ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: தொட்டதெல்லாம் துலங்கும்.. உச்சத்திற்கு கொண்டு போகும் ராகு யாருக்கு?
சென்னை: நவ கிரகங்களில் ராகு கேது நிழல் கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடையும். ராகு கேது இந்தாண்டு வரும் அக்டோபர் இறுதியில் இடப்பெயர்ச்சி அடைகின்றன. மேஷ ராசியில் உள்ள ராகு மீனம் ராசிக்கும் துலாம் ராசியில் உள்ள கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவதால் மகரம் ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் என்ன பலன்கள் கிடைக்கும் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் தேடி வருமா என்று பார்க்கலாம்.
ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஒன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். மீன ராசியில் அமரும் ராகு குருவைப்போலவும், கன்னி ராசியில் அமரும் கேது புதன் பகவானைப் போலவும் செயல்படப்போகிறார்.

மகர ராசிக்காரர்களே... நவம்பர் முதல் உங்களுக்கு அதிர்ஷ்டமும் யோகமும் செயல்படப்போகிறது. ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு நன்மைகள் அதிகம் நிகழப்போகிறது. இது நாள் வரை உங்கள் ராசிக்கு 4ஆம் இடத்தில் இருந்த ராகு 3ஆம் இடத்திலும் 10ஆம் இடத்தில் இருந்த கேது 9ஆம் இடத்திற்கும் இடப்பெயர்ச்சி அடைய உள்ளனர். 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார்.
"ராகு பதினொன்று,முன்று,ஆறாம் இடத்திற்கு சேரின் பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாகும்.
காரியங்களுண்டாம்,அன்னதானங்களுண்டாம்.வாகு மதி மணமுண்டாம்,வரத்து மேல் வரத்துண்டாம்" என்ற ஜோதிட பாடல் படி ராகு இப்பொழுது யோகத்தை வழங்க போகிறார்.
கடந்த ஒன்றறை ஆண்டுகளாக வரன் தேடியும் அமையாத திருமண நிகழ்ச்சிகள் சுபமாக முடியும். செய்யும் தொழிலிலோ பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். வீடு கட்டும் யோகம் அமையும் வண்டி வாகனம் வாங்குவீர்கள்.
முயற்சி ஸ்தானத்தில் வந்து அமரும் ராகுவினால் புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். உங்களை இது நாள் வரைக்கும் ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து வியந்து போவார்கள்.செல்வாக்கு உள்ள பிரமுகர்கள் தொடர்பு கிடைக்கும். அதனால் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாள் இருந்த பிரச்சனைகள் நீங்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் உடலிலும் உற்சாகம் கூடும். சிலருக்கு வீடு வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி கிடைக்கும்.
மாணவர்களுக்கு இது அருமையான கால கட்டம். தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபங்கள் கிடைக்கும். முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பத்தில் ஒரு பாவி இருந்தால் பலன்கள் இரட்டிப்பாகும் பதவிகள் தேடி வரும் என்று சொல்வார்கள். பத்தாம் வீட்டில் இருந்த கேது பதவியை புரமோசனை கொடுத்தார். இனி பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு கேது பகவான் வருவதால் இதுவரை தடைபட்டு வந்த காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பளமும் கிடைக்கும்.
பெண்களுக்கு புத்திர ஸ்தானம் 9ஆம் பாவம், அந்த 9ஆம் இடத்திற்கு கேது வருவதால் புத்திர பாக்கியமும் அதனால் பெற்றோர்களுக்கு புகழ் பெருமை கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் உற்றார் உறவினர் பகை மறந்து சந்தோசமாக இணையலாம். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். அடகில் இருந்த நகைகளை மீட்கும் நேரம் வந்து விட்டது. மகர ராசிக்காரர்கள் வியாழக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது அவசியம். அதே போல விநாயகரை வழிபட நன்மைகள் நடைபெறும். அதிர்ஷ்டம் உங்கள் வீடு தேடி வரப்போகிறது அனுபவிக்கத் தயாராகுங்கள்.
-
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு












Click it and Unblock the Notifications