ராகு கேது பெயர்ச்சி 2023: தொட்டது துலங்கும்..தொழில், வியாபாரம் வளர்ச்சியடையும் யாருக்கு தெரியுமா?
மதுரை: யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அதிர்ஷ்டத்தை வருமானத்தை அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார் எனவேதான் ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் அக்டோபர் மாத இறுதியில் இடபெயர்ச்சி அடைய உள்ளனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்களை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ராகு கேதுவிற்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ராகு குரு பகவானைப் போலவும் கேது புதன் பகவானைப் போலவும் செயல்படுவார்கள்.

விருச்சிகம்: சர்ப்ப கிரகங்களான ராகு கேது சஞ்சாரம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நன்மையை தரும் வகையில் அமைந்துள்ளது. ஐந்தாமிடம் என்பது புத்திரபாக்கியம்,தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் உல்லாசம் கேளிக்கை அனைத்தும் 5 இடத்தின் காரகத்துவங்கள். இந்த இடத்திற்கு ராகு பகவான் வரப்போவது சிறப்பு. மனதில் இருந்து வந்த கவலைகள் தீரும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு கிடைக்கும்.
லாபம் அதிகரிக்கும்: பொருளாதாரத்தில் மேன்மையையும் சிறப்பையும் அடைவீர்கள். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கவுரவப்பதவி தேடி வரும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. அடிக்கடி ஆன்மீக பயணம் செல்வீர்கள். எதிர்பாராத அளவில் வெற்றிகள் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகும். பிள்ளைகளால் சிறு சிறு சஞ்சலங்கள் வந்து செல்லும்.
தொட்டது துலங்கும்: கேது 11ஆம் அமரப்போவதால் தொட்டது துலங்கும். வியாபாரம் தொழில் வளர்ச்சியடையும். செய்யும் தொழிலை விரிவு படுத்துவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும், மன சஞ்சலத்துடன் இருந்தவர்களுக்கு மன மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கும்.
செலவுகள் குறையும்: தேவையற்ற செலவுகள் குறையும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். இதுவரை தடைபட்ட காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். திருமணம் நடைபெற்று பல ஆண்டு காலமாக குழந்தை இல்லாமல் கவலைப்பட்டு வந்த தம்பதியினருக்கு இந்த ஆண்டு புத்திரபாக்கியமும் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும் இந்த ராகு கேது பெயர்ச்சி தோஷம் நீங்கி சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்யப்போகிறது நிம்மதியை கொடுக்கப்போகிறது.












Click it and Unblock the Notifications