ஆவணி மாத பலன் 2025: ரிஷப ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. பண விஷயத்தில் ரொம்ப கவனம்
Aavani matha palan: ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டின் ஆவணி மாதத்தில் ரிஷப ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள், என்னென்ன நன்மைகள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. சூரியனின் இயக்கத்தை வைத்தே தமிழ் மாதங்கள் ஆரம்பமாகின்றன. அதன்படி, தலைமை கிரகமான சூரியன் ஆட்சி என்கிறது உயர்நிலை அமைப்போடு சிம்மத்தில் வலுவாக இருக்கப் போகிறார். இது விசேஷமான அமைப்பாகும். குரு மிதுனத்திலும், சனி மீனத்திலும், சுக்கிரன், புதனின் இயக்கங்கள் கடகத்திலும், சிம்மத்திலும் மாறியிருக்கின்றன.

கன்னியில் செவ்வாய் இருப்பது நல்ல விசேஷமான நிலையாகும். புதனில் குருவும், செவ்வாயும், கடகத்தில் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பது நல்ல அமைப்பாகும். கும்பத்தில் இருக்கும் ராகுவை குரு பார்ப்பது நல்ல மாற்றங்களைத் தரும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கிறது.
இந்த ஆவணி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆரம்பத்தில் 2 ஆம் இடத்தில் இருக்கும் ராசிநாதன் சுக்கிரன் அதற்குப் பிறகு மாதத்தில் பெரும்பகுதியான நாட்களில் மூன்றாம் இடத்தில் இருப்பது மிகவும் நல்ல அமைப்பாகும். 3 ஆம் இடத்தில் ராசிநாதன், 11 ஆம் இடத்தில் சனி இருப்பது மிகப்பெரிய நல்ல அமைப்பாகும். 2 ஆம் இடத்தில் குரு இருப்பதால் ஆவணி மாதத்தில் பண வரவு உண்டாகும்.
தடைகள் நீங்கும்
இதுவரை இருந்து வந்த பண வரவிற்கான தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். மாதம் முழுவதும் சூரியன் ஆட்சியாக 4 ஆம் இடத்தில் இருப்பது சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பழைய கடன்களை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவது போன்ற யோகங்கள் உண்டாகும்.
அற்புதமான பலன்கள்
4 ஆம் அதிபதியான சூரியன் 4 ம் வீட்டிலேயே ஆட்சியாக இருப்பது அற்புதமான பலன்களையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். தாயுடன் இருந்து வந்த மனத் தாங்கல்கள் தீரும். தாயினுடைய பரிபூரண ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய நிலைமையைப் பார்த்து புரிந்து மனமிறங்கும் சூழல்கள் வரும். தாய் பாசத்துக்கு கட்டுப்பட்டவர்களான ரிஷப ராசியினருக்கு பாசமும், ஆதரவும், அதி அற்புதமான நன்மைகளும் கிடைக்கும்.
சிக்கல்கள்
10 இல் குருவின் பார்வையில் ராகு இருக்கிறார். இருந்தாலும் அந்நிய மதம் மற்றும் மொழி பேசுபவர்களால் வேலை, தொழில் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. வெளிநாடு, வெளிமாநிலம், ஏற்றுமதி, இறக்குமதி போன்ற விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. பண விவகாரங்களில் யாரையும் நம்பாமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கவனம்
வேலைக்காரர்கள், உதவி ஆட்கள் போன்றோரையும் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே நம்புவது நல்லது. அதிகமான தொகையைக் கையாளவிடுவது, பெரும் பணத்தை கொடுத்து அனுப்புவது போன்ற செயல்களைத் தவிர்ப்பது நல்லது.












Click it and Unblock the Notifications