ராகு கேது பெயர்ச்சி: சிம்ம ராசியினருக்கு அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா?.. முக்கிய பலன்கள் இதோ
ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி வாக்கியத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ராகு கேது என்பது நிழல் கிரகம், சர்ப்ப கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி குரு ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது.

திருக்கணிதத்தின்படி 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீன ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்கும் போகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்மம் ராசியினருக்கு 7 இல் ராகு 1 இல் கேது இருக்கிறார். ஜென்மத்தில் கேது இருப்பதால் குறைந்த ரத்த அழுத்தம், அதீத ரத்த அழுத்தம், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். ராகு கேது ஸ்தலத்துக்கு புகழ்பெற்ற திருத்தலமான திருப்பாம்பரம் ராகு கேது ஸ்தலத்தில் வழிபட்டு, பூஜைகளில் கலந்துகொள்வது நல்லது. அஷ்டமத்தில் சனி இருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது.
அனுகூலம்
நல்ல தூக்கம் மிகவும் முக்கியம். மன அழுத்தங்கள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. வாகனங்களை ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி அதிர்ஷ்டங்கள், அனுகூலங்கள் உண்டாகும். திருமண யோகம் உண்டாகும். திருமண தடைகள் நீங்கும். புத்திர சந்தானம் உண்டாகும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டம்
பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம், முன்னேற்றம், பதவி உயர்வு, தைரியம் ஏற்படும். எல்லாவற்றையும் சமாளிக்கும் மன நிலையைப் பெறுவீர்கள். உங்களுடைய துணை உங்களை தாங்கி பிடிப்பார்கள். அனைத்து காரியங்களுக்கும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். குடும்பத்தில் பெரிய அளவில் அனுகூலம் உண்டாகும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். தைரியமாக முடிவெடுத்து அதில் வெற்றி காணும் யோகம் உண்டாகும். புதிய தொழில்கள் லாபத்தை ஏற்படுத்தும்.
சொத்து சேர்க்கும் யோகம்
உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும், பெரிய பெரிய பொறுப்புகளுக்குச் செல்லும் யோகம் உண்டாகும். பெரிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். சொந்த வீடு வாங்குவதற்கான யோகம் உண்டு. வீடு, வாகனம், மனை, நிலம், சொத்து வாங்கக்கூடிய அதிர்ஷ்டம் உண்டாகும்.
அடுத்தடுத்து நல்ல விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சுப விரைய பிராப்தம் அதிகமாகும். வியாழக்கிழமை, புதன்கிழமைகளில் மதியம் எலுமிச்சை சாதம், ஊறுகாய் தானமாக ஏழைகளுக்கு அளிப்பது நல்ல பலன்களைக் கொடுக்கும். இதன் மூலம் வரும் கஷ்டங்கள் எல்லாம் பனிபோல மறையும்.












Click it and Unblock the Notifications