ராகு கேது பெயர்ச்சி: மேஷம் ராசிக்கு லாபமோ லாபம்.. பணத்தை கொட்டிக் கொடுக்கும் ராகு.. ஒரே குஷிதான்
ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி மே 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி குரு ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. இவை பெரும்பாலும் தீங்கு மட்டுமே விளைவிக்கும் தன்மையுடையதாகும். (Rahu ketu peyarchi palan)

இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும். ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி.
2025 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீன ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீன ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் ராகு அமர்ந்து, குரு பார்வை கொடுப்பதால் பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள். தொழிலே செய்ய மாட்டேனா, எப்போதும் மாதாந்திர சம்பளம்தானா என்று காத்திருப்பவர்களுக்கு, தொழில் தொடங்க வேண்டும் என்று நீண்ட நாள்களாக காத்திருப்பவர்களுக்கு நல்ல தொழில் அமைக்கும் யோகம் உண்டாகும். குழந்தைகளைப் பற்றிய கவலை எல்லாம், குழப்பங்கள் எல்லாம் நீங்கும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். நல்ல மதிப்பெண் எடுப்பார்கள். விரும்பிய துறைகள் கிடைக்கும்.
புதிய கார் வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து பிரச்சனைகள் நிறைய வீட்டில் இருக்கும். சகோதர, சகோதரிகள் பேசாமல் இருந்திருப்பார்கள். எதாவதொரு கெட்ட விஷயத்தில் சந்தித்து அங்கிருந்து சேரும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் இருக்கக்கூடிய மாற்றுக் கருத்துகள் எல்லாம் சரியாகி ஒன்று சேரும் யோகம் உண்டாகும். தொழில் வளர்ச்சி, வியாபார வளர்ச்சி, உத்தியோக வளர்ச்சி, பதவி உயர்வு உண்டாகும்.
நீங்கள் காத்துக் கொண்டிருந்த அனைத்து விஷயங்களும் நடக்கும். லாப ஸ்தானத்தில் ராகு உட்கார்ந்து குரு பார்வை கிடைப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். இந்த காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும். நிறைய பேரின் வீட்டில் சொத்துகளைப் பத்திரப் பதிவு செய்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
பஞ்சம ஸ்தானத்தில் கேது வருவதால் ஆன்மிக பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளையார்பட்டி பரிகாரம் செய்வது உங்களுக்கு அனைத்து பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யும்.












Click it and Unblock the Notifications