Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு நிலத்தில் செம லக் – இது லிஸ்ட்லயே இல்லயே
வார ராசி பலன்: அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 10 முதல் ஐப்பசி 26 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷபம் ராசி மற்றும் ரிஷப லக்னத்தினருக்கு கடந்த காலங்களில் விட்டதை பிடிக்கும் அற்புதமான வாரம் இது. பழைய பாக்கி வசூலாகும். வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தீவிர உழைப்பால் நீங்கள் இறங்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் நல்ல செய்தி வரும். சிலருக்கு அரசு கௌரவம் உண்டு. நிலம், நகைகளில் முதலீடு செய்வீர்கள்.
அரசுத்துறை
உத்யோகம் மற்றும் தொழில் இரண்டிலும் அதி அற்புதமான ஏற்றம் உண்டாகும். மனதில் இருந்த அழுத்தங்கள், பிரச்சனைகள் விலகும். கடல் கடந்து நல்ல செய்தி வந்து சேரும். தொழிலில் லாபம் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருந்த சிக்கல்கள் தீர்ந்து திறமைக்கேற்ற உயர்வு காணப்படும். பண வரவு திருப்தியாக இருக்கும். நிதி நெருக்கடி, கடன் சுமைகள் குறையும். நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். அரசு, அரசியல் புள்ளிகள் ஏற்றம் பெருவார்கள்.
நிலம்
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதிகள், பிரிந்த உறவுகள் ஒன்றிணைவார்கள். பூர்விக சொத்து பிரச்சனை, நிலம் வாங்குதல், விற்பனை செய்தல் ஆகியவற்றில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் இருந்து தடைகள் விலகி நல்ல மாற்றங்கள் தென்படும். வாழ்க்கையில் அடுத்தடுத்து முன்னேற்ற பாதைக்கான வழி பிறக்கும். சுப காரிய தடைகள் விலகும். ஊடகத்துறையில் இருப்போருக்கு புதிய வாய்ப்புகள் வரும்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை எடுப்பது அவசியம். முதுகு, கழுத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக எச்சரிக்கை வேண்டும். குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருத்தல் வேண்டும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது. மகாலட்சுமி வழிபாடும், விஷ்ணு மந்திரங்களை உச்சரிப்பதும் நல்ல பலன்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications