ராகு கேது பெயர்ச்சி: சனி இடத்தில் ராகு.. மகர ராசிக்கு மீண்டும் மீண்டுமா.. அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா?
ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி உலகம் முழுவதும் உற்று கவனிக்கப்படுகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராகு கேது பெயர்ச்சி இன்று நடைபெறுகிறது. ராகு கேது பெயர்ச்சி உலகளவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், இது மகர ராசியில் ஏற்படுத்தவுள்ள பலன்கள் ஆகியவற்றை இந்தக் கட்டுரையில் காணலாம்.
ராகு - கேது என்பது சர்ப்ப கிரகங்கள். இதை நிழல் கிரகங்கள் என்றும் சொல்வார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி 26.4.2025 தேதியும், திருக்கணிதப்படி இன்று (18.5.2025) ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அதன்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்கள்.

தாக்கம்
மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகரும். ராகு - கேது மட்டும் பின்னோக்கி நகரும். பொதுவாக ராகு -கேதுவுக்கு ஸ்தான பலம் இல்லை. கும்பம் என்பது சனியின் வீடு. தன்னுடைய சதய நட்சத்திர வீட்டில் ராகு பெயர்ச்சி ஆகிறார். அதனால் அங்கு ராகுவின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதேபோல கேது பகவான் தன்னுடைய மகம் நட்சத்திரம் உள்ள சிம்மம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார். இதுவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
போர்
போர் பதற்றம், இயற்கை சீற்றங்கள், பங்குச்சந்தை பின்னடைவு, தங்கம் விலை உயர்வு, அனைத்து வகையான வரிகளும் உயர்வு, ஆளும் அரசியல் தலைவர்களின் நிர்வாக சொதப்பல், கடன் சுமை என்று ராகு கேது கிரகங்களால் உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதேபோல திடீர் பணக்கார யோகமும் ஏற்படும். இந்த ராகு கேது பெயர்ச்சி மகர ராசிக்கு கொடுக்கவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் இரண்டாம் இடத்துக்கும், கேது பகவான் எட்டாம் இடத்துக்கும் பெயர்ச்சி ஆகிறார். இது நல்ல அமைப்பு இல்லை என்றாலும், ராகுவை குரு நேரடியாக பார்ப்பதால் பிரச்னைகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும். வாழ்க்கையை கசக்கி எடுத்த ஏழரை சனி விலகியிருப்பது மிகவும் நல்ல விஷயம்.
பணம்
உங்கள் குழந்தைக்கு இன்னும் பேச்சாற்றால் வரவில்லை என்ற கவலையில் இருந்தால், தற்போது அந்தப் பிரச்னை சரியாகும். கடந்த காலங்களில் இருந்த துன்பங்கள் தவிடு பொடியாகும். தடைகள் விலகும். பழைய பாக்கி வசூலாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். கடன் சுமைகள் குறையும். உத்யோகம், தொழிலில் தெளிவாக இருந்தால் இருப்பதை தக்க வைத்துக் கொள்ளலாம்.
வழக்கு
பூர்விக சொத்தில் இருந்த பிரச்னைகள் சரியாகும். மற்ற கிரகங்கள் பிரச்னைகளை ஏற்படுத்தினாலும், சனி பகவான் மூன்றாம் இடமான உப ஜெய ஸ்தானத்தில் இருந்து நல்ல பலன்களை கொடுப்பார். நிலம், வீடு உள்ளிட்ட சொத்துகளில் இருந்த தடைகள், சட்ட சிக்கல்கள் தீரும். வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
கவனம்
இரண்டாம் இடம் வாக்கு ஸ்தானம் பணம் கொடுக்கல், வாங்கலை குறிக்கும். எட்டாம் இடம் என்பது கஷ்டம், அவமானம், நோய், பகை ஆகியவற்றை குறிக்கும். பிரச்னைகள் போர் மேகங்களாக அணிவகுத்து நிற்கின்றன. புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாமல் இருப்பது நலம். வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும்.
வாக்குறுதி
வாக்குறுதி கொடுக்கும்போது நன்கு யோசிக்க வேண்டும். குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயாரின் உடல் ஆரோக்கியத்திலும் கூடுதல் எச்சரிக்கை அவசியம். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவது, குறுக்கு வழியில் செல்லும் முயற்சிகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். பணம் கொடுக்கல் வாங்கல், இடத்தில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.
பரிகாரம்
எதிர்பாலினர் விஷயத்தில் கவனம் தேவை. வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும். உங்கள் வார்த்தைகளில் காயப்பட்டு உறவுகள், நண்பர்கள் பிரிந்து செல்வதற்கான வாய்ப்பும் உள்ளது. அருகில் உள்ள நரசிம்மர், பெருமாள் மற்றும் ஆஞ்சிநேயர் கோயில் சென்று வழிபடுவது தடைகளை நிவர்த்தி செய்து நல்ல பலன்களை கொடுக்கும்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications