Rasi Palan: கும்பம், மீன ராசிக்கு டிசம்பரில் அடிக்கும் ஜாக்பாட்.. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்
Rasi Palan: டிசம்பர் 16 முதல் 31 ஆம் தேதி வரையிலான டிசம்பர் மாதத்தில் கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், டிசம்பர் 16 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலான டிசம்பர் மாதத்திற்கான கும்பம், மீனம் ராசிக்கான பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு லாபத்திற்கான காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். பணவரவு நன்றாக இருக்கும். முதலீடுகளை செய்வீர்கள். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். புதுவரவு உண்டாகும். ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும்.
எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். யோக பலன்களை அதிகளவில் பெறும் நல்ல காலகட்டம். நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். நரசிம்மர் கவசத்தைக் கேட்பது மன அழுத்தத்தைப் போக்கும். வயிறு தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. ஏழரை சனியின் கடைசி பாகத்தில் இருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது.
ஆரோக்கியத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம், அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் புதிய வரவுகள் உண்டாகும். துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது நல்லது. தினமும் அவர்களுடன் ஆறுதலாகப் பேசுவது நன்மை பயக்கும். தொழிலில் எந்தவித மாற்றங்கள் வந்தாலும் அற்புதமான அமைப்பைத் தரும். பதவி உயர்வு கிடைக்கும். பண வரவு உண்டாகும். சொந்த தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும். அரசு கெளரவம் கிடைக்கும். அரசியலில் அனுகூலம் ஏற்படும். பெரியளவு நம்பிக்கை ஏற்படும். பெயர் புகழ் கிடைக்கும். படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையில் இருப்பவர்களுக்கு யோக பலன்கள் கிடைக்கும். தனிப்பட்ட தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும்.
ஜென்மசனி இருப்பதால் மன அழுத்தம் இல்லாமல் இருப்பது நல்லது. கழிவுப் பாதை, ஜீரண உறுப்பு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. சண்டை சச்சரவுகளில் சிக்காமல் இருப்பது நல்லது. நன்றாக வேர்வை வரும் அளவுக்கு உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும். உறவுகளில் அனுகூலமான அமைப்பு ஏற்படும். ஓரிரு நாள் மருத்துவமனையில் இருந்து குணமாகி வருவீர்கள்.
புதிய தொழில், வியாபாரம், படிப்புகளைத் தொடங்குவது, புதிய உத்தியோகத்திற்குச் செல்லும் உண்டாகும். காளி, சூளி, வாராஹி போன்ற உக்கிர தெய்வ வழிபாடுகள் ஏற்றத்தைக் கொடுக்கும். வாகனங்களில் செல்லும்போது மட்டும் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் பயணிப்பது ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications