Rasi Palan This Week: ரிஷப ராசி பிரச்சனைக்கு எல்லாம் எண்டு கார்டு.. இனி அதிர்ஷ்டம் மட்டுமே

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rishabam-weekly-rasi-palan-what-kind-of-benefits-taurus-rishabam-people-will-get-from-september-2

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. இந்த வாரத்தில் செப்டம்பர் 22 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. செப்டம்பர் 22, புரட்டாசி 6 முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரைக்கு வழிபாடு செய்யப்படும். அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 22 முதல் 28 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் படிப்படியாக மாறும். இதுவரை தடையாக விஷயங்கள் எல்லாம் நீங்கும். பிள்ளைகளிடத்தில் மட்டும் கோபத்தைத் தவிர்த்து இனிமையான வார்த்தைகளைப் பேசுவது நல்லது.

கடன்கள் தீரும்

பிள்ளைகளின் விஷயத்தை ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிப்பதற்கான உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். யோக பலன்கள் அதிகளவில் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். தொடர்ச்சியாக இருந்து வந்த மன பாரங்கள், கஷ்டங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.

சிக்கல்கள் நீங்கும்

வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் நல்ல காலகட்டமாக இருக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அற்புதமான மாற்றம், நம்பிக்கை ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் மாற்றங்களைச் செய்யலாம் என்பது போன்ற விஷயங்களில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் நீங்கும்.

அனுகூலம்

உணவு முறையில் கட்டுப்பாடுகளை வைத்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் பெரிய பாதிப்புகளைச் சந்திப்பதற்கான வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் இருந்து வந்த சங்கடங்கள் அனைத்தும் படிப்படியாக நீங்கும். அசையும், அசையாப் பொருள்கள் சேர்க்கை உண்டாகும். வாகன அமைப்பில் அனுகூலம் ஏற்படும். பிள்ளைகளிடத்தில் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவர்களிடம் வார்த்தைகளை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

வழிபாடு

காது, மூக்கு, தொண்டை, அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை தோறும் தேவிகளை வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். செவ்வாய்க்கிழமை தோறும் மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் சாப்பாடு தானமாக அளிப்பது ஏற்றத்தையும், நன்மையையும் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+