அம்பானியாக மாறப்போகும் கும்ப ராசியினர்.. இனி ராஜயோகம் தான்.. பணம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி வாக்கியத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ராகு கேது என்பது நிழல் கிரகம், சர்ப்ப கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி குரு ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது.

rahu-ketu-peyarchi-palan-lets-learn-about-the-beanefits-of-rahu-ketu-transit-for-kumbam-rasi-peopl

திருக்கணிதத்தின்படி 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மீனம் ராசியில் இருந்து ராகு பகவான் கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது பகவான் சிம்மத்துக்கும் போகிறார்.

ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களும், சில ராசியினருக்கு கெடு பலன்களும் கிடைக்கப் போகின்றன. அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் கும்ப ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்மத்தில் ராகு, 7 ஆம் இடத்தில் கேது இருக்கிறார். உங்கள் ராசிக்கு ராகு வருவதால் காலஹஸ்தி சென்று வருவது மிகவும் நல்லது. ராகு கேதுவை மனதார தரிசனம் செய்வது நல்லது. மன அழுத்தம் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. வயிறு, குடல், கிட்னி, அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் உண்டாகும். உணவு விஷயத்தில் அதிக கவனம் தேவை. பிறர் குடும்ப விஷயத்தில் உங்கள் தலையீடு, உங்கள் குடும்பத்தில் பிறரின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது.

உடல்நிலையில் கவனம்

கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலை, மனைவியாக இருந்தால் கணவனின் உடல்நிலையில் கவனம் தேவை. எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். பாத சனியில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இனி ஏற்றம், அனுகூலம், அதிர்ஷ்டம், சுபிக்ஷம் உண்டாக்கும். பூர்வீகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

தொழில்

புதிய தொழில் நிறுவனம் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். விவகாரத்தை நோக்கி போய்க் கொண்டிருப்பவர்களுக்கு பிரச்சனை சரியாகும். மறுமணம் நடக்கும் யோகம் உண்டு, குழந்தை பாக்கியம் உண்டாகும். மாணவ, மாணவிகள் தங்களுடைய அரியர்ஸ்களை கிளியர் செய்வார்கள்.

வெற்றி நிச்சயம்

பஞ்சம ஸ்தானத்தில் இருக்கும் குரு உங்களுக்கு நல்ல பெரிய உதவிகளைச் செய்வார். இதுவரை இருள் சூழ்ந்த இடத்தில் வாழ்ந்து வந்திருப்பீர்கள். இனி உங்கள் மீது வெளிச்சம் பாயும். அற்புதமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் உங்களுடைய வாழ்க்கையே முற்றிலும் மாறும். எதுவாக இருந்தாலும் கொஞ்சம் கடினமாக இருப்பது போலத் தோன்றும். ஆனாலும் அதனை முடித்துக் கொள்வீர்கள்.

பணவரவு அதிகரிக்கும்

பிள்ளைகள் விஷயத்தில் கோபதாபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் மன சோர்வாக இருந்தாலும் அவர்களை உத்வேகப்படுத்தினாலே போதும். பழைய பகைவர்கள் விஷயத்தில் பேச்சு வார்த்தை நடத்தி சமதானமாகப் போவது ஏற்றத்தை தரும். தொடர்ச்சியாக இருந்த தடைகள் நீங்கும். லாபம் அதிகரிக்கும். அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். பண வரவுக்கான உத்திரவாதம் ஏற்படும். பொருளாதாரத்தில் அபரிமிதமான முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

காதல் அமைப்பில் கவனம்

முதலீடுகள் லாபம் தரவில்லை, நிலம் வீடு விற்கவில்லை போன்ற பிரச்சனைகள் தீரும். பங்குச் சந்தையில் போட்ட பணம் இரட்டிப்பாகும் அமைப்பு உண்டாகும். ஜென்ம ராகுவில் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள், காதல் அமைப்பில் கவனம் தேவை. துர்க்கை கவசம், நரசிம்மர் கவசம் கேட்க கேட்க மனசோர்வு, தூக்கமின்மை நீங்கும். எல்லாவற்றிலும் நிம்மதியும், சந்தோஷமும் ஏற்படும். முட்டி முதல் பாதம் வரை நல்லெண்ணெயை தேய்த்து படுப்பது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+