Viruchigam: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிகம்.. வரிசையில் நிற்கும் டாப் கிளாஸ் யோகங்கள்
துலாம் ராசி பலன்: குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 8 முதல் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
குரு பூசம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யுக்கூடிய உன்னதமான குருபுஷ்ய யோகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக அக்டோபர் 8 ஆம் தேதி முதல் சனி குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். நவம்பர் 25 ஆம் தேதி வரை சனி வக்கிரமாகியும், அதற்கு பின்னர் வக்கிர நிவர்த்தியாகியும் சஞ்சாரம் ஆகிறார்.

வக்கிர கிரகம்
நவம்பர் 25 வரை சனி வக்கிரம் என்பதால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் அல்லது மீனம் ராசியில் உங்களுக்கு வக்கிரமான கிரகம் இருந்தால் அதிர்ஷ்டத்தை கண்டிப்பாக கொட்டிக் கிடக்கும். வக்கிரமாக கிரகம் இல்லையென்றால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நவம்பர் 25 ஆம் தேதிக்குப் பின்னர் சனி வக்கிர நிவர்த்தி ஆன பிறகு அதே பூரட்டாதி நட்சத்திரத்தில் உத்திரட்டாதியை நோக்கிச் செல்லும். அதற்குப் பிறகு கிரகங்கள் வக்கிரமாக இல்லாத ராசியினருக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கும்.
குருவின் நட்சத்திரத்தில் பயணக்கும் சனி வக்கிரம், சனி வக்கிர நிவர்த்தி ஆகிய இந்த அற்புதமான காலகட்டத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி, லக்கினக்காரர்களுக்கு பஞ்சம ஸ்தானத்தில் சனி வக்கிரமடைகிறது. கண்டிப்பாக ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமணத்திற்கு நல்ல மணமகன் தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல மணமகன் கிடைப்பார்கள். வெளிநாட்டில், வெளியூர் மணமகன் கிடைக்கும். யோகம் உண்டாகும். உங்கள் முன்னோர்களே திரும்பி வந்து பிறக்கும் யோகம் உண்டாகும்.
சொத்துகள் யோகம்
நிறைய பேர் வீடு, நிலம், சொத்துக்கள் வாங்கும் உண்டாகும். வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளுக்காக நீங்கள் முயற்சி செய்யும் விஷயங்கள் கண்டிப்பாக நடக்கும். பஞ்சம ஸ்தானம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம். பூர்வ புண்ணியம் என்பது முன்ஜென்மத்தில் நாம் செய்திருக்கும் புண்ணியங்கள் எல்லாம் குருவின் ரூபத்தில் நமக்கு நடக்கும் யோகம் உண்டாகும்.
நல்ல எண்ணங்கள்
குரு என்பவன் மங்கள காரகன், சுப காரகன். குழந்தை பாக்கியம் உண்டாகும். மனதில் நல்ல எண்ணங்கள் உண்டாகும். வீட்டில் பூஜை, ஹோமங்கள், புணஸ்காரங்கள், மடாதிபதிகள் வருவது, சந்நியாசிகள் வரும் யோகம் உண்டாகும். அற்புதமான காலகட்டமாக இருக்கும். கெட்ட விஷயங்கள் எல்லாம் நீங்கும். கெட்ட சகவாசங்கள் நீங்கும்.
வெற்றி
தினந்தோறும் தவறு செய்பவர்கள் இனி அந்த விஷயத்தை செய்யக் கூடாது என்ற மன மாற்றம் தோன்றும். இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களில் எல்லாம் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்க்காத புரோமோஷன் கிடைக்கும். நல்ல தொழில்கள் கிடைக்கும். கலைகளில் இருப்பவர்களுக்கு புதிய ஆஃபர்கள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
அனுகூலம்
எல்லா விஷயங்களிலும் திருப்தி அடைவீர்கள். எதிலும் குழப்பம் ஏற்படாது. குடும்பம், குழந்தை, திருமணம் என சகலமும் நடக்கும். கவலைப்படவே தேவையில்லை. உடனடியாக கடன் கிடைக்கும். நிறைய மாற்றங்கள் உண்டாகும். இவ்வளவு நாள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம விமோர்சனம் ஏற்படும். பண வரவு அற்புதமாக இருக்கும்.
வழிபாடு
வியாழக்கிழமை தோறும் அடுத்த நான்கு மாதங்களுக்கு மதிய வேளையில் விரதம் இருப்பது, நான் வெஜ் சாப்பிடுவதை விடுவேன் என்று வேண்டிக் கொள்வது நன்மை பயக்கும். நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டம் என்பதால் இதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
-
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
ரிஷப ராசிக்கான குருப்பெயர்ச்சி 2026: கடகத்தில் வரும் குரு.. அள்ளிக் கொடுக்கும் யோகம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications