Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு 7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. கடன் பிரச்சனைக்கு எண்டு கார்டு
வார ராசி பலன்: ஆகஸ்ட் 18 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும்.
அந்த வகையில், ஆகஸ்ட் 18 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு லாபத்தை அதிக அளவில் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். உறவுகள் விஷயத்தில் மேன்மை ஏற்படும். ரத்தம் மூலம் பரவக்கூடிய விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வெளியிடம் மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளால் அனுகூலம் ஏற்படும்.
குட்நியூஸ்
எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் அதீதமான ஏற்றம் கிடைக்கும். மேலதிகாரிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரம் ஆவீர்கள். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். தொடர்ந்து இருந்து வந்த மனம் சார்ந்த கஷ்டங்கள், பணம் சார்ந்த கஷ்டங்கள் அனைத்தும் தீரும் காலகட்டமாக இருக்கும்.
கடன்கள் தீரும்
பழைய கடன்களைத் தீர்த்து முடிப்பீர்கள். வட்டி குறைவான கடன்களை வாங்குவது, நீண்ட நாட்களாக இருக்கும் வீடு நிலத்தை நகையை விற்று கடன்களை செட்டில் செய்வதற்கான வாய்ப்புள்ளது. நிம்மதி ஏற்படும் காலகட்டமாக இருக்கும். தேக ஆரோக்கியத்தில் ரொம்ப நாளாக தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்த விஷயங்களுக்கு மருத்துவமனை, மருந்துகள், அறுவை சிகிச்சை மூலமாக பூரண குணமடையும் .
ஏற்றம்
உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு ரீதியாக நல்ல அனுகூலம் ஏற்படக்கூடிய காலகட்டமாக இருக்கும். உறவு முறையில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். பெற்றோர், பெரியோரின் ஆரோக்கியத்தை மிகுந்த கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. ரத்தபந்த உறவுகளுடன் வாக்குவாதம், சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது.
வழிபாடு
உறவினர்களிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் கொஞ்சம் இணக்கமாகச் செல்வது நல்லது. உணர்ச்சிவசப்படுவது, பதற்றப்படுவது, கோபப்படுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலங்கள் காணப்படும். சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். குலதெய்வ வழிபாடு ஏற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.
-
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications