சபரிமலை: பம்பை ஆற்றில் குளிக்கவும், பலி தர்ப்பணம் செய்யவும் அனுமதி
சபரிமலையில் பக்தர்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பம்பை ஆற்றில் குளிக்கவும், பலி தர்ப்பணம் செய்யவும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐயப்ப பக்தர்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் பம்பை ஆற்றில் குளிக்கவும், பலி தர்ப்பணம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் ஐயப்ப பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும். இதற்காக சன்னிதானத்தில் 500 அறைகள் கோவிட் 19 நோய்த்தடுப்பு விதிமுறைகளின்படி தயார்படுத்தப்பட்டுள்ளது
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதை தொடர்ந்து, ஐயப்ப பக்தர்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது தேவசம் போர்டால் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, பம்பையில் இருந்து நீலி மலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் வழியுள்ள வனப்பாதை ஐயப்பன் பக்தர்களுக்காக திறக்கப்படும்.

நீலிமலையிலும், அப்பாச்சி மேட்டிலும் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யும் சிறப்பு முகாம் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சபரிமலை சன்னிதானத்தில் ஐயப்ப பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும். இதற்காக சன்னிதானத்தில் 500 அறைகள் கோவிட் 19 நோய்த்தடுப்பு விதிமுறைகளின்படி தயார்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பக்தர்கள் பம்பை ஆற்றில் குளிக்கவும், பலி தர்ப்பணம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் பம்பை ஆற்றின் நீர் வரத்திற்கு ஏற்ப பக்தர்கள் குளிப்பது, பலி தர்ப்பணம் செய்வது குறித்த விஷயத்தில பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அமைச்சர்கள் மற்றும், தேவஸ்வம் போர்டு நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications