சனிப்பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொட்டி கொடுக்கும் சனி பகவான்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா
சனிப்பெயர்ச்சி: திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்களைக் கொடுக்கப் போகிறார். எந்த ராசியினர் சனிப்பெயர்ச்சியில் யோக பலன்களை அனுபவிக்கப் போகின்றனர், என்ன நற்பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாறும். இந்த ராசி மாற்றம் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர் சனி பகவான். சனி கெடு பலன்களை மட்டுமே தருமா என்றால் இல்லை. நாம் செய்த பாவ புண்ணியங்களக்கு ஏற்ப சுப பலன்களையும், கெடு பலன்களையும் தரக்கூடியவர்.

நீதியின் கடவுளான சனி பகவான் ஒருவரின் செயலுக்கு ஏற்ப பலன்களைத் தருவதால் மிகவும் கடுமையான கிரகமாக கருதப்படுகிறார். சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுவார். ஒவ்வொரு ராசியிலும் அதிக நாட்கள் இருப்பதால் சனியின் தாக்கமானது அதிகமாக இருக்கும். எந்த ராசியில் சனி பகவான் இருந்தாலும் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனி பகவான் வரும் மார்ச் 29 ஆம் தேதி மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். சனியின் இந்த பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை பாதிப்பை ஏற்படுத்தினாலும், 3 ராசிக்காரர்களுக்கு மங்களகரமான சுப பலன்களை அளிக்கும். நற்பலன்களை அனுபவிக்கப் போகும் மூன்று ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
துலாம் - துலாம் ராசியின் 6 ஆம் வீட்டில் சனிப்பெயர்ச்சி நிகழ்வதால் உங்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படும். நிலுவையில் இருக்கும் பணிகள் நிறைவடைந்து புதிய உயரங்களை அடைவீர்கள். பணியிடத்தில் உங்களுடைய வேலைகளால் பாரட்டப்படுவீர்கள். புதிய பொறுப்புகள் வந்து சேரும். நீண்டநாள்களாக உடல்நலப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தவர்கள் அதில் இருந்து விடுதலை அடையக்கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் சொத்து அல்லது பிற தகராறுகள் தீர்க்கப்படும். போட்டி தேர்வுத் தயாராகி வருபவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கைகூடி வரும். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு முன்னேற்றமான காலமாக இருக்கும்.
ரிஷபம் - சனி பகவான் ரிஷப ராசிக்காரர்களின் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். 11 ஆம் வீடு என்பது செல்வத்தையும், வெற்றியையும் குறிப்பதாகும். நிதி ஆதாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சமூக தொடர்புகள் அதிகம் ஏற்படும். பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் தேடி வருவதற்கான வாய்ப்புள்ளது. குடும்பத்தினர் நண்பர்களுடன் உறவு வலுப்பெறும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உணவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இந்த சனிப்பெயர்ச்சி நல்ல பலன்களை தரும் காலகட்டமாக உங்களுக்கு இருக்கும்.
கடகம் - கடக ராசிக்காரர்களின் 9 ஆம் வீட்டில் சனி இருப்பதால் நிறைய அதிர்ஷ்டம், முன்னேற்றம் உண்டாகும் காலகட்டமாக இருக்கும். பழைய பிரச்சனைகளில் இருந்து விடுதலை அடைவீர்கள். அதிர்ஷ்டம் மற்றும் முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய கனவுகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பொறுமை மற்றம் நிதானத்தை கடைப்பிடித்தால் உழைப்பில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. பெற்றோரிடம் உங்களுக்கு ஆதரவு பெருகும். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மகிழ்ச்சி மற்றும் லாபத்தை தரும் காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications