Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு தொழிலில் தொட்டதெல்லாம் வெற்றி.. இந்த வாரத்தில் வரும் குட்நியூஸ்
வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளான ஆடி 18 ஆம் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆடி 19 முதல் 25 ஆம் தேதி வரையிலான ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

அந்த வகையில், ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல ஏற்றங்கள் காணப்படும். பண வரவு அபரிமிதமானதாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்களை அடைத்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் கடன்களை அடைத்து முடிப்பதற்கான உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகளைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
நரசிம்மர் கவசம்
மனதில் சம்பந்தமில்லாத குறைகள், மன அழுத்தம் போன்றவை ஏற்படும். ஏதோவொரு மன அழுத்தத்தில் இருப்பீர்கள். இந்த அழுத்தத்தால் சாப்பாட்டை தவிர்ப்பது, யாருடனும் பேசாமல் போன்ற நிலைமைகள் உண்டாகும். நரசிம்மர் கவசத்தை கேட்பது, படிப்பது மேன்மைகளை ஏற்படுத்தும். தொழில் ரீதியாக எடுக்கும் முடிவுகள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள்.
பிரச்சனைகள் நீங்கும்
இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள், பாதிப்புகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். தொட்டதெல்லாம் துலங்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றி பெறுவீர்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இதுவரை முடிக்க முடியாமல் இருந்து வந்த அனைத்து விஷயங்களையும் செய்து முடிப்பீர்கள். இனி அடுத்தடுத்து முன்னேற்றம் ஏற்படும்.
நல்ல செய்தி
உத்தியோகத்தில் இருந்து வந்த இழுபறியான நிலைமைகள் மாறும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வரும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் இருந்த பாதிப்புகள் நீங்கும். நல்ல நம்பிக்கை ஏற்படும். தொழில் அமைப்பு, உத்தியோக அமைப்பில் மாற்றத்துக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
வழிபாடு
தனிப்பட்ட முறையில் செல்வாக்கு ஏற்படும். அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு புகழ், கெளரவம் உண்டாகும். உத்தியோகத்திற்கான படிப்பில் வெற்றி காண்பீர்கள். ஞாயிற்றுக்கிழமை தினங்களில் இஷ்ட தெய்வ வழிபாடு செய்வது நன்மை பயக்கும். உறவினர்களின் உறவை மேன்மை படுத்தும்.












Click it and Unblock the Notifications