சனியால் ஏற்படும் சங்கடங்கள் தீர ஜெயமங்கள சனீஸ்வரரை வேண்டுவோம்
சனிதசை, சனி புத்தியால் பாதிப்பு ஏற்படுபவர்கள், ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனியால் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளவர்களும் ஜெயமங்கள சனீஸ்வரரை வேண்டிக்கொள்ளலாம்.
ராணிப்பேட்டை: வாலாஜா தன்வந்திரி பீடத்தில் நாளை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சனிசாந்தி ஹோமம் அபிஷேகம் நடைபெறுகிறது. பஞ்சமி திதியை முன்னிட்டு மாலையில் பஞ்ச முக வராஹி ஹோமம் நடைபெற உள்ளது. மனநோய் உடல் நோய் தீர்க்கும் மருதாணி கொண்டு மகா தன்வந்திரி ஹோமம். 20.12.2020 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.
யாகங்களில் பங்கேற்பதன் மூலம் மன நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும். நோய்கள் தீரும் தீராத பகை விலகும் என்பது நம்பிக்கை. வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் குடும்பத்துடன் அருள் பாவிக்கும் ஜெய மங்கள சனிஸ்வரரை வேண்டி சனிதிசை, சனிபுக்தி கண்டச்சனியால் பாதிப்பு குறையவும்.சனி சாந்தி ஹோமம் சனீஸ்வரருக்கு தைலாபிஷேகம் மற்றும் பாதாள ஸ்வர்ண சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிட்டவும் நண்பர்களால் அதிக உதவிகள் வந்து சேரவும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கவும் உடல் நலத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறவும் இந்த யாகத்தில் பங்கேற்கலாம்.
இதே போல சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு பஞ்சமி திதி முன்னிட்டு தன்வந்த்ரி பீடத்தில் ஒரே கல்லில் ஆன சூலினி, காளி, வராஹி, திரிபுர பைரவி ஆகிய ஐந்து சக்திகளுடன் பஞ்ச முக வராஹியாக அருள் பாவிக்கும்அன்னையை வேண்டி நடைபெறும் பஞ்ச முக வராஹி ஹோமத்தில் பங்கேற்று பலவகையான நன்மைகள் பெற வேண்டுகிறோம்.
அன்னையின் சூட்சம வடிவத்தின் ரகசியம் முப்பிறவி கர்மாக்களை அழித்து நம்மை காப்பவள். நாம் எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேற செய்பவள். வாக்கு பலிதம் ஏற்படும், எதிரிகள் ஓடி ஒளிவார்கள், விரோதிகள் நண்பர்களாவர், செய்வினை மாந்திரிக தோஷங்கள் அகலும், துர்தேவதைகள் அண்டாது. வாழ்வில் வெற்றி அனைத்தும் கிடைக்கும்.
நல்லெண்ணங்களும் நன்னடத்தையையும் கொண்டவர்களுக்கு அகிலம் அனைத்தையும் காக்கும் பராசக்தி தேவி அனைத்தையும் வழங்கி நல்லருள் புரிகிறாள். தொழில், வியாபார வழியில் ஏற்படும் எதிர்ப்புகள், எதிரிகள் என அனைத்தும் ஒழியும். மேலும் எதிரிகளால் செய்யப்படுகின்ற செய்வினை, மாந்திரீகம் ஏவல்கள் மற்றும் துஷ்ட சக்திகளின் பாதிப்புகளிலிருந்து விடுதலை கிடைக்கும். வாராகி அம்மனின் பூரணமான கடாட்சம் உங்களுக்கு கிடைக்கச் செய்யும். நெடுநாள் நோய்கள் குணமாக தொடங்கும். தைரியம், தன்னம்பிக்கை, பயமின்மை போன்ற குணங்கள் உண்டாகும். எதிர்பாரா விபத்துக்கள், ஆபத்துகள் ஏற்படாமல் காக்கும்.
மனநோய் உடல் நோய் தீர்க்கும் மருதாணி கொண்டு மகா தன்வந்திரி ஹோமம். 20.12.2020 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு வாலாஜா தன்வந்திரி பீடத்தில் உயர்மருத்துவ குணம் கொண்ட மருதாணி சமித்து,மருதாணி பூ, மருதாணிக்காய் மருதாணி பட்டை, மருதாணி வேர் ஆகிய பஞ்ச திரவியங்கள் கொண்டு மனநோய் உடல்நோய் தீர மாபெரும் தன்வந்திரி ஹோமம் நடைபெறுகிறது.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஹோம பூஜை வைபவங்களில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அழைக்கின்றனர். தொடர்புக்கு 9443330203.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications