Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு இனி எல்லாமே சக்சஸ்.. கோபத்தை மட்டும் தவிர்ப்பது நல்லது
வார ராசி பலன்: ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரையிலான ஆவணி முதல் ஆவணி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு
அந்த வகையில், ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பெற்றோர், வீட்டில் உள்ள பெரியவர்கள், ரத்தபந்த உறவுகளுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரம், தொழில், உத்தியோகம், படிப்பு சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான யோகம் உள்ளது. அந்த தொழிலால் மிகுந்த நம்பிக்கையும், ஏற்றத்தையும் தரும்.
அனுகூலம்
முதலீடுகளுக்கு குறைவிருக்காது. தனிப்பட்ட முறையில் குடும்பத்திலும், வெளியிடத்திலும் செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலை மாற்றுவதற்கான முயற்சிகள் எல்லாம் அனுகூலத்தை தரும். சனி லாபத்தில் இருப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு எல்லாம் அமோகமான வாழ்க்கை இருக்கும். எந்த விஷயத்தை வேண்டுமானாலும் தைரியமாக இறங்கலாம்.
கோபம் வேண்டாம்
சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபப்படுவது, வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வீட்டில் பெற்றோர், பெரியோரின் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறையாக இருப்பது நல்லது. மற்றபடி அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு முன்னேற்றம் நிறைந்ததாக இருக்கும். இதுவரை எடுத்த காரியத்தில் எல்லாம் தடை இருந்திருக்கும். இனி அந்த நிலைகள் எல்லாம் மாறி படிப்படியாக காரியங்களை முடிப்பீர்கள்.
கடன் கிடைக்கும்
கடன் அமைப்பு ஏதாவது ஒரு வழியில் உங்களுக்கு கிடைக்கும். எப்படியாவது ஒரு நல்ல செட்டில்மென்ட், கடன், பணவரவு உண்டாகும் வாய்ப்புள்ளது. தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய யோகம் உள்ளது. பண வரவு நன்றாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
கவனம், வழிபாடு
ரத்தத்தில் பரவும் தொற்றுநோய் விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. லிவர், கிட்னி தொடர்பான செயல்பாடுகள் நன்றாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். விஷ்ணு பகவானை வழிபாடு செய்வது பெரிய நம்பிக்கையையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்












Click it and Unblock the Notifications