சிகரம் தொடும் மகரம்.. திடீர் அதிர்ஷ்டம், பண வரவு, சொத்து ஒரே குஷிதான்.. தொட்டதெல்லாம் ஜெயம்
பெயர்ச்சி பலன்கள்: ஜோதிடத்தில் சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகளும் நிகழ்ந்துவிட்டன. இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சியும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரக பெயர்ச்சிகள் மகர ராசிக்கு கொடுக்க போகும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
2025 ஆம் வருடம் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வருடத்தில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய 4 முக்கிய கிரக பெயர்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. ஜோதிட ரீதியாக இதை ராஜ கிரகங்கள் என்று சொல்வார்கள். பொதுவாக சனிப்பெயர்ச்சி 2.5 வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது 1.5 வருடங்களுக்கு ஒருமுறையும், குரு பெயர்ச்சி 2 வருடங்களுக்கு ஒரு முறையும் நடைபெறும்.

அதன்படி இந்த வருடம் சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதியும், குரு பெயர்ச்சி மே 14 ஆம் தேதியும், ராகு கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதியும் நிகழ்ந்துள்ளன. சனி பகவான் மீன ராசியிலும், குரு பகவான் மிதுன ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பெயர்ச்சி ஆகியுள்ளனர். அடுத்த 2 வருடங்களில் இது 12 ராசிகளிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.
மாத கிரகங்கள் பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டே இருந்தாலும், நமக்கான நல்லது கெட்டதில் இந்த வருட கிரகங்களின் அமைப்பு மிகவும் அவசியம். அதன் காரணமாக தான் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, இந்த கிரகங்களின் அமைப்புப் பற்றி ஆலோசிக்கிறார்கள். இந்தப் பதிவில் இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகள் மகர ராசியில் ஏற்படுத்த உள்ள தாக்கத்தை விரிவாக பார்க்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்துள்ளது. இதுவரை ஜெயிலில் இருந்தது போன்ற நிலையை அனுபவித்திருப்பீர்கள். இனி விடுதலை உணர்வைப் பெற்றிருப்பீர்கள். மகர ராசிக்கு 3 இல் சனி பகவானும், 6 ஆம் இடத்தில் குரு பகவானும், 8 ஆம் இடத்தில் கேது பகவானும், 2 ஆம் இடத்தில் ராகு பகவானும் இருக்கிறார். உங்கள் ராசிக்கு தொலைத்த நிம்மதி, தூக்கம் இனி கிடைக்கும்.
குரு பார்வை
இதுவரை இருந்து பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து சுபிக்ஷத்தைக் கொடுப்பார். இல்லறம், வாழ்க்கை, குடும்பம், மகிழ்ச்சியை குரு கட்டாயம் கொடுப்பார். ராகு பகவான் சிறு குடைச்சலைக் கொடுப்பார். மோசடி சார்ந்த விஷயங்களில் சிக்குவதற்கான வாய்ப்புள்ளது. ஆனால் குருவின் பார்வை ராகுவுக்கு கிடைப்பதால் அந்த மோசடியில் இருந்து குரு உங்களைக் காப்பாற்றுவார். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்ற தெளிவை குரு கட்டாயம் கொடுப்பார்.
கவனம்
கேது 8 இல் அமர்ந்துள்ளார். அவமானங்கள் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. திட்டமிட்டு நீங்கள் செய்யும் காரியங்ளில் திடீர் அவமானம், அசெளகரியம், பொருள் இழப்பு, களவு போன்றவற்றை செய்வதற்கான வாய்ப்புள்ளது. அரசாங்கப் பிரச்சனை, நெருப்பு காயங்கள், பயணங்களால் விரையச் செலவு, வாகன விரையச் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
பண வரவு
ராகு பகவானுக்கு குரு பார்வை இருப்பதால் பண வரவு உண்டாகும். கடனை அடைப்பீர்கள். உங்கள் தொழில் கூட்டாளிகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு முடிவை எடுத்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. கேதுவுக்கான பெயர்ச்சி ஸ்தலங்களுக்குச் செல்வது, வழிபாடுகளை செய்து கொண்டால் வரும் பாதிப்புகளில் இருந்து சமாளிக்கும் யோகமும், வெற்றியும் உண்டாகும்.
தொழில்
மூன்றுக்குடைய குரு பகவான் ராசிக்கு 6 ஆம் இடத்தில் அமர்ந்து, சொந்த வீட்டை தானாகப் பார்க்கிறார். அதனால் எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்கள், முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உங்கள் முயற்சி, திறமை, உழைப்பு உங்களுக்கு மட்டுமே பயன்படும் பொற்காலமாக இருக்கும். இதன் மூலம் மிகப்பெரிய வெற்றிகளைப் பயன்படுத்துவீர்கள். உங்கள் திறமையை மற்றவர்களுக்குப் பயன்படுத்தினால் அடிமைத் தொழிலில் இருக்கும் நிலைமை உண்டாகும்.
சேமிப்பு, சொத்து
நிறைய சேமிப்புகளை செப்டம்பர் மாதம் முதல் செய்யத் தொடங்குவீர்கள். நகையை மீட்பது, சொத்துகளை மீட்பது, வராத பணம் திரும்ப வருவது, மனத் தெளிவு அடைவீர்கள். பாவியை குரு பார்ப்பதால் பல்வேறு நன்மைகளை அடைவீர்கள். எதிரிகளால் நன்மை ஏற்படும் காலகட்டமாக இருக்கும். சொத்து விஷயங்களில் இருந்து வந்த வழக்கு பிரச்சனைகள், ஆவணப் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். இழுபறியாக இருந்து வந்த வேலைகளைச் செய்து முடிப்பீர்கள்.
பரிகாரம்
மகர ராசிக்காரர்கள் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது. நாமக்கல்லில் இருக்கும் ஆஞ்சநேயரையும், நரசிம்மரையும் வழிபடுவது மேன்மையைக் கொடுக்கும். அனுமன் சாலிஷா சொல்லிக் கொண்டே இருப்பது நன்மை பயக்கும்.












Click it and Unblock the Notifications