Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு 7 நாட்களில் நடக்கும் அற்புதமான மாற்றம்.. தொட்டது துலங்கும் யோகம்
வார ராசி பலன்: ஆகஸ்ட் 10 முதல் 16 ஆம் தேதி வரையிலான ஆடி 26 முதல் ஆவணி 1 வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும்.
அந்த வகையில், ஆகஸ்ட் 10 முதல் 16 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு மன உறுதி மிக அதிகமாக இருக்கும். நீங்கள் விரும்பும் விஷயங்களை செய்து முடிப்பீர்கள். சகோதரர்களுடன் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் எல்லாம் தீரும். உங்களுக்கு நல்ல பெயர் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்து வந்த பாதிப்புகள், மன அழுத்தம் போன்றவை நீங்கும்.
ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் மேம்படும். மன ரீதியான, சிந்திப்பது ரீதியான உறுதி உண்டாகும். குலதெய்வத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது, சென்று வருவது நல்லது. ரத்தத்தில் ஏற்கனவே பாதிப்பு உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு தொடர்பான விஷயங்களில் சிறிய பாதிப்புகள் கூட பெரிய சங்கடங்களை ஏற்படுத்தும்.
பயணங்களால் ஆதாயம்
தொலைதூரத்தில் இருந்து உத்தியோகம், வியாபாரம் தொடர்பான எந்தப் பயணங்கள் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் ரீதியாக இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் காணப்பட்டு வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவுடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது.
வழிபாடு
தாய், தந்தையிடம் உள்ளூரில் இருந்தாலும் வெளியூரிலும் இருந்தாலும் அவர்களுடைய தேக ஆரோக்கியத்தை அதீத கவனத்துடன் பார்த்துக் கொள்வது நல்லது. 80 சதவீத மகிழ்ச்சி குடும்பத்தில் ஏற்படும். பொருளாதாரம் ரீதியாக 75 சதவீதம் நன்றாக இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஆதிநாராயணப் பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications