மேஷ ராசியின் ஆட்டம் ஆரம்பம்.. 2 1/2 ஆண்டில் வாழ்க்கையே மாறப்போகுது.. அதிர்ஷ்டம் கொட்டும்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி வரும் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மேஷம் ராசியினருக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.
நீதிமான், கர்மக்காரகன், முடவன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கு ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். மேஷம் ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்பட போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம் - மேஷ ராசியினருக்கு விரைய ஸ்தானத்துக்குப் போய் சனி பகவான் அமரப் போகிறார். 12 ஆம் இடம் என்பது விரைய ஸ்தானம். இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், மனை மாற்றம் அல்லது நீங்களே மாறும் வாய்ப்பு உண்டு. ஏழரை சனி என்ற உடன் அச்சப்படத் தேவையில்லை. ஏழரை சனி காலத்தில் தான் திருமண யோகம் உண்டாகும். திருமணம் நடக்கும். இடமாற்றம் உண்டாகும். கடன் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். ஊரை விட்டு வெளியில் போகும் வாய்ப்பு உருவாகும். நீங்கள் செய்யும் முயற்சிகளில் முதல் முறை தோல்வியும் இரண்டாம் முறை வெற்றியும் உண்டாகும்.
சேமிப்பில் கவனம்
கால் பாதத்தில் வரும் பிரச்சனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விரைய ஸ்தானத்தில் சனி இருப்பதால் சேமிப்புகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த சனிப்பெயர்ச்சி காலகட்டம் உங்களுக்கு அருமையானதாக இருக்கும். இந்த மாதிரி நிலை இருக்கும்போது யாருடைய உதவியாவது கட்டாயம் கிடைக்கும். உங்களுடைய கிளையில் இருந்து வேறு கிளைக்கு மாற்றம் ஏற்படும்.
உத்தியோகம்
உத்தியோகம் மாறும். ஒரு உத்தியோகத்தில் இருந்து புதிய உத்தியோகத்துக்குச் செல்லும் பிராப்தம் உண்டாகும். ஊரைவிட்டு தள்ளியோ, வெளிநாட்டிலோ, வெளியூரிலோ, கடல் பிரதேசத்தின் அருகிலோ அல்லது கடல் தாண்டி வேலை செய்யும் யோகம் உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பிஆர் கன்ஃபார்ம் ஆகும் வாய்ப்புள்ளது.
மாலை வேலை யோகம் கொட்டும்
சனியின் காரகத்துவம் என்பது இருட்டு. மாலை 6 மணிக்கு மேல் செய்யும் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும். மாலை உணவகங்கள் ஆரம்பிப்பது போன்ற அனைத்து விஷயங்களும் முன்னேற்றம் உண்டாகும். இரவு நேர வேலைகளான பிபிஓ போன்ற துறைகளில் நல்ல வேலை அமையும். அதிக முதலீடு மற்றும் கடன் வாங்குவதற்கான யோகங்கள் உண்டாகும்.
செலவுகள் உண்டாகும்
வீட்டில் தலைப் பிள்ளையாக இருக்கும் மேஷ ராசியினர் செலவு செய்யும் யோகம் உண்டாகும். உங்களுக்கு அருமையான காலகட்டமாக இருப்பதால் சுப செலவுகளால் எந்தவித பிரச்சனைகளையும் ஏற்படாது. இடமாற்றம், தொழில் மாற்றம் நல்ல வெற்றியை உங்களுக்கு கட்டாயம் தரும். வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் தரும் காலகட்டமாக இருக்கும்.
எதில் கவனம் தேவை?
கால் பாத விஷயங்களில் எச்சரிக்கை தேவை, கடன் கொடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். எதாவதொரு இடத்தில் காப்பீடு அல்லது இஎம்ஐ செலுத்தும் வகையில் கடனை வைத்துக் கொள்வது நல்லது. எந்தவொரு விஷயத்தையும் வெளியில் வெளிப்படையாக சொல்லாமல் இருப்பது நல்லது. திருஷ்டி போன்ற விஷயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் மிகைப்படுத்தி பேசாமல் இருப்பது நல்லது. குருவின் வீடு என்பதால் தசை பிடிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ரத்தம் போன்ற டெஸ்ட் எடுக்கும் சூழல் ஏற்படும். அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கும் சூழல் ஏற்படும்.
பரிகாரங்கள்
மாலை 6 மணிக்கு மேல் யாராவது வீட்டிற்கு வந்தால் எலுமிச்சை சாதத்தை தானமாக கொடுப்பது நல்ல பலன்களைத் தரும். அல்லது ஒருமுறையாவது மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று மஞ்சள் பட்டு தானம் செய்வது நல்லது.
100க்கு எவ்வளவு மதிப்பெண்
பணம் காசு விஷயங்களில் இந்த சனிப்பெயர்ச்சியில் 80 சதவீதம் நன்றாக இருக்கும். சந்தோஷம், ஆரோக்கியம் போன்ற விஷயங்களுக்கு 60 சதவீதம் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications