ததால் மேஷ ராசிக்காரர்கள் நிறைய பிரச்சனைகளை சந்தித்திருப்பார்கள். பணம், ஆரோக்கியம் விஷயத்தில் பல்வேறு சிக்கல்கள் உண்டாகியிருக்கும்.

11 ஆம் பாவத்தில் சனி பகவான் அமர்ந்து 3 ஆவது பார்வையான சனி பார்த்ததால் எடுத்த ஒவ்வொரு காரியத்திலும் நிறைய தாமதங்களை சந்தித்திருப்பார்கள். உடல் ரீதியாக குறிப்பாக பாதத்தில் நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும். 12 ஆம் பாவத்தில் அமர்ந்திருந்த ராகு பகவானே பல நிம்மதிகளை கெடுத்து வந்திருப்பார். தற்போது ராகு பகவான் 11 ஆம் இடம் எனும் லாப ஸ்தானத்துக்குச் செல்கிறார்.

பிரச்சனைகள் தீரும்

12 ஆம் இடத்துக்கு விரைய சனியாக சனி பகவான் வருவதாக மைனஸாக நினைத்தாலும், ராகு பகவான் லாப ஸ்தானத்துக்கு செல்வது பிளஸ்ஸாக இருக்கும். ராகு பகவானால் நிறைய வம்பு, வழக்குகள் பிரச்சனைகள் எல்லாம் தீரும். இனி நன்றாக தூக்கம் வரும். குரு பகவான் 9 ஆம் பார்வையாக ராகுவைப் பார்ப்பதால் நினைத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். 6 ஆம் பாவத்தில் அமர்ந்த கேது பகவான் 5 ஆம் இடம் என்று சொல்லக்கூடிய சிம்மத்தில் வந்து அமர்ந்திருக்கிறார்.

யோகம்

குரு உங்களுக்கு பாக்கியாதிபதி என்பதால் ராகு வந்து அமரும்போது பாக்கியங்கள் கிடைக்கும். சொந்த வீடு, கார் வாங்கும் யோகம் உண்டாகும். கோயில் திருப்பணிகளைச் செய்யும் யோகம் உண்டாகும். வருமானம் பல வழிகளில் உங்களுக்கு கிடைக்கும். விரைய சனியாக இருந்தாலும் நல்ல வருமானம் வரும். அதனை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

லாபம் கொட்டும்

இடம் பூமி தொடர்பான விஷயங்களில் இருக்கும் வில்லங்கம், பிரச்சனைகள் அனைத்தும் தீரும். லாபம், நினைத்த காரியத்தில் வெற்றி, அடுத்தகட்டத்துக்கு முன்னேறுவது, லாபம் பெறுவது, வருமானத்தைப் பெருக்குவது போன்றவை நடக்கும்.

எச்சரிக்கை

சிம்மத்தில் கேது பகவான் அமருவதால் குழந்தைகள் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கல்வி தொடர்பான விஷயங்கள், புதிய நபர்களிடம் பழகுவதை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசாங்கம் தொடர்பான ஆவண விஷயங்களில் கவனம் தேவை.

ராஜயோகம்

கேது சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும்போது, துணை மற்றும் வியாபார கூட்டாளிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். கேது உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பார். இந்த ராகு கேது பெயர்ச்சியில் முதல் தரமான ராஜயோகத்தைப் பெறுவதில் முதல் ராசி என்றால் மேஷ ராசியினர்தான். அருமையான காலகட்டமாக இருக்கும்.

பரிகாரம்

மனித தலை இல்லாத தெய்வங்களை வழிபடுவது நல்லது. ஆஞ்சநேயர், விநாயகர், வாராஹி போன்ற தெய்வங்களை வழிபடுவது அனுகூலமான பலன்களைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+