சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு யாருக்குமே கிடைக்காத அதிர்ஷ்டம்.. வெற்றி மேல் வெற்றி
2025 பெயர்ச்சி பலன்கள்: 2025 ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடம். இந்த வருடத்தில் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி அடுத்தடுத்து நிகழ இருக்கின்றன. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த மூன்று பெயர்ச்சிகளும் நடைபெறவுள்ளன. இது ரிஷப ராசிக்கு தரும் பொதுவான பலன்களை இந்த தொகுப்பில் காணலாம்.
குரு பகவான் வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். ராகு - கேது ஒன்றரை வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார்கள். சனி பகவான் சராசரியாக 2.25 வருடத்தில் இருந்து மூன்று வருடத்துக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆவார். இந்த 2025 வருடத்தில் இந்த நான்கு கிரகங்களும் பெயர்ச்சி ஆகவுள்ளன.

மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். மே மாதம் 14 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதைத் தொடர்ந்து மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது ரிஷப ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை காணலாம்.
ரிஷபம்: சனி, குரு, ராகு கேது ஆகிய மூன்று கிரகங்களின் பெயர்ச்சியும் ரிஷப ராசிக்கு அற்புதமாக உள்ளது. 11 ஆம் இடத்தில் சனி, இரண்டாம் இடத்தில் குரு, பத்தாம் இடத்தில் ராகு இருப்பது சிறப்பான அமைப்பாகும். இப்படி ஒரு அமைப்பு ஏற்படுவது மிகவும் அரிது. வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
வெற்றி மேல் வெற்றி வரும்
தொழிலில் இருந்த தொய்வுகள் முழுமையாக நீங்கி வருவாய் பெருகும். பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். நீங்கள் இறங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். அரசு வேலைகளுக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். திருமணத்தில் இருந்த தடைகள் விலகி, திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குலதெய்வ அணுகிரகம் சிறப்பாக இருக்கும். கழுத்தை நெரித்த கடன் சுமை நீங்கும், வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை, புகழ் கிடைக்கும்.
லாபமோ லாபம்
அரசியல்வாதிகளுக்கு இந்த காலத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். பதவிகள் தேடி வரும். தொழில் விருத்தியடையும். பல தொழில் செய்வோருக்கு ராகுவால் நல்ல லாபம் கிடைக்க போகிறது. உயர்கல்வி, போட்டி தேர்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் - மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கலைத்துறையினர் மற்றும் ஊடக துறையை சார்ந்தோருக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் கிடைக்கும். காதல் உறவு வெற்றிகரமாக திருமணத்தில் நிறைவேறும். வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய, ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பீர்கள்.
கவனமாக இருக்க வேண்டிய இடங்கள்: தாய் உறவில் மன சங்கடங்கள் வரும். உடல் நலத்தில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்னைகள் வந்து செல்லும். கல்வியில் கவனம் சிதற வாய்ப்புள்ளது. பள்ளி கல்வியில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். சொத்து, வண்டி, வாகனம் வாங்குவதில் சட்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications