ரிஷப ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியில் திருப்பு முனை - குவியும் சொத்துகள்

Subscribe to Oneindia Tamil

செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூலை 28 முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் செவ்வாய்ப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த செவ்வாய் பெயர்ச்சியின்போது ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய் பகவான் சகோதரக்காரகன். நிலம், பூமிக்கு அதிபதியானவர். ரத்தத்துக்கும், ஆக்ரோஷத்துக்கும், கோபத்துக்கும் காரணமானவர். கட்டிடம், நெருப்பு, சிவப்பு நிறம், உடற்பயிற்சி, விளையாட்டுத் துறைக்கு தொடர்பானது செவ்வாய் கிரகம். இந்த செவ்வாய் பகவான் ஜூலை 28 ஆம் தேதி சிம்மத்தில் இருந்து கன்னி மனைக்கு பெயர்ச்சி ஆகப்போகிறார். செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி வரையிலான 48 நாட்கள் கன்னியில் இருந்து செவ்வாய் பகவான் பலனைக் கொடுக்கப் போகிறார்.

Sevvai peyarchi palangal Rishabam lucky zodiac signs

இந்த காலகட்டத்தில் உத்திர நட்சத்திரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை சூரிய பகவானின் நடசத்திரத்தில் பயணம் செய்கிறார். ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அஸ்தம் எனும் சந்திரனின் நட்சத்திரத்திலும், செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தனது சொந்த நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் பயணம் செய்யப் போகிறார்.

இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி காலகட்டத்தின்போது ரிஷப ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்கள், மாற்றங்கள் நமக்கு கிடைக்கும். எந்த தெய்வ வழிபாடு உகந்தது என்பது குறித்து பார்க்கலாம்.

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் ஏழாம் இடத்துக்கான அதிபதி. அதாவது திருமணம் மற்றும் கூட்டாளிகள் ஸ்தானத்துக்கான அதிபதியாவார். மேலும் விரயத்துக்கும் செவ்வாய் தான் அதிபதி. செவ்வாய் உங்களின் ஐந்தாம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார். அதாவது பஞ்சம ஸ்தானம், பூர்வ புண்ணிய மற்றும் காதல் ஸ்தானத்துக்கு அதிபதியாவார்.

பிரச்னைகள்

இதனால் செவ்வாய் உங்களுக்கு அற்புதமான பலன்களை தரப்போகிறார். செவ்வாய் பகவான் கடந்த சில மாதங்களாக நீட்ச நிலையில் இருந்தார். இதனால் உங்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டிருக்கும். வேகம், விவேகம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். குடும்பத்திலும் முக்கியமாக வாழ்க்கை துணை விஷயத்திலும் பிரச்னைகள் வந்திருக்கும்.

சுப செலவுகள்

தற்போது அந்தப் பிரச்னைகள் முழுமையாக விலக போகின்றன. பூர்விக நிலம், வீடு உள்ளிட்ட சொத்து சார்ந்த விஷயங்களின் பிரச்னைகள், தடைகள் நிவர்த்தியாகும். சகோதர வழியில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை உருவாகும். சுப காரியங்களில் இருந்த பிரச்னைகளும் விலகும். சுப செலவுகள் ஏற்படும்.

தொழில் கூட்டாளிகள்

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். காதல் உறவு வெற்றிகரமாக திருமணத்தில் நிறைவேறும். குழந்தை பாக்கியம் இல்லாதோருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. கணவன் - மனைவி இடையே புரிதல் அதிகரித்து அந்யோநியம் உருவாகும். தொழிலில் கூட்டாளிகள் சார்ந்த பிரச்னைகளும் விலகும்.

சொத்து சேர்க்கை

உங்களின் வாழ்க்கை துணையால் ஆதாயம் உண்டு. சமூகத்தில் மதிப்பு, மரியாதை, புகழ், பெருமை அடைவீர்கள். உத்யோகம், தொழிலில் தனித்த திறமையால் தடம் பதிப்பீர்கள். திடீர் அதிர்ஷ்டத்தால் வாழ்க்கையில் ஏற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும். நிலம், வீடு, வண்டி, வாகனம், ஆபரணங்கள் உள்ளிட்ட சொத்துகள் சேரும்.

தைரியம், தன்னம்பிக்கை

விவசாயத்தில் ஏற்றம் காண்பீர்கள். உங்களின் சுக ஸ்தானம் பலமடைகிறது. விளையாட்டுத் துறையிலும் புதிய சாதனைகள் மூலம் தடம் பதிப்பீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாக மாறும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். துடிப்பான செயல்பட்டால் தொட்டது துலங்கும்.

வெளிநாடு பயணம்

பயணங்களால் ஆதாயம் உண்டு. தொழிலில் புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். நண்பர்களால் நன்மை கிடைக்கும். கலை, ஊடகம் துறையினர் சாதனை படைப்பார்கள். வெளிநாடு சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றியாக மாறும். குழந்தைகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேற்ற்ம காணப்படும்.

கவனம், வழிபாடு

இந்த காலத்தில் கோபம் அதிகமாக இருக்கும். கோபத்தை தவிர்த்து மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டும். வார்த்தைகளை பயன்படுத்துவதிலும் கவனம் வேண்டும். பிரச்னைகள் நீங்கி, காரியங்களில் வெற்றி பெறுவதற்கு உங்கள் வீட்டு அருகே உள்ள கற்பக விநாயகர் கோயில் சென்று வழிபடலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+